Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

##~##

''மை டியர் ஜீபா... மிளகாய் அரைக்கும்போது நெடியில் இருந்து தப்புவதற்கு என்ன செய்யலாம்?''

-செ.சுர்ஜீத்குமார், செய்யாறு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மூன்று வழிகள் இருக்கு. இதில் உனக்கு எது சுலபமோ, அதை ஃபாலோ பண்ணு சுர்ஜீத்...

1. யாரையாவது சமாதானம் செய்யப் புகழ்ந்து பேசி ஐஸ் வைப்போம். அந்த மாதிரி, மிளகாய் மீது ஐஸ் வைத்து, அரைக்கலாம். 2. மிளகாயுடன் மல்லுக் கட்டுவதற்குப் பதில், கர்ச்சீப்பை எடுத்து நம் மூக்கைக் இறுக்கமாகக் கட்டி சேஃப்டி செய்யலாம். 3. அரைவைக் கடைக்கு அனுப்புவதற்காக அம்மா மிளகாயை எடுக்கும்போதே, சத்தம் காட்டாமல் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகிவிடலாம்.''

''ஹாய் ஜீபா... நீ எவ்ளோ குண்டா இருக்கே... (கோவிச்சுக்காதே) நான் எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாகவே மாட்டேங்கிறேன். அதுக்கு என்ன செய்யணும்?''

- கே.ஜெ.சபரி மணிகண்டன், அவினாசி

''நிறையச் சாப்பிட்டால் மட்டும் குண்டாகிவிட முடியாது சபரி. அப்படியே குண்டாக மாறினாலும், அது அணு'குண்டு’ மாதிரிதான். எந்த நேரத்திலும் ஆபத்தை உண்டாக்கும். ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டாலே போதும். என்னை குண்டு என்று சொன்னாலும் கோவிச்சுக்க மாட்டேன். ஏனெனில், நான் குண்டாக இருப்பது இயற்கையே ஏற்படுத்திய விஷயம். இயற்கைக்கு மாறாக, நான் ஜிம்முக்குப் போய், சைக்கிளிங் எல்லாம் செஞ்சு ஒல்லியாக உன் முன்னாடி வந்து நின்றால், 'என்னது நீ ஜீபாவா... சீ போ!’னு சொல்லிடுவே.''

மை டியர் ஜீபா !

''ஹாய் ஜீபா... மிச்சம், மீதி இரண்டும் ஒன்றுதானே... பிறகு ஏன் 'மிச்சம் மீதி’ வைக்காமல் சாப்பிடு என்று சொல்றாங்க?''

  -ம.நாராயணன், சென்னை-15.

''அதானே... இப்படி 'தப்பும் தவறுமா’ வார்த்தைகளைச் சொன்னால், நம் தமிழுக்குத்தானே 'குற்றம் குறை’ ஏற்படும். ஒரு வேளை இப்படி இருக்குமோ... மிச்சம் என்பது நான்கு எழுத்து, மீதி என்பது இரண்டு எழுத்து. நிறைய வெச்சுட்டா அது மிச்சம். அந்த மிச்சத்திலும் பாதி குறைந்தால் அது மீதி. அதனால், இனி மேல் நீ சாப்பிடும்போது கொஞ்சம் மீதி வெச்சாலும் பரவாயில்லை... ஆனால், நிறைய மிச்சம் வெச்சுடாதே நாராயணா!''

''ஹலோ ஜீபா... எந்த மாதிரியான புத்தகங்கள், மாணவர்களுக்கு ஊட்டச்சத்தாக இருக்கும்?''

- வீ.மகேஸ்வரி, அய்யம்பாளையம்.

''ஆரோக்கியமான வாழ்வுக்கு அற்புத வழிகள், இனிக்கும் இயற்கை உணவுகள், கலக்கும் கீரை வகைகள், ஊட்டம் அளிக்கும் உணவு வகைகள் இப்படிப் பல தலைப்புகளில் நிறையப் புத்தகங்கள் இருக்கு மகேஸ்வரி. ஆனால் ஒன்று, இந்தப் புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது, அதன்படி நடக்கணும். அப்போதுதான் ஊட்டச்சத்து இருக்கும். இல்லை என்றால், புத்தகத்தைத் தூக்குவதற்குக்கூட ஊட்டம் இல்லாமல் போய்விடும்.''

'''ஹாய் ஜீபா... என் நண்பன் சமீபத்தில் ஒரு வாட்டர் ப்ரூஃப் வாட்ச் வாங்கினான். அதில் வாட்டர் ப்ரூஃப் எப்படி செயல்படுது?''

    -பி.முரளி, திருப்பூர்.

''வாட்டர் ப்ரூஃப் என்பது கடிகாரத்தில் இருக்கும் தனிப்பட்ட பொருள் கிடையாது முரளி. அந்த கைக் கடிகாரத்தில் எந்த வகையிலும் ஒரு துளி தண்ணீரும் புகாத வகையில் சுற்றிலும் சீல் செய்யும் முறை ஆகும். அதற்கு ஏற்ற வகையில் கடிகாரத்தின் உள் மற்றும் மேல் பகுதிகள் நுணுக்கமாக வடிவமைக்கப்படும். அதனால்தான் 'இது வாட்டர் ப்ரூஃப் வாட்ச்’ என்று பெருமையுடன் சொல்லிக்கிறாங்க. உன் நண்பன் வைத்து இருப்பது அந்த வகைக் கடிகாரம்தான்.''