Published:Updated:

சமைக்காமலே சாப்பிடலாம் !

கொத்தமல்லி ஜூஸ் !ந.வினோத்குமார் பொன்.காசிராஜன்

 ##~##

இவற்றை எடுத்துக்குங்க:

கொத்தமல்லி - 2 கட்டு
தேங்காய் - 1
பேரீச்சை - 5
நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
மிளகுப் பொடி - 4 டீஸ்பூன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி செஞ்சுக்குங்க:

ஹாய் சுட்டீஸ்... இந்த முறை கொத்தமல்லிஜூஸ் செய்யப்போகிறோம். முதலில் கொத்தமல்லிக் கட்டை தண்ணீரில் நன்கு அலசுங்கள். பிறகு, மிக்ஸியில் போட்டு அடிச்சுச் சாறு எடுக்க வேண்டும். அதைத் தனியா எடுத்துவெச் சுக்குங்க. பிறகு, தேங்காயைத் துருவி, தேங்காய்ப் பாலை எடுத்துக்குங்க. அப்புறம் பேரீச்சைப் பழங்களை இடிச்சுவெச்சுங்குங்க. கொஞ்சம் மாவு பதத்தில் அது இருக்கணும். அதனுடன் நாட்டுச் சர்க்கரையைக் கலந்துக்குங்க.

சமைக்காமலே சாப்பிடலாம் !

கொத்தமல்லி ஜூஸை மட்டும் எடுத்து அப்படியே குடிச்சா, கொஞ்சம் காரம் தெரியும். இது பலருக்கும் பிடிக்காது. 'அய்யோ ரொம்பக் காரமா இருக்கு’னு பாதியிலேயே வெச்சுடுவாங்க. அதனால், பேரீச்சை பேஸ்ட்டைக் கொஞ்சம் எடுத்துக் கொத்தமல்லி ஜூஸ் உடன் கலந்துக்கொண்டால், காரம் தெரியாது. அப்படியும் வேண்டாம்னு சிலர் சொல்லலாம் அதுக்குத்தான் இருக்கவே இருக்கு தேங்காய்ப் பால். இந்தத் தேங்காய்ப் பாலைக் கொத்தமல்லி ஜூஸ் உடன் கலந்துக்கொண்டால், சுத்தமாகக் காரமே இருக்காது. அவ்வளவுதான், கொத்தமல்லி ஜூஸ் ரெடி!

சமைக்காமலே சாப்பிடலாம் !

தேவைப்பட்டால், மிளகுப் பொடியைக் கொஞ்சம் சேர்த்துக்கலாம். இருமல், சளி பிரச்னை இருக்கிறவங்களுக்கு இந்த ஜூஸ் இயற்கை மருந்தாக இருக்கும். ரத்தம் சுத்தமாகும். ஜீரண சக்தியைக் கொடுக்கும். தசைகள் வலுப்பெறும். வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்றவையும் இதில் அதிகம் இருக்கு. அப்புறம் என்ன... கொத்தமல்லி ஜூஸ் குடிங்க... தெம்புடன் போய் விளையாடுங்க!