Published:Updated:

சுட்டி மனசு !

தொகுப்பு: எஸ்.ஷக்தி,ம.சபரி, எஸ்.அனுசத்யாபடங்கள்: மகா.தமிழ்ப் பிரபாகரன், கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

  கோதீஸ்வரி, 3-ஆம் வகுப்பு, தர்மபுரி.

சுட்டி மனசு !
 ##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எனக்கு எப்பப் பார்த்தாலும் அம்மா ஏதாவது ஒரு வேலை வைக்கிறாங்க. சமையலுக்கு உதவி செய்யச் சொல்றாங்க. காட்டுல விவசாயம் செய்ற தாத்தாவுக்கு, நான்தான் சாப்பாடு கொண்டுபோகணும். தாத்தா வேலை செய்ற காடு, ரொம்பத் தூரம். அவருக்கு சாப்பாடு கொடுத்த பிறகுதான் பள்ளிக்கூடம் போக முடியும். அதனால், நான் நெறைய நாட்கள் லேட்டாத்தான் போவேன்.  ஆசிரியர்கள், நான் லேட்டா வர்றதுக்கான காரணம் தெரிஞ்சு, சில சமயம் ஆறுதலாப் பேசுவாங்க. ஆனா, பல சமயம் திட்டுவாங்க. இதுதான் எனக்குப் பெரிய பிரச்னை. இதனால, என்னால் தினமும் விளையாடக்கூட முடியலை. விளையாடக் கிளம்பினா, அம்மா திட்டுறாங்க. இல்லேன்னா, எதாவது வேலை வைக்கிறாங்க.''  

ராக மிருத்திகா, யு.கே.ஜி, கோவை.

சுட்டி மனசு !

''போன வாரம் என் ஃப்ரெண்டோட பர்த்டே பார்ட்டிக்காக அவங்க வீட்டுக்குப் போய் இருந்தோம். கேக் வெட்டின பிறகு, அவங்க ஃப்ளாட்டை எனக்குச் சுத்திக் காண்பிச்சா. அவங்க வீட்டு பிளாஸ்மா டி.வி, மினி ஏர் கூலர், புஸு புஸ¨ன்னு இருக்கிற சோஃபா செட், எல்லாமே எனக்கு அவ்ளோ பிடிச்சு இருந்துச்சு. வீட்டுக்கு வந்ததும், 'அதே மாதிரி நாமளும் வாங்குவோமா’?னு கேட்டேன். 'நம்ம வீட்டு டி.வி.க்கு என்ன? இந்த சோஃபா நல்லாத்தானே இருக்கு’னு அப்பா திட்ட ஆரம்பிச் சுட்டார். இது எல்லாம் ஒரு தப்பா அங்கிள்? இதே மாதிரிதான் போன மாசம், என்னோட கசின் வீட்டுல இருந்த பொமரேனியன் பப்பியைக் கேட்டப்பவும் திட்டு விழுந்துச்சு. எங்க வீட்டுலயும் எனக்குப் பிடிச்ச மாதிரி எல்லாம் இருக்கணும்னு ஆசையா இருக்குது. இதே மாதிரி எனக்குப் பிடிச்ச பேனா, பென்சில், நோட்டுக்கும் இப்பிடித்தான் சொல்வாங்களோன்னு பயமா இருக்குது அங்கிள்!''

விஷிஷ், 2-ஆம் வகுப்பு, மதுரை.

சுட்டி மனசு !

''எனக்குப் பிரச்னையே ஸ்கூல் பேக்தான் அங்கிள். எதுக்கு எல்லா புக்ஸையும் கொண்டுவரச் சொல்றாங்களோ தெரியலை. அன்னிக்கு அந்த பீரியடே இருக்காது. ஆனா, கொண்டுபோகணும். கொண்டுபோகலைன்னா, திட்டுவாங்க. பையைத் தூக்கிக்கிட்டு நடக்கவே முடியலை அங்கிள். மாடியில் ஏற முடியாம ரொம்பக் கஷ்டப்படுவேன். என்னை மாதிரி பசங்க எப்பிடித்தான் பஸ்ஸுல ஏறி இறங் குறாங்களோ தெரியலை. வடிவேலு அங்கிள் மாதிரி 'வ்வ்வ்வ்’னு அழணும்போல இருக்கு. எனக்கு ஹேண்ட் ரைட்டிங் நல்லா வராதுன்னு மிஸ் திட்டுறாங்க. அம்மா, அப்பாகிட்டேயும் கம்ப்ளைன்ட் பண்றாங்க. நான் செகண்ட் ஸ்டேண்டர்டுதானே  படிக்கிறேன்? ஹோம் வொர்க் எழுதி எழுதியே கை வலிக்குது. இதுல எங்கே இருந்து ஹேண்ட் ரைட்டிங் வரும்? நீங்களே சொல்லுங்க அங்கிள்!''

ஹரிஹரசுதன், 3-ஆம் வகுப்பு, காரைக்குடி.

சுட்டி மனசு !

''எனக்கு மேத்ஸ்தான் அங்கிள் பிரச்னை. போடவே வராது. காலையில் எழுந்ததும் பல் தேய்ச்சுட்டு, கொஞ்ச நேரம் விளையாடணும்னு தோணும். ஆனா, அம்மா விட மாட்டாங்க. 'ஹரி குளிக்கப் போ, ஹரி குளிக்கப் போ’னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அப்புறம், ஸ்கூல் போயிட்டு வர்றதே பெரிய விஷயம். டியூஷன் போகணும், பாட்டு கிளாஸ், வீணை கிளாஸ், இது மட்டுமா... கராத்தே கிளாஸ் வேற. பிடிக்கவே இல்லை. ஒரே டயர்டா இருக்கும். அப்புறம், எனக்கு இருட்டுனாலே ரொம்பப் பயம். ஒன் பாத்ரூம் போறதுனாக்கூட, என் தம்பியைத்தான் கூட்டிட்டுப் போறேன். அவ்ளோ பயம்!''