Published:Updated:

சுட்டி விஞ்ஞானி

ஒளி தரும் களை !பி.அற்புதராஜ்எஸ்.தேவராஜன்

##~##

இன்று தமிழக அரசுக்கு சவாலாக இருக்கும் பிரச்னை மின்சாரம். இதற்குத் தீர்வாக, தேவை இல்லாத செடி எனப்படுகிற பார்த்தீனியம் செடியில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்கலாம் என்கிறார் தினேஷ்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது காங்கேயனூர் என்ற சிறிய கிராமம். இங்கே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறார் தினேஷ். இவர் அப்பா ஒரு கூலித் தொழிலாளி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மூலமாக ஒவ்வோர் ஆண்டும் இளம் விஞ்ஞானிகளைத் தேர்ந்து எடுப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு எங்கள் பள்ளியின் சார்பாக நான் தேர்வு செய்யப்பட்டேன். எங்கள் அறிவியல் ஆசிரியர் ஒருமுறை மரம், செடிகளில் இருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று பாடம் நடத்தினார். எங்கள் ஊரின் காட்டுப் பகுதிகளில் பார்த்தீனியம் செடிகள் புதர் போல மண்டிக் கிடக்கும். இதில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா என்று யோசித்து முயற்சி செய்தேன். இந்த ஆராய்ச்சியை முதலில் மாவட்டம் சார்பாக நடந்த கண்காட்சியிலும், பிறகு மாநிலம் சார்பாகத் தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியிலும் செய்து காட்டினேன். உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கைகளால் தங்க மடலும், சான்றிதழும் வாங்கினேன்'' என்கிறார் தினேஷ்.

''எந்த ஒரு விஷயத்தையும் சரியாகப் புரிந்துகொண்டு செய்பவன் தினேஷ்'' என்று பெருமிதத்துடன் சொல்கிற அறிவியல் ஆசிரியர் மரிய ஜோசப், தொடர்கிறார்...

சுட்டி விஞ்ஞானி

''அவனுக்குச் சொல் புத்தியைவிட சுய புத்தி அதிகம். வகுப்பில் நடக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களைக் கேட்டு தெரிந்துகொள்வதைவிட, அவனே செய்து பார்த்துவிடுவதில் ஆர்வம் காட்டுவான். அப்படித்தான்   செடியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது எப்படி என்ற பாடத்தை நடத்தினேன். அதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டான். 40 சதவீதம் விவசாயத்தைக் கெடுக்கும் பார்த்தீனியத்தை அழிக்க வேண்டும் என்று சட்டமன்றத் தில் அறிவித்த செடியில் இருந்தே மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்து இருக்கிறான்'' என்கிறார்.

சுட்டி விஞ்ஞானி

தற்போது சிறிய அளவில்  மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனது கண்டுபிடிப்பை விரிவுபடுத்திப் பெரிய அளவில் மின் உற்பத்தி செய்யும் முயற்சியில் தினேஷ் ஈடுபட்டு உள்ளார்.

சுட்டி விஞ்ஞானி

''கூலித் தொழிலாளிகளான நாங்கள் காலையில் வேலைக்கு போனால், மீண்டும் இரவுதான் வீட்டுக்கு வருவோம். ஏழ்மையான எங்களால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தோம். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அந்த எண்ணத்தை எங்கள் மகன் மாற்றிவிட்டான். அவனோட இந்தக் கண்டுபிடிப்பு வருங்காலத்தில் நாட்டுக்குப் பயன்படும் வகையில் இருக்கணும்'' என நெகிழ்கின்றனர் தினேஷின் பெற்றோர் மணிபாலனும் இந்திராவும்.

சுட்டி விஞ்ஞானி

''இது ஆரம்பம்தான். எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பொருள்களில் இருந்து நிறைய விஷயங்களைத் தயாரிக்க வேண்டும். அது எல்லோருக்கும் குறைந்த விலைகளில் கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும். இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்'' என்று சொல்கிற தினேஷ் குரலில் தன்னம்பிக்கை மிளிர்ந்தது!