Published:Updated:

படித்தோம்...படிக்கவைத்தோம் !

உலகப் புத்தகத் தினத்தில் சுட்டி ஸ்டார்ஸ் ஊன்றிய விதை !விகடன் டீம்

##~##

உலகின் மிகச் சிறந்த நண்பன் புத்தகம். தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றின் அதீத வளர்ச்சியால், பலரும் அந்த நல்ல நண்பனை தொலைத்துக்கொண்டு இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் உலகப் புத்தகத் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக 'படித்தோம்... படிக்கவைத்தோம்’ என்ற குறிக்கோளுடன் சுட்டி விகடனும் தனது சுட்டி ஸ்டார்களுடன் களத்தில் இறங்கியது.

உலகப் புத்தகத் தினமான ஏப்ரல் 23-ல் தமிழகம் முழுவதும் உள்ள நமது சுட்டி ஸ்டார்கள் ஒவ்வொருவரும், தங்கள் நண்பர்கள் இருவரை அழைத்துகொண்டு, தங்கள் பகுதியில் இருக்கும் நூலகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வாசித்தார்கள். இதனால், புத்தகம் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்ட அந்த நண்பர்கள், அடுத்தடுத்த நாட்களில் புதிதாக சில நண்பர்களைப் புத்தகம் படிக்க அழைத்து வருவதாக உறுதி கூறினார்கள். ''இதுவரை ஸ்கூல் புக் மட்டுமே படித்துக்கொண்டு இருந்தோம். இன்றைய நாள் எங்களுக்குப் புதிய அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. இனி ஓய்வு கிடைக்கும் நேரத்தில் நூலகத்துக்கு வருவோம். எங்கள் நண்பர்களையும் அழைத்து வருவோம்'' என்றார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாருங்கள் சுட்டிகளே படிப்போம்... படிக்கவைப்போம்! வாசிக்கும் பழக்கத்தை ஓர் இயக்கமாக மாற்றுவோம்!

படித்தோம்...படிக்கவைத்தோம் !
படித்தோம்...படிக்கவைத்தோம் !
படித்தோம்...படிக்கவைத்தோம் !