Published:Updated:

பென் டிரைவ் !

சி.தாமரை, ஸ்ரீ விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம்.

பென் டிரைவ் !

டத்திற்கு ஏற்ப தன் உடலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியைப் போல, தட்பவெப்ப நிலைக்கு ஏற்பத் தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது, மத்திய ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஊலூரூ (Uluru) குன்று.

சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய, உலகிலேயே மிகப் பழமையான குன்றுகளில் ஒன்று. இது, 318 மீட்டர் உயரமும் அடிப் பாகத்தில் 8 கி.மீ சுற்றளவும்கொண்டது. சூரிய உதயத்தின்போதும், மறைவின்போதும், சூரியக் கதிர்கள் இந்தக் குன்றின் மீது படும்போது, ஊதா மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் தகதக என ஜொலிப்பது கண்கொள்ளாக் காட்சி. காலையில் இருந்து மாலை வரை சூரியனின் வெப்பநிலை மாற மாற, குன்றின் நிறமும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, ஊதா என மாறி மாறிப் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பென் டிரைவ் !

சீனாவைச் சேர்ந்த 49 வயது        ஜூ கேஃபெங் (ஞீலீu ரிமீயீமீஸீரீ) கடந்த 10 வருடங்களாக இரும்பு உலோக பாகங்களைக்கொண்டு ரோபோக்களைச் செய்துவருகிறார். இது அந்தப் பகுதி மக்களிடம் நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது. அதனால் இதை முழுநேர வேலையாக எடுத்துக்கொண்டு, சமீபத்தில் கார் மற்றும் இயந்திரங்களின் உதிரிப் பாகங்களால் 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படத்தில் வரும் பிரமாண்ட மெட்டல் ரோபோ கேரக்டர்களை உருவாக்கி, ஒரு பொழுதுபோக்குப் பூங்காவை அமைத்துள்ளார் கேஃபெங். இதற்காகத் தன் வீட்டையும் விற்றார். இந்த டிரான்ஸ்ஃபார்மர்ஸ் பூங்காவைப் பார்க்கச் சுட்டிகள் ஆர்வத்துடன் வருகிறார்கள். இன்னும் 600 ரோபோக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் கேஃபெங்.  

பென் டிரைவ் !

 ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் இப்போது என்ன செய்கிறார்?’

ஹாரி பாட்டரின் உலகத்தைக் கண் முன்னே கொண்டுவரக்கூடிய என்சைக்ளோபீடியாவை எழுதி வருகிறார். இதை எழுதி முடிப்பதற்கு நீண்ட நாட்கள் தேவையாம். ஆனாலும் முழு மூச்சுடன் இயங்கி வருவதாக ரௌலிங் சொல்கிறார்.

ஹாரிபாட்டர் என்சைக்ளோபீடியா மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் தொண்டுப் பணிகளுக்கே அளிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார் ரௌலிங்.

பென் டிரைவ் !

மீபத்தில் இந்தியன் தாத்தா ஒருவர், கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்று இருக்கிறார். டெல்லியைச் சேர்ந்த 70 வயதாகும் ஹர் பிரகாஷ் ரிஷி, தன் உடலில் உலக நாடுகளின் கொடிகளை 'பச்சை’ (Tattoo) குத்திக்கொண்டு உள்ளார். 305 நாடுகளின் கொடிகள், 185 வரைப் படங்கள் உட்பட, 2,985 உருவங்களைத் தன் உடம்பில் பச்சை குத்திக்கொண்டு, கின்னஸ் சாதனை படைத்து இருக்கிறார் இந்த டாட்டூ தாத்தா.