Published:Updated:

சுட்டி ஸ்டார்ஸ் !

சுட்டி ஸ்டார்ஸ் !

பலே பேரிஜம் !

##~##

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... கோடைக் காலம் வந்தாலே குளுகுளு இடங்களைத் தேடி ஓடுவோம். நானும் அப்படித்தான் குடும்பத்துடன் கொடைக்கானல் போய் இருந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொடைக்கானல் என்றாலே கோக்கர்ஸ் வாக், ஏரி, பொட்டானிக்கல் கார்டன், பில்லர் ராக்... இவைதான். ஆனால் பில்லர் ராக் முடியும் இடத்தில் தொடங்குகிறது 'பேரிஜம்.’ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காடு. பறவைகள், வித்தியாசமான விலங்குகள். செல்ஃபோன் டவர் கிடையாது. இங்கே செல்வதற்கு, மாவட்ட வனத் துறை அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். நாங்கள் அந்த அனுமதியுடன் மூன்று நாட்கள் தங்கினோம்.

பேரிஜம் பகுதியில் வீடுகள் மின்சாரம் இல்லாமல் இரண்டே அறைகளுடன் இருந்தன. சமைக்க அடுப்பு, எரிவாயு எதுவுமே கிடையாது. எல்லாவற்றையும் நாங்களே எடுத்து சென்றோம். பேரிஜத்தில் 3 கி.மீ நீளம், 59 ஏக்கர் பரப்பளவில் மனதைக் கவரும் அழகான ஏரி இருக்கிறது. பகலில் அங்கே சுற்றி வந்தோம். இரவு 10 மணிக்கு மேல்  அனைவரும் விளக்குகளை அணைத்துவிட்டு, அமைதியாக ஜன்னல்களின் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தோம். அந்த நேரத்துக்கு காட்டு எருமைகள் கூட்டமாக வருமாம். 12 மணி வரை அவை வரவே இல்லை.  நான் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்ததும் அப்பா, ''கிட்டத்தட்ட 15 காட்டு எருமைகள் இந்தப் பக்கமாக ஓடின. ஒவ்வொன்றும் மிகப் பெரியதாக இருந்தது'' என்றார்.

சுட்டி ஸ்டார்ஸ் !

'அடடா... மிஸ் பண்ணிட்டோமே’ என நினைத்தேன். ஆனால், காலையில் ட்ரெக்கிங் போனபோது யானைகளையும் காட்டு எருமைகளையும் கண்டோம். சில சமயம் காட்டு நரி, செந்நாய்களும் அந்த வழியில் வருமாம். ம்... அன்றைக்கு நான் இருந்ததால் பயந்துட்டு வரலை போல் இருக்கு. அந்த ஒற்றையடிப் பாதையிலேயே சென்றால், மூணாறு வருமாம்.

எல்லாவற்றையும்விட ஆச்சர்யம் 'பெரிய மலபார் அணில்’ (விணீறீணீதீணீக்ஷீ நிணீவீஸீt ஷிஹீuவீக்ஷீக்ஷீமீறீ). அய்ய்ய்யோ... அதன் வால் 2 அடி நீளம் இருந்தது. அது மரத்தின் கிளையில் அமர்ந்து குனிந்து பார்த்த விதம் கொள்ளை அழகு. அந்த மூன்று நாட்களும் நேரம் சென்றதே தெரியவில்லை. கொடைக்கானலுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தால், நிச்சயம்  பேரிஜம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க ஃப்ரெண்ட்ஸ்!

சுட்டி ஸ்டார்ஸ் !

இவங்க இப்படி !

 சர்தார் வல்லபாய் படேலை ஒரு ஆங்கிலேயர் நையாண்டித்தனமாக ''உம்முடைய கல்ச்சர் என்ன?'' என்று கேட்டார். அதற்கு சர்தார் படேல், ''என்னுடைய கல்ச்சர்... அக்ரிக்கல்ச்சர் (விவசாயம்)'' என்றார். அந்த வெள்ளைக்காரர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

சுட்டி ஸ்டார்ஸ் !

ஒரு சிலருக்கு கோபம் வந்தால், காட்டுத்தனமாகக் கத்துவார்கள். கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசுவார்கள். ஆனால், வினோ பாவே வித்தியாசமாகச் செய்வார். கொஞ்சம் கற்கண்டை அள்ளி வாயில் போட்டுக்கொள்வார். அதோடு, எதிரில் உள்ளவருக்கும் கற்கண்டு கிடைக்கும்.

சர்லஸ் டிக்கன்ஸ் ஆரம்பக் காலத்தில் தான் எழுதிய கதைகளைத் தெருவின் முக்கிய இடங்களில் நின்றுகொண்டு படித்துக்காட்டுவார். அதன் பிறகு, கூட்டத்திடம் பணம் வாங்கிக்கொண்டு, அதை நடித்தும் காட்டுவார்.

சுட்டி ஸ்டார்ஸ் !

எத்தனை பூக்கள் ?

சுட்டி ஸ்டார்ஸ் !

 அந்தப் பூந்தோட்டத்தில் எத்தனை பூக்களை வேண்டுமானாலும் பறித்துக்கொள்ளலாம். பூந்தோட்டத்தைத் தாண்டி ஓர் ஆறு, ஒரு கோயில், அடுத்து ஓர் ஆறு ஒரு கோயில், பிறகு, ஓர் ஆறு ஒரு கோயில் உள்ளன. ஓர் ஆற்றைத் தாண்டினால் ஒவ்வொரு பூவும் 10 பூக்களாக மாறும். ஒவ்வொரு கோயிலிலும் 1,000 பூக்களை வைக்க வேண்டும். கடைசியில் ஒரு பூவும் மீதி இருக்கக் கூடாது. அப்படியானால் எத்தனை பூக்களைப் பறிப்பீர்கள்?

 விடை: பறித்தப் பூக்கள் மொத்தம் 111.

முதல் ஆற்றைக் கடக்கும்போது 1,110 இருக்கும். முதல் கோயிலில் 1,000 பூக்கள் வைத்தால் மீதி 110.

இரண்டாவது ஆற்றைக் கடக்கும்போது 1,100 பூக்கள் கிடைக்கும். இரண்டாவது கோயிலில் 1,000 பூக்கள் வைத்தால் மீதி 100.

மூன்றாவது ஆற்றைக் கடந்தால் 100 பூக்கள் 1,000 ஆகும். அதை மூன்றாவது கோயிலில் வைத்துவிடலாம். மீதி இருக்காது.

சுட்டி ஸ்டார்ஸ் !