பிரீமியம் ஸ்டோரி
##~##

ரஷ்யாவின் ஆன்ட்ரே பாவ்லவ் என்ற 70 வயது தாத்தாதான் ரஷ்யச் சுட்டிகளின் லேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார். அப்படி என்ன செய்துவிட்டார்? புகைப்படங்களைக்கொண்டு கதை சொல்வது... அதிலும் எறும்புகளையே மாடல்களாகப் பயன்படுத்துவது ஆன்ட்ரே தாத்தாவின் ஸ்பெஷல். வைல்டு போட்டோகிராஃபி எனப்படும் காட்டில் உலாவும் உயிரினங்களைத் துன்புறுத்தாமல்  புகைப்படம் எடுக்கும் கலையில் தாத்தா ஜித்தர். சிங்கம் புலிகளைப் படம் எடுத்து போரடித்துப்போன ஆன்ட்ரே தாத்தா, எறும்புகளைப் படம் எடுத்ததன் மூலம் இன்று புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

 'ஆன்ட்ஸி ஃபேன்டஸி’ (Antsy fantasy) என்று ஆன்ட்ரே தாத்தாவின் எறும்புப் புகைப்படங்களை உலகப் புகைப்படக் கலைஞர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். 'இவை எல்லாம் நிஜ எறும்புகளா... கிராஃபிக்ஸா?’ எனக் குழப்பத்தில் ஆழ்த்தும் வண்ணம் படங்கள் 'பிக்சல் பெர்ஃபெக்ட்.’

ANT அதிசயம் !

''நம்புங்கள்... இவை எல்லாம் எறும்புகளைத் துன்புறுத்தாமல் வருடக் கணக்கில் நேரம் செலவழித்து எடுக்கப்பட்ட படங்களாக்கும். சிறு வயதில் என் ஒரே பொழுதுபோக்கு எறும்புகளின் செயல்பாடுகளைக் கவனிப்பதுதான். சுறுசுறுப்பு, பாசம், பரிவு, உழைப்பு என எறும்புகள் எனக்கு ஃபேவரிட் ஹீரோக்கள். நான் வளர்ந்ததும் எறும்புகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன்.

ஏழு வருடங்களாக அவற்றை நுட்பமாக ஃபாலோ செய்தேன். கண்ணும் கருத்துமாய்த் தங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதிலும் வயதான எறும்புகளைப் பத்திரமாய் கவனிப்பதிலும் மனிதனை மிஞ்சிவிடுகின்றன எறும்புகள். 'மில்லி மைக்ரான் மூளைக்குள் இத்தனை உணர்ச்சிகளா?’ என வியந்தேன். எறும்புகளை ஃபேன்டஸி ஹீரோக்களாகப் பயன்படுத்திக் குழந்தைகளுக்குக் கதை சொல்லலாம் என முடிவு எடுத்தேன். ஸ்பெஷலாக ஒரு மினியேச்சர் ஸ்டூடியோவை வீட்டில் வடிவமைத்தேன். அவற்றுக்கான உணவுகள், தகவமைப்பு எல்லாம் பக்காவாக ஏற்படுத்தி அவற்றைத் துன்புறுத்தாமல் படம் எடுத்தேன். 

ANT அதிசயம் !

 இது வரை ஒரு எறும்புக்குக்கூடக் காயம் ஏற்பட்டது இல்லை. உயிர் இழப்பும் ஏற்பட்டது இல்லை. அவற்றின் போக் கிலேயேவிட்டு, ஒரு படத்தை எடுக்க வாரக் கணக்கில் நேரம் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எறும்பும் எனக்கு வாழ்க்கையைப் புதிதாய் வாழக் கற்றுத் தருகிறது'' என்று நெகிழ்ந்து சிரிக்கிறார் இந்த எ(கு)றும்புத் தாத்தா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு