Published:Updated:

சுட்டி மனசு !

தொகுப்பு: ஞா.அண்ணாமலை ராஜா, நா.சிபிச்சக்கரவர்த்தி, மா.நந்தினி படம்: ஏ.சிதம்பரம், ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி

சிவசங்கரி, 2-ஆம் வகுப்பு, காட்டுச்சேரி.

சுட்டி மனசு !
##~##

''எனக்குப் பிரச்னையே எங்க அண்ணன்தான். வீட்டுல அவன் எது செஞ்சாலும் திட்டறது இல்லை. அதையே நான் செஞ்சாத்  திட்டுறாங்க. ஒரு நாள் கலர் பென்சிலைத்  தொலைச்சிட்டேன். அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் திட்டினாங்க. ஆனா, அண்ணன் இருக்கானே... அவன்தான் ரொம்பத் திட்டினான், அடிச்சான். ஸ்கூல் போயிட்டு வந்து டி.வி., பார்க்கலாம்னா, அவனுக்குப் பிடிச்ச கிரிக்கெட் சேனல்தான் பார்க்கணுமாம். எனக்குப் பிடிச்ச சுட்டி டி.வி. பார்க்க முடியாது. இப்போ நான் டி.வி. பார்க்கிறதையே விட்டுட்டேன். என் ஃப்ரெண்ட்ஸ் விளையாட வந்தா, அவங்களைத் திட்டி அனுப்பிடுவான். அவங்ககூட நான் விளையாடக் கிளம்பினா, அம்மா விட்டாலும் அண்ணன் விட மாட்டேங்கிறான். நான் சின்னப் பிள்ளைங்கிறதால அவன் சொல்றதைத்தான் கேட்கணுமாம்!''

பி.பிரணவ், 1-ஆம் வகுப்பு, ஈரோடு.

சுட்டி மனசு !

''எனக்கு பெயின்டிங் பண்றதுனா ரொம்ப இஷ்டம் அங்கிள். அதனால, என்னோட ஸ்கூல் நோட்டு பின் பக்கத்துல, வீட்டு சுவத்துல எல்லாம் வரைஞ்சு வெச்சிருவேன். அம்மா கண்ணுல பட்டுட்டா அவ்ளோதான். இது ஒண்ணுதான் அங்கிள் நான் பண்ற தப்பு. எனக்குப் பிடிச்ச கலர்ஸ் வாங்கித் தரலாம், நோட்டு வாங்கித் தரலாம்தானே அங்கிள். அதைவிட்டுட்டு, என்மேல தப்பு சொல்றாங்க. எனக்குப் பிடிச்ச பொருளை வாங்கித் தரச் சொன்னா உடனே கிடைக்காது. விளையாட்டுப் பொருளைத் தர்ற மாதிரி தந்துட்டு அண்ணன் ரெண்டு நிமிஷத்துல பறிச்சுக்குவான். அப்பிடியே வாங்கித் தந்தாலும், உடைச்சுடாதே... உடைச்சுடாதேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எனக்கு டாய்ஸ்கூட விளையாடுற ஆசையே போய்ரும். அம்மா சாப்பாட்டை எனக்கு ஊட்டிவிடணும்னு ஆசைப்படுவேன். ஆனா, ஊட்டிவிட மாட்டாங்க. எனக்குப் பிடிக்காததையும் சாப்பிடு சாப்பிடுன்னு கட்டாயப்படுத்து வாங்க. கையில குச்சிய வெச்சுக்கிட்டு மிரட்டுவாங்க. டிராயிங்ல  ஊக்கப்படுத்த மாட்டேங்கிறங்க''

ஜெயஸ்ரீ, 4-ஆம் வகுப்பு, கரூர்.

சுட்டி மனசு !

''என் அண்ணனை மட்டும் தினமும் என்னோட அப்பா கடைக்குக் கூட்டிட்டுப் போறார். என்னை எங்கேயும் கூட்டிட்டே போறது இல்லை. 'ஒழுங்கா வீட்ல உட்கார்ந்து படிக்கிற வழியைப் பாரு. படிக்கலைன்னா, எக்ஸாம்ல முட்டைதான் வாங்குவே’னு திட்டுறாரு. பக்கத்து வீட்டுப் ப்ரியாவை அவங்க டாடி, வேலை முடிஞ்சு வந்ததும் பைக்ல கூட்டிட்டுப் போய், சாக்லேட்லாம் வாங்கித் தருவாராம். அதைப் பத்தி என்கிட்டே அவ சொல்லும்போது, எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கும். போகோ, சுட்டி டி.வி., சித்திரம் எல்லாம் பார்க்கவே விடுறது இல்லை. அப்பாவுக்கு காமிக்ஸ் படிக்கப் பிடிக்குமாம். அதனால, அதைப் படிக்கச் சொல்றாரு. ஆனா, அது எனக்குப் பிடிக்காது. காமிக்ஸ்ல இருக்கிற கார்ட்டூன்ஸ்தானே அங்கிள் டி.வி.ல வருது... அதைப் பார்த்தா தப்பா? கலர்பொடியை எடுத்துத் தரையில் கோலம் போட்டுப் பார்ப்பேன். உடனே வீட்டை அலங்கோலம் ஆக்குறேன்னு அம்மா பிளாஸ்டிக் பைப்பாலே சுள்ளுனு அடிக்கிறாங்க. எனக்கு இட்லி பிடிக்காது. அது வேணாம்னு சொன்னா, உடனே போலீஸ்ல பிடிச்சுக் குடுத்துருவேன்னு சொல்றாங்க. இதைவிடக் கொடுமை எங்கேயாச்சும் உண்டா அங்கிள்?''

முத்துபிரசாத், 4-ஆம் வகுப்பு, தூத்துக்குடி.

சுட்டி மனசு !

''காலையில ஆறு மணிக்கு எழுப்பி விட்டுருவாங்க. எங்க தெருவுல முதல்ல கண்ணு முழிக்கிற ஆளு நானாத்தான் இருக்கும். தம்பி 8 மணி வரைக்கும் தூங்குறான். பால் பாக்கெட்டே 7 மணிக்குத்தான் வருது. ஈவ்னிங் ஸ்கூல் முடிச்சு வந்ததும், கதவைப் பூட்டிருவாங்க. மறு நாள் என்னை ஸ்கூல் கூட்டிட்டுப் போகும்போதுதான் திறந்துவிடுவாங்க. யாரையும் பார்க்க முடியாது, பேச முடியாது. வெளியே என்னதான் நடக்குதுனே தெரியாது. நான் டியூஷன் போகாமலே நல்லாப் படிப்பேன். ஆனா, 'பக்கத்து வீட்டுப் பொண்ணு நிறைய மார்க் வாங்குது, நீயும் அதுபோல வாங்கு’னு அம்மா கம்பேர் பண்ணிப் பேசுறாங்க. அந்தப் பொண்ணு கேட்டதை எல்லாம் அவங்க வீட்டுல வாங்கிக் கொடுக்கிறாங்க. நான் ரொம்ப நாளா ஒரு சைக்கிள் கேக்கிறேன். அதை வாங்கித் தர மாட்டேங்கிறாங்க!''

தாருண்யா, 4-ஆம் வகுப்பு, ஈரோடு.

சுட்டி மனசு !

'என்னை பரதநாட்டியம் கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. முதலில் ஆர்வமாக் கத்துக்கிட்டேன். அப்புறம் போகப்போக எனக்குப் பிடிக்கவே இல்லை அங்கிள். ஆனா, அம்மாவும் அப்பாவும் 'போ போ’னு என்னை ஃபோர்ஸ் பண்ணுறாங்க. எனக்குப் பிடிக்கவே இல்லை. அப்புறம், அம்மா அடிக்கடி வீட்டுல வேலை வாங்குறாங்க. 'தாருண்யா அதை எடுத்துட்டு வா, தாருண்யா இதை எடுத்துட்டு வா’னு என்னை ஜாலியா கேம் விளையாடவே விடுறது இல்லை. அப்படியே விளையாடினாலும்  திட்டு விழுகுது. லீவு நாள்ல கொஞ்ச நேரம் நல்லாத் தூங்க விட மாட்டாங்க. சீக்கிரமா எழுப்பிவிட்டுருவாங்க காலையிலயே மூடு அவுட் ஆகிடும்.  என்னோட ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்னு சொன்னா, செமத்தியாத் திட்டு விழும்.   இத்தனைக்கும் என் ஃப்ரெண்டு வீடு பக்கத்துத் தெருவுலதான் இருக்கு. இதுகூடப் பரவாயில்லை...  லீவு நாளில் என்னை ஏதாவது ஒரு கிளாஸ்ல சேர்த்துவிட அம்மாவும் அப்பாவும்   பிளான் போட்டுட்டு இருக்காங்க. என்ன கொடுமை அங்கிள் இது? அம்மா என்னை எப்பதான் ஜாலியா இருக்கவிடு வாங்களோ?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு