வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பை வரவழைக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா கதை சொன்னால் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்குமா என்ன?

''அங்கிள் நீங்கதானே 'சிவாஜி’ படத்துல ரஜினி அங்கிள்கூட நடிச்சவர்'' என்று உற்சாகத்துடன் வரவேற்றாள் நிகிதா. ''பரவாயில்லையே... என்னை உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கே'' என்று மகிழ்ந்தார் ராஜா அங்கிள்.

அறிமுகப் படலம் முடிந்ததும் ''அங்கிள், உங்களுக்கு வாசிச்சுக்காட்ட புல்லாங்குழல் எடுத்துட்டு வந்திருக்கேன்'' என்றான் அக்ஷய் ராமானுஜன்.

''இப்படி வந்து வாசி. எல்லாருமே கேட்கலாம்'' என்று தன் அருகே அவனை அழைத்து நிற்கவைத்தார் ராஜா. 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...’ பாடலைப் புல்லாங்குழல் மூலம் அருமையாக இசைத்த ராமானுஜனைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்.

ராஜா அங்கிள் பக்கத்தில் யார் அமர்வது என ஸ்ரீனிவாசன் மற்றும் ஸ்ரீவத்சன் இடையே கடும் போட்டி. சண்டை வலுவாவதற்குள் இருவரையும் சமாதானப்படுத்திக் கீழே உட்காரவைத்த ராஜா, ''இதுக்கு மேலயும் முரண்டு பிடிச்சா, நான் வாத்தியாரா மாறிடுவேன்'' என்று கண்டிப்பது போல் குரல் கொடுத்தார்.

'அங்கிள், உங்களுக்கு எல்லாம் சீரியஸ் செட் ஆகாது. வேஸ்ட்டா டிரை பண்ணாதீங்க'' என்று கலாய்த்தான் விதுகரன்.

சிரித்து ரசித்த ராஜா அங்கிள், ''உங்களை கொஞ்சம்விட்டால் ஓவராக் கலாய்ச்சுடுவீங்க. மேட்டருக்குப் போயிருவோம். முதல்ல நீங்க எனக்குக் கதை சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்'' என்றார்.

''நான் சொல்றேன்... நான் சொல்றேன்'' என்று ஆவலுடன் முன் வந்த சுட்டிகளில் மூன்று பேர் கதை சொன்னார்கள்.

''சரி, நான் சொல்லப்போறது என் பாட்டி எனக்குச் சொன்ன கதை. நாங்க சின்னப் பசங்களா இருக்கும்போது இப்ப மாதிரி டி.வி., வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் எதுவும் இல்லை. ஒவ்வொரு நாள் ராத்திரியும் பாட்டி சொல்ற கதைகள்தான் ஒரே என்டர்டெயின்மென்ட். ஒவ்வொரு கதையும் அவ்வளவு சுவாரசியமா இருக்கும். அதுல ஒண்ணு தெனாலிராமன் கதை. உங்களுக்கு தெனாலிராமனைத் தெரியுமா?'' என்று கேட்டார் ராஜா.

''தெரியும். புக்ஸ்ல படிச்சிருக்கோம்'' என்றார்கள்.

''கிருஷ்ண தேவராயர் என்ற அரசரிடம்தான் தெனாலிராமன் வேலை செய்தார். அந்த அரசருக்கு ஒரு பழக்கம். காலையில் யார் முகத்தில் கண் விழிக்கிறாரோ, அவங்க ஆசையை நிறைவேற்றி வெச்சுடுவார். அப்படி ஒரு நாள் தெனாலிராமன் முகத்தில் கண் விழிக்கிறார். 'அடடா... இவன் வில்லங்கமா வரம் கேட்பானே’னு நினைக்கிறார். அவர் பதறியது மாதிரியே தெனாலிராமன், 'எனக்கு இந்த நாட்டின் தலைமைத் தளபதி ஆகணும்’னு கேட்கிறான். தெனாலிராமன் புத்திசாலிதான். ஆனால், தளபதிக்கான உடல் பலம், வீரம் அவனிடம் இல்லை. என்ன பண்றது? அவன் ஆசையை நிறைவேத்தி ஆகவேண்டிய கட்டாயம். 'சரி, இன்று முதல் நீதான் தளபதி’னு அரசர் அறிவிச்சுடுறார்'' என்றார் ராஜா அங்கிள்.

''சண்டை போடுறதுதான் தளபதியோட வேலையா?'' என்று கேட்டான் தீபக்.

''எதிரி நாடுகள் படையெடுத்து வந்தால், தலைமை தாங்கிப் போரிடுறது ஒரு பக்கம் இருந்தாலும், உள் நாட்டிலேயே கொள்ளையர்கள், கொலைகாரர்களிடம் இருந்து குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பும் தளபதிக்கு உண்டு. நமக்கு போலீஸ் ஆபீஸர், மிலிட்டரி ஆபீஸர்ஸ் இருக்காங்க இல்லையா... அதுபோலதான்'' என்ற ராஜா அங்கிள் கதையைத் தொடர்ந்தார்.

''தளபதியான தெனாலிராமனுக்கு அந்தப் பதவிக்குரிய உடைகளும் கூடவே, உடைவாளும் தந்தாங்க. உடைவாள் என்றால் வீட்டுல காய்கறி நறுக்குகிற மாதிரியான சாதாரண கத்தி கிடையாது. அதன் எடை ரொம்ப அதிகம். அதை உறையில் செருகி கம்பீரமா வலம் வரத் தொடங்கினான் தெனாலிராமன். தளபதி பதவியைத் தெனாலிராமனுக்குக் கொடுத்துட்டாலும் அதை எப்படியாவது பறிச்சுடணும்னு அரசர் முடிவு பண்ணினார். ஒரு நாள் இரவு... தளபதி தெனாலிராமன் நகர்வலம் போனான். நம்ம ஊர்ல எல்லாம் நைட் நேரத்துல போலீஸ் ரவுண்ட்ஸ் வருவாங்களே... அப்படி. இரவில் கண் விழிச்சுப் பழக்கம் இல்லாததால், அவனால் கண் விழிக்க முடியலை. 'நம்ம நாட்டில் எந்தத் திருடன் வந்துடப்போறான்’னு நினைச்சு, ஒரு வீட்டுத் திண்ணையில் துண்டை விரிச்சுப் படுத்து நல்லாத் தூங்கிட்டான்'' என்றார் ராஜா.

''இப்பவும் சில பேர் அப்படித்தான் பண்றாங்க'' என்று மோனிகா சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.

ராஜா அங்கிள் தொடர்ந்தார். ''காலையில் கோழி கூவுற சத்தம் கேட்டு தெனாலிராமன் கண் விழிச்சான். தன் இடுப்பைத் தடவிப் பார்த்தான். பகீர்னு ஆகிடுச்சு. அவன் இடுப்பில் இருந்த உறையும், உடைவாளும் இல்லை. அசந்து தூங்குன நேரத்தில் எவனோ ஆட்டையப் போட்டுட்டான். தளபதிக்கு அடையாளமே உடைவாள்தான். அது இல்லைனா அவனுக்கு மட்டும் இல்லை... நாட்டுக்கே களங்கம். இது அரசருக்குத் தெரிஞ்சா, அடுத்த நிமிஷமே தண்டனைதான். தெனாலிராமனுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. நடந்தது நடந்துருச்சு. எப்படியாவது சமாளிச்சாகணுமே... ஒரு ஐடியா தோணுது. உடனே கொல்லன் வீட்டுக்கு ஓடுறான்.''

''கொல்லன்னா கொலைகாரனா?'' என்று சந்தேகம் கேட்டாள் சந்தியா.

''நல்ல கேள்வி! கொல்லன், பொற்கொல்லன் எல்லாம் அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த சொற்கள். நகை, ஆபரணங்களை வடிவமைச்சுக் கொடுக்கிற தொழில் செய்றவங்களையும், வாள் போன்ற ஆயுதங்களை உருவாக்குகிறவர்களையும் கொல்லன்னு சொல்வாங்க. அப்படி அந்த நாட்டில் இருந்த கொல்லன்கிட்ட போய், 'நீ என்ன செய்வியோ தெரியாது. அடுத்த ஐந்து நிமிஷத்துல எனக்கு உறையோடு சேர்ந்த உடைவாள் வேணும். சாதாரண உடைவாள் இல்லை. தளபதிக்கான உடைவாள்’னு சொன்னான். அதுக்கு அந்தக் கொல்லன், 'உடனே செய்து கொடுக்க இது என்ன சுடுதண்ணியா? ஆர்டர் கொடுத்தால் ஆறு நாள் ஆகும்’னு கைவிரிச்சுடுறார்.

அதுக்குத் தெனாலிராமன், 'விவகாரம் தெரியாமப் பேசாதே. இப்ப நீ ஒரு உடைவாள் செஞ்சு தரலேன்னா, என்னால அரை நாள்கூட உயிரோடு இருக்க முடியாது’னு புலம்பினான். 'சரி, இப்போதைக்கு ஒரு உறை மட்டும் செஞ்சு தர்றேன். உடைவாளை எவ்வளவு சீக்கிரம் முடியுதோ, அவ்வளவு சீக்கிரம் பண்ணிடுறேன்’னு கொல்லன் சொன்னார். தெனாலிராமனுக்கு இன்னொரு யோசனை வருது. 'உறையோடு சேர்த்து ஒரு கைப்பிடியுடன் இருக்கிற மரத்தால் ஆன டம்மி உடைவாளைச் செஞ்சு கொடுத்துரு. அதை வெச்சுச் சமாளிச்சுக்கிறேன்’னு கேட்க, அவசர அவசரமா அதைச் செஞ்சு தர்றாரு கொல்லன்''

''தெனாலிராமன் உண்மையிலேயே பயங்கர புத்திசாலிதான்'' என்று சான்றிதழ் கொடுத்தான் கார்த்திக்.

''இதுக்கு அப்புறம் நடக்கிறதைக் கேளு'' என்ற ராஜா அங்கிள் தொடர்ந்தார். ''எப்படியும் நம்ம உடைவாளுக்கு இப்போதைக்கு வேலை வரப்போறது இல்லை. சும்மா மர வாளை வெச்சு சமாளிச்சுக்கலாம்னு தெனாலிராமன் முடிவு பண்றான். ஒரு வழியா டம்மி உடைவாளைச் செருகிட்டு அரண்மனைக்குப் போறான். வழக்கம் போல அரசவை கூடுது. தனக்கு செட் ஆகலைனாலும் தளபதி கெட்டப்ல கம்பீரமாக தெனாலிராமன் உட்கார்ந்து இருக்கான். அரசர் தன் அரியணையை நோக்கி நடந்து வரும்போதே ஓரக்கண்ணால் தெனாலிராமனைப் பார்க்கிறார். அவன் இடுப்பில் உடைவாள் இருந்ததைப் பார்த்து ஷாக் ஆயிட்டார். 'ம்... தற்காலிகமா ஏதோ ஏற்பாடு செய்து இருக்கியா? நீ எப்படியும் மாட்டாமப் போகமாட்டே’னு மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டார். இதுல இருந்து என்ன தெரியுது?'' என்று கேட்டார் ராஜா.

தன் கையை உயர்த்திய சௌஜன்யா, ''தெனாலிராமனோட கத்தியை எடுக்க ஏற்பாடு செய்ததே அரசர்தான்'' என்றாள்.

''கரெக்ட்! அன்றைய அரசவை தொடங்குது. இப்ப இருக்கிற நீதிமன்றங்கள் மாதிரி அன்றைக்கு அரசவை. குற்றம் செய்றவங்களை விசாரிச்சுத் தண்டனை கொடுக்கிற இடம். அப்போது, ஒரு வழக்கு விசாரணைக்கு வருது. கொள்ளை சம்பந்தமான வழக்கில் ஒருத்தன் பிடிபடுறான். அவன்தான் குற்றவாளின்னு தீர்மானிச்சுட்டதாச் சொன்ன அரசர், 'தளபதி தெனாலிராமா உடனே உங்கள் உடைவாளை உருவி இவன் தலையைத் துண்டியுங்கள்'' என்று சொன்னார். இப்ப அந்தக் குற்றவாளியைவிட தெனாலிராமனுக்குதான் நடுக்கம் அதிகமாகுது. 'ஆஹா... இது டம்மி உடைவாள்னு தெரிஞ்சால் நம்ம தலையையும் அரசர் வெட்டச் சொல்லிடுவாரே’னு பயந்தான். 'அரசரே... கொஞ்சம் பொறுங்கள். ஓர் உயிரைக் கொல்வது சாதாரண விஷயம் அல்ல. தீர விசாரித்த பிறகுதான் அவன் குற்றவாளி என்பதை முடிவு செய்ய வேண்டும்’ என்று நிதானமாகச் சொன்னான்.

அரசர் அசரவில்லை. 'இல்லை தளபதியாரே... நான் நன்றாகவே விசாரித்துவிட்டேன். இவன்தான் குற்றவாளி. உடனே எனது தீர்ப்பை நிறைவேற்றுங்கள்’ என்றவர், 'வாடா வா... வசமா மாட்டினியா? இப்ப, உன் உடைவாளை உருவித்தானே ஆகணும்'னு மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டார். தெனாலிராமன் சாதாரண ஆளா? உலக மகா புத்திசாலியாச்சே... எவ்வளவோ சமாளிச்சவனுக்கு இதைச் சமாளிக்கத் தெரியாதா என்ன? 'அவசரப்படாதீர்கள் அரசே. ஒருவேளை இவன் அப்பாவியாக இருந்து, அவனுக்கு நான் தண்டனைக் கொடுத்துவிட்டால்... அந்தப் பாவம் உங்களையும் சேர்ந்துவிடும். அதை என்னால் அனுமதிக்க முடியாது. அதனால், முதலில் இருந்து விசாரிப்போம்'னு சொன்னான். அரசர் அசரவே இல்லை. 'என்னவானாலும் பரவாயில்லை. இவனை உடனே கொன்றுவிடு. இது என் ஆணை’ என்று கட்டளை போட்டுட்டார்'' என்ற ராஜா தொடர்ந்தார்.

''கொஞ்சம் நேரம் அமைதியுடன் இருந்த தெனாலிராமன், குற்றவாளி முன்னால் நின்னான். இரண்டு கைகளையும் கூப்பி, தலையை மேலே பார்த்தபடிப் பேசினான். 'அம்மா... மாகாளி! ஒரு வேளை இவன் அப்பாவியா இருந்தால், அந்தப் பாவம் அரசருக்கும் சேர்ந்துடும். நான் பாவத்துக்கு ஆளானால் பரவாயில்லை. எங்கள் அரசன் அதுக்கு ஆளாகக் கூடாது. தாயே... இவன் மட்டும் குற்றவாளியா இருந்தால், நான் உடைவாளை எடுத்து வீசியதும் இவன் தலை தரையில் உருளணும். அதேவேளை இவன் அப்பாவின்னா, இந்த உடைவாள் மரவாளா மாறிடணும்’ என்று சொல்லிக்கிட்டே உடைவாளை எடுத்து குற்றவாளியின் கழுத்தில் வீசினான். இப்ப என்ன ஆகும்?''

''குற்றவாளியும் எஸ்கேப். தெனாலிராமனும் எஸ்கேப்'' என்றாள் ஜெயஸ்ரீ.

''ஆமாம். அவனோட அபாரமான சாதுர்யத்தை அரசரும் பாராட்டினார். தெனாலிராமனும் உண்மையைச் சொல்லிட்டுத் தளபதி பதவியில் இருந்து விலகிட்டான். இதில் இருந்து என்ன விஷயம் தெரிஞ்சுக்கிட்டீங்க?'' என்று கேட்டார் ராஜா அங்கிள்.

''புத்திசாலித்தனமா இருந்தா எப்படியும் தப்பிச்சுக்கலாம்'' என்றான் கிரிதர்.

''கரெக்ட்! புத்திமானே பலவான். அதே நேரம், நம்ம புத்திசாலித்தனத்தைத் தப்பான விஷயத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. நல்ல விஷயத்தில் புத்தியை நம்பிச் செயல்பட்டால், வெற்றி நிச்சயம். நீங்களும் அப்படி இருங்க. இதுதான் இந்தப் பட்டிமன்ற ராஜாவின் தீர்ப்பு'' என்று பன்ச் சொல்லிக் கதையை முடித்தார் ராஜா அங்கிள்!