Published:Updated:

வந்தாச்சு New ஸ்பைடர் மேன் !

கே.யுவராஜன்

பிரீமியம் ஸ்டோரி

ஸ்பைடர் மேன்...

##~##

புது நாயகன்... புது நாயகி... புது வில்லன்... புதிய தொழில்நுட்பம் என எல்லாமே புதுசாக திரைக்கு வந்து இருக்கிறான் ஸ்பைடர் மேன்.

இந்தப் படத்தில் ஸ்பைடர் மேனாக அவதாரம் எடுத்து இருப்பவர் ஆண்ட்ரூ கார்ஃபீல்டு. இவர் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் வாழ்க்கையை மையமாகவைத்து வெளியான 'தி சோஷியல் நெட்வொர்க்’ படத்தில் நண்பன் வேடத்தில் வந்தவர். இந்தப் படத்துக்காக ஜிம்னாஸ்டிக், சண்டைப் பயிற்சி என பல விஷயங்களைக் கற்று பக்காவாக வந்து இருக்கிறார். ஸ்பைடர் மேனின் காதலியாக எம்மா ஸ்டோன் நடித்து இருக்கிறார்.

கதை அதேதான். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் சிறுவன் பீட்டர் பார்க்கர். அவனது பெற்றோர் யார்? என்ன ஆனார்கள் என்பது பற்றி மர்மமாக இருக்கிறது. அத்தை மற்றும் மாமாவின் அரவணைப்பில் வளர்கிறான். பள்ளியில் ஓர் ஆய்வில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக சூப்பர் சக்தி கிடைத்து ஸ்பைடர் மேனாக மாறுகிறான் பீட்டர் பார்க்கர். அதே நேரத்தில் அப்பாவைப் பற்றிய மர்மங்கள் அடங்கிய பெட்டி கிடைக்கிறது. அப்பாவின் பழைய நண்பர் டாக்டர் கான்னரஸ் (ராஸ் இஃபான்ஸ்) என்பவரைத் தேடிச் செல்கிறான். அங்கே ஏற்படும் திருப்பங்கள், சூப்பர் பவர் வில்லனுடன் ஏற்படும் மோதல், செய்யாத தவறுக்குத் துரத்தும் போலீஸ் என த்ரில் கிளப்புகிறது.

வந்தாச்சு New ஸ்பைடர் மேன் !

சண்டைக் காட்சிகளில் உடலை வில்லாக வளைப்பது, பெற்றோரைப் பற்றி அறியும் சமயத்தில் முகத்தில் காட்டும் சோகம் என சகல விதங்களிலும் அசத்துகிறார் ஆண்ட்ரூ. டாக்டர் ரத்தா என்ற வேடத்தில் நடித்து இருப்பவர் நம் இந்திய நடிகர் இர்ஃபான் கான். இவர் செய்கிற குளறுபடிகளால் ஸ்பைடர் மேன் சந்திக்கும் சிக்கல்கள் பதறவைக்கின்றன.

'ரெட் பிக்’ என்ற ஹைடெக் கேமரா மூலம் நவீனத் தொழிநுட்பங்களை இணைத்து 3ஞி மூலம் மிரட்டி இருக்கிறார் இயக்குனர் மார்க் வெப். படத்தை எடுத்து இருக்கும் விதத்தில் மட்டுமின்றி, ஸ்பைடர் மேன் கையில் இருந்து வரும் இழையும் செயற்கை இழை என கதையிலும் ஹைடெக் விஷயத்தைச் சொல்லி 'அட’ போடவைக்கிறார்கள். ஏற்கெனவே வெளியான 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்’ நாவலைத் தழுவி எடுத்து இருந்தாலும், அதில் இல்லாத பல புது சங்கதிகளைச் சேர்த்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்கள். வில்லன் கான்னரஸ் உடன் ஸ்பைடர் மேன் மோதும் காட்சிகளில் திரையில் மட்டும் இல்லாமல் நம் கண்களுக்குள்ளும் அனல் பறக்கிறது.  

வந்தாச்சு New ஸ்பைடர் மேன் !

1962 ஆம் ஆண்டு காமிக்ஸ் வடிவில் பிறந்த ஸ்பைடர் மேனுக்கு இப்போது வயது 50. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிவிட்ட நேரத்தில் வந்து இருந்தாலும் ஸ்பைடர் மேன் விரித்த வலையில் தேடிச் சென்று உற்சாகமாகச் சிக்குகிறார்கள் சுட்டி ரசிகர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு