Published:Updated:

சுட்டி மனசு !

தொகுப்பு: கரு.முத்து, அற்புதராஜ்படங்கள்: கே.குணசீலன் எஸ்.தேவராஜன்

பிரீமியம் ஸ்டோரி

பவதாரிணி, 3-ஆம் வகுப்பு, தஞ்சாவூர்.

சுட்டி மனசு !
##~##

'எனக்கு சினிமா சாங்ஸ் ரொம்பப்  பிடிக்கும்.  அதனால்  கொஞ்சம்  சவுண்ட் வெச்சுக் கேட்பேன். உடனே அம்மா ஓடி வந்து சவுண்டைக் குறைச்சுவெச்சுட்டு ரிமோட்டை எனக்கு எட்டாத உசரத்துல வெச்சுருவாங்க. சில நேரம் டி.வி.யையே ஆஃப் பண்ணிருவாங்க. எனக்கு சுடிதார், சோலி போல ஷால் போட்டுக்கிற டிரெஸ்தான் பிடிக்கும். ஆனா எங்க அம்மா கவுன், பட்டுப் பாவாடை சட்டை போட்டுக்கச் சொல்வாங்க. ரொம்ப அடம்பிடிச்சு அழுதுதான் எனக்குப் பிடிச்ச டிரெஸ் வாங்குவேன். அப்படியே வாங்கிக் கொடுத்தாலும், அந்த டிரெஸ் போடும்போது எல்லாம் திட்டுறாங்க. அதனால  எனக்குப் பிடிச்ச டிரெஸ் பண்ணிக்கவே  பயமா இருக்கு!''

லக்ஷிதா, எல்.கே.ஜி, வில்லியனூர்.

சுட்டி மனசு !

''என்னோட டாடி, மம்மி, தாத்தா, பாட்டி எல்லோரை யுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, மம்மிதான் ரொம்ப அடிக்கிறாங்க. எனக்குப் பிடிச்ச ஸ்நாக்ஸ் ஏதாவது கடையில் பார்த்தால், சாப்பிட ஆசையா இருக்கும். நான் மம்மிகிட்ட கேட்பேன். வாங்கித் தரவே மாட்டாங்க.  எனக்கு பகல்ல தூங்குறதுக்குப் பிடிக்காது. என்னை வலுக்கட்டாயமா மதியம் தூங்க வெச்சிடுறாங்க. நான் சின்னப் பிள்ளைதானே... விளையாட ஆசை இருக்காதா? விளையாடிக்கிட்டே இருக்கணும்னு தோணும். ஆனா, விடவே மாட்டாங்க. எங்க ஸ்கூல்ல ஒரு மிஸ்ஸுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். இன்னொரு மிஸ்ஸைப் பார்த்தாலே அழுதுடுவேன். அவ்வளவு ரஃப்பா இருப்பாங்க. ஏன்னே தெரியலை. நீங்கதான் என்னோட பிரச்னையைத் தீர்த்துவைக்கணும்!''

தனுஜா, 4-ஆம் வகுப்பு, புதுவை.

சுட்டி மனசு !

''நான் நல்லாப் படிப்பேன் அங்கிள். ஆனா, அடிக்கடி மறந்துருது. இதைப் போய் மிஸ் என் பேரன்ட்ஸ்கிட்ட சொல்லிடுறாங்க. எங்க அம்மாவும் அப்பாவும் செமத்தியா அடிக்கிறாங்க. நம்ம பிள்ளைதானே... படிக்கிறது மறக்காம இருக்க என்ன பண்ணலாம்னு யோசிக்காம, டாக்டர்கிட்டயும் கூட்டிப்போகாம என்னை அடிக்கிறாங்க. அடிச்சா மட்டும் மறக்காதா அங்கிள்? நான் வீட்ல இருக்கும்போது விளையாட ஆசையா இருக்கும். ஆனா, 'அதைச் செய், இதைச் செய்’னு அம்மா வேலை சொல்லிக்கிட்டே இருக்காங்க. செய்யலைனா அடிதான். எவ்வளவுதான் அடி வாங்குறது!  எங்க வீட்ல ஃபேரி டிரஸ் போட்ட பொம்மைங்க நெறைய இருக்குது. என்னோட பர்த்டேவுக்கு அதே மாதிரி டிரெஸ் கேட்டா, வாங்கித்தர மாட்டேங்கிறாங்க. சாப்பிடுற பொருள் கேட்டாலும் வாங்கித் தர மாட்டாங்க. படி, படி...ன்னு மட்டும் சொல்றாங்க. நான் கேட்கிறதை வாங்கிக் கொடுக்கிறதே இல்லை. ஆனா, அவங்க சொல்றதைச் செய்யணுமாம். இது எப்படி அங்கிள்?''

ஜி.மகாலட்சுமி, 2-ஆம் வகுப்பு, மருங்குளம்.

சுட்டி மனசு !

''நான் நல்லாப் படிக்கிற பொண்ணுதான். ஆனா, லீவு முடிஞ்சு ஸ்கூல் போறதுனா, ரொம்ப போரா இருக்கு அங்கிள். காலையில் சாப்பாடு செஞ்சு, என்னையும் என் தங்கச்சியையும் ஸ்கூலுக்கு அனுப்ப அம்மா ரொம்ப லேட் பண்ணிடுறாங்க. தங்கச்சி சின்னப் பொண்ணு. அவளைக் குளிப்பாட்டி டிரெஸ் பண்ணிட்டு என்னையும் ரெடி பண்றதுனால, சமையல் லேட்டாயிருது. காலையில் சாப்பிடக்கூட முடியாது. அரக்கப் பரக்க ஓடினாலும் ஸ்கூல் பஸ்ஸைப் பிடிக்க முடியறது இல்லை. அஞ்சு கிலோ மீட்டர் தூரம் போகணுமே என்ன பண்றது.? அதே நேரம்தான் அப்பாவும் வேலைக்குப் போகணும். அப்பாவைத் தொந்தரவு பண்ணி அவரோடுதான் போக வேண்டியதா ஆயிடுது. அதனால நான் லேட்டாப் போய் ஸ்கூலில் திட்டு வாங்குறதோடு, அப்பாவும் ஆபீஸ்ல  திட்டு வாங்குறாங்க. இதுதான் எனக்கு ரொம்பக் கவலையான விஷயம் அங்கிள்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு