பிரீமியம் ஸ்டோரி
##~##

மின்சாரப் பற்றாக்குறை தாண்டவம் ஆடும் இந்தச் சமயத்தில், ஒரு மீன் இனத்தால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றால் ஆச்சரியம் அல்லவா?

அமேஸான் மற்றும் ஓரினோகோ ஆறுகளில் இவை அதிகமாக வசிக்கின்றன. இவற்றின் விலங்கியல் பெயர் Electrophorus electricus. .

8 அடி நீளமும் 20 கிலோ எடையும் உள்ள இவை, பாம்பைப் போல நீளமான உருளை வடிவ உடலும் தட்டையான தலையும் கொண்டவை.

வசிப்பிடத்துக்கு ஏற்றார்போல் பழுப்பு, கருப்பு மற்றும் இளம் பச்சை வண்ணத்தில் இருக்கும். இதற்குக் கூரிய மோப்ப சக்தி உண்டு. அதன் மூலம் இரைகளை எளிதில் கண்டுபிடிக்கும்.

தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் இரையைப் பிடிக்கவும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். வயிற்றுப் பகுதியில் உள்ள மூன்று ஜோடி உறுப்புகள்தான் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இவற்றால் 300 முதல் 650 வோல்ட் வரை  மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

மின்சார மீன் !

இரையைப் பார்த்ததும், மூளைக்குள் அந்தச் செய்தி பதிந்து, உடனடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.  மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகி, அந்த இரை மயக்கம் அடையும் அல்லது இறந்துவிடும். சில மீன்களால் ஒரு மனிதனையே கொல்லும் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இவை, ஷ்ரிம்ப் என்னும் கடல்வாழ் உயிரினத்தை  விரும்பி உண்ணும். மேலும், சிறிய மீன்கள், நண்டுகள் போன்றவற்றையும் உட்கொள்ளும்.

இவற்றின் ஆயுள் 10 முதல் 22 ஆண்டுகள்.

இவற்றின் இனப்பெருக்கம் வித்தியாசமானது. முதலில், ஆண் மீன் தண்ணீரிலேயே தனது உமிழ்நீரைப் பயன்படுத்தி சின்னதாக ஒரு கூட்டை உருவாக்கும். அந்தக் கூட்டில், பெண் மீன் சுமார் 1,200 முட்டைகளை இடும். பிறகு கூட்டுக்கு வரும் ஆண் மீன், அந்த முட்டைகளைக் கருவுறச் செய்யும். பெரும்பாலான கருவுற்ற முட்டைகளைப் பிற உயிரினங்கள் தின்றுவிடும். எஞ்சியவைதான் மின்சார மீன்களாக உருவாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு