Published:Updated:

வாசிப்பு என்பது ஒரு வரம் !

இரா.வினோத் சு.குமரேசன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''வாழ்க்கை எனும் நதி இழுத்துச் செல்லும் பாதையில் நான் பயணிக்கிறேன்'' என கவிதை நடையில்  பேசுகிறார் ஹர்ஷிதா. இந்தியாவின் இளம் ஆங்கில‌ நாவல் ஆசிரியர் என லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கும் ஹர்ஷிதா, பெங்களூருவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி.

''அப்பா பசவராஜ், சி.பி.ஐ ஆபீஸர் என்று சொல்வதைவிட தீவிர வாசகர் எனச் சொல்லலாம். 'வாசிப்பு என்பது ஒரு வரம்’ என அடிக்கடிச் சொல்வார். அவர்கிட்ட இருந்துதான் அந்த வரம் எனக்கும் வாய்த்தது'' என்கிறார் ஹர்ஷிதா.

வாசிப்பு என்பது ஒரு வரம் !

ரூபி ரஷ், அல்மோஸ்ட் டெஸ்ப்ரேட், என்ற இரண்டு நாவல்களை எழுதி இருக்கும் ஹர்ஷிதா! இந்தச் சாதனைக்காக கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார். ''சிறு வயதில் இருந்தே அப்பா நிறைய புக்ஸ் வாங்கிக் கொடுப்பார். என் பர்த்டேவுக்கும் எல்லோரும் புக்ஸ்தான் கிஃப்ட் கொடுப்பாங்க. எட்டு வயதிலேயே ஏகப்பட்ட ஃபிக்ஷன் புக்ஸ் படிச்சுட்டேன். எப்போ நாம் அதிகமாகப் படிக்க ஆரம்பிக்கிறோமோ, அப்பவே எழுதுறதையும் ஆரம்பிச்சுடுவோம். அப்படித்தான் நானும் கதை, கவிதை, நாவல் என விளையாட்டா எழுத ஆரம்பிச்சேன்' என்கிறார்.

'’சிட்னி ஷெல்டன்தான் என்னோட ஃபேவரைட் எழுத்தாளர். அவரை மாதிரியே நானும் ஃபிக்ஷன், த்ரில்லர், ஆக்ஷன் நாவல்களை எழுத நினைச்சேன். அப்படி விளையாட்டா எழுத ஆரம்பிச்ச நாவல்தான் ரூபி ரஷ். லண்டனை மையமாக்கி நடக்கும் கதை. 'ரூபி’ என்கிற ஸ்கூல் பையன் தன் நண்பர்களுடன் சேர்ந்து சயின்டிஃபிக் லேப்ல உலகையே அழிக்கப்போகும் அதிசய முட்டையைத் தயாரிக்கிறான். அந்த முட்டையைத் திருட நடக்கும் சதிகளை எப்படி வெல்கிறான் என்பதைப் பற்றிய சயின்ஸ் அட்வென்சர் கதை இது. இந்த நாவலை 10 வயதில் எழுதி முடிச்சுட்டேன்'' என்கிறார் ஹர்ஷிதா.

நாவலை சுலபமாக எழுதிவிட்டாலும் அதை வெளியிடுவது சவாலாகவே இருந்துள்ளது. முதல் புத்தகத்தைச் சொந்த செலவில் வெளியிட்டு இருக்கிறார்கள். புத்தகத்தைப் படித்தவர்கள் பாராட்டிப் பேசியதைப் பார்த்து ஹர்ஷிதாவின் பெற்றோருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.

''முதல் புத்தகத்தை வெளியிட்டபோது இனி புத்தகமே எழுதக் கூடாது என நினைத்தேன். ஆனால் மீடியாக்கள் '12 வயதே ஆன இந்தியாவின் முதல் ஆங்கில நாவல் ஆசிரியர்’ என என் மீது பாய்ச்சிய புகழ்  வெளிச்சத்தில் என்னுடைய அடுத்த நாவல் ஆசைத் துளிர்விட்டது. முதல் நாவலில் செய்த சின்னச் சின்னத் தவறுகளையும் திருத்தி அல்மோஸ்ட் டெஸ்ப்ரேட் என்ற இரண்டாவது நாவலை ஸ்வீடனை மையமாக்கி ஃபிக்ஷன் த்ரில்லராக 300 பக்கங்களில் எழுதினேன். இதற்கும் நல்ல வரவேற்பு. அடுத்ததாக ஆயிரம் பக்க அளவில் 'வேம்ப்பயர்’ பத்தி மிஸ்ட்ரி கலந்த திகில் நாவலை எழுத ஆரம்பிச்சு இருக்கேன்'' என அசரவைக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு