Published:Updated:

யோகா சுட்டி ஸ்ருதி !

யோகா சுட்டி ஸ்ருதி !

யோகா சுட்டி ஸ்ருதி !

யோகா சுட்டி ஸ்ருதி !

Published:Updated:

மேக்னட் சுட்டி ஜெலீனா !

சிறிய பொருளானாலும் கெட்டியாகப் பிடிக்கவேண்டும், இல்லை என்றால் அது கீழே விழுந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால், ஒரு பெண்ணின் கையில் மட்டும் எந்தப் பொருளும் தவறிக் கீழே விழுவதில்லை. இது மாயமோ மந்திரமோ இல்லை சுட்டீஸ்... உண்மைதான்!

யோகா சுட்டி ஸ்ருதி !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

செர்பியாவில் இருக்கும் பத்து வயது ஜெலீனா மாம்சிலோவ், தன் கைவிரல்களால் பொருட்களைப் பிடித்துக் கொள்ளாமல் இருந்தாலும், அவை கீழே விழுவதில்லை. அது மட்டுமா? எந்தப் பொருளாக இருந்தாலும் உள்ளங்கையில் ஒட்டிக்கொள்கிறது. பேனா, செல்ஃபோன், கரண்டி எதுவானாலும் சரி, தொட்டாலே போதும்... காந்தம், இரும்பை ஈர்ப்பதுபோல் இந்தச் சுட்டியின் உடலில் பொருளை ஈர்க்கும் சக்தி உள்ளது. எதனால் இப்படி நடக்கிறது? என்று பல டாக்டர்கள், விஞ்ஞானிகள் ஜெலீனாவை சோதனை செய்கிறார்கள். சீக்கிரமே கண்டுபிடித்துவிடுவார்களாம்!  

யோகா சுட்டி ஸ்ருதி !

யோகா டீச்சர் ஆகவேண்டும் என்றால், அதில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் இல்லையா? ஆனால், நம் நாட்டில் உள்ள ஒரு சுட்டி, யோகாவைக் கற்பித்து வருகிறாள் என்றால் நம்பமுடிகிறதா சுட்டீஸ்!

யோகா சுட்டி ஸ்ருதி !

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலஹாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ருதி பாண்டேதான் அந்தச் சிறுமி.  ஆறு வயதுதான் ஆகிறது. இரண்டு வருடங்களாக யோகா சொல்லித் தருகிறாள். இவளுடைய அண்ணன் யோகா செய்வதைப் பார்த்து, இவளுக்கும் யோகா மீது ஆர்வம் வந்ததாம். உடனே யோகா கற்க ஆரம்பித்தாள், ஆறு மாதங்களுக்குள் (நான்கு வயதிலேயே) 84 யோகா கலைகளைக் கற்று, 'குருவை மிஞ்சிய சிஷ்யை’ என்று பாராட்டப்பட்டாள்.

தற்போது 60 பேருக்கு யோகாப் பயிற்சி அளித்து வருகிறாள். இதில் தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளும் உண்டு. காலையில் 5.30-க்குத் தொடங்கி, ஒரு மணிநேரம் வரை யோகா சொல்லித் தருகிறாள் ஸ்ருதி. 48 வயதாகும் ஒருவர் கூறுகையில்... ''நான் மூன்று மாதங்களாகத் தொடர்ந்து ஸ்ருதி நடத்தும் யோகா வகுப்புக்குச் செல்கிறேன். முன்கோபியாக இருந்த நான், ஸ்ருதி சொல்லித் தரும் யோகா மூலம், கோபத்தை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டேன். சுட்டி டீச்சருக்கு நன்றி'' என்று கூறுகிறார். சுட்டியே டீச்சர் என்றால், அது நமக்குப் பெருமைதானே!   

பச்சோந்திப் பேனா !

யோகா சுட்டி ஸ்ருதி !

ஆப்பிள், ஆரஞ்சு,  மரத்தில் உள்ள இலைகள் எல்லாம்  எவ்வளவு அழகாக உள்ளது... இப்படி நாம் நினைத்த கலரில் பேனா எழுதினால் எப்படி இருக்கும்? என்றுதானே கவலைப்படுகிறீர்கள் சுட்டீஸ்! இதோ உங்கள் கனவை நனவாக்கி இருக்கிறார் கொரியாவைச் சேர்ந்த ஜின்சன் பார்க். இவரும் உங்களைப் போல் நினைத்தாரோ என்னவோ, 'கலர் பிக்டு பென்’ தயார் செய்திருக்கிறார். ஆப்பிள், ஆரஞ்சு, இலை என எதை வேண்டுமானாலும் இந்தப் பேனாவால் தொட்டு ஒரு பட்டனை அழுத்தினால் போதும், அந்தக் கலரை ஸ்கேன் செய்து, உள்ளே இருக்கும் கலர்களை மிக்ஸ் செய்து, நாம் தொட்டுக் காட்டிய கலரில் எழுதுமாம். சுட்டீஸ் அவசரப்பட வேண்டாம்... இது சந்தைக்கு வருவதற்கு சிறிது காலம் பிடிக்கும். இப்பவே அப்பாவைத் தொந்தரவு செய்யாதீங்க!

அதிசய சாக்லேட் !

யோகா சுட்டி ஸ்ருதி !

 அது லண்டனில் உள்ள செயின்ட் பன்கிராஸ் ரயில் நிலையம். தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயிலைப் பிடிக்க வந்து போகக்கூடிய இடம். ஆனால், அன்று மட்டும் அந்த ரயில் நிலையம் கூட்டத்தால் திக்கு முக்காடியது. ஏன் என்று பார்த்தால் ஈஃபில் டவர். பாரீஸில் இருக்கவேண்டியது இங்கு வந்துடிச்சா?! என்று எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.  பிரவுனாக இருக்கிறதே... எதனால் செய்திருப்பார்கள் என்றும் கேட்க நினைத்தார்கள். எல்லோருக்கும் பிடித்தமான பொருளில்தான். அதாங்க சாக்லேட்! 12 அடி உயரத்திற்கு முழுக்க முழுக்க மில்க் சாக்லேட்டால் இந்த ஈஃபில் டவரைச் செய்திருக்கிறார்கள்.  தயாரித்தவர்கள் கௌர்மெட் பிரிட்டீஷ் சாக்லேட் நிறுவனம். இது புதிய ரகங்களில் சாக்லேட்டுகளை வெளியிட உள்ளது. அதற்காகத்தான் இந்த விளம்பரமாம். போட்டோவிலேயே அசத்துதே... நேரில் பார்த்த பல சுட்டீஸ்களுக்கு அள்ளிச் சாப்பிட கை துறுதுறுவென நீண்டு இருக்கும்தானே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism