Published:Updated:

வாகனங்களின் காவலன் !

வாகனங்களின் காவலன் !

வாகனங்களின் காவலன் !

வாகனங்களின் காவலன் !

Published:Updated:

 வாகனங்களின் காவலன் !

வாகனங்களுக்கு ஒரு காவலனைக் கண்டு பிடித்திருக்கிறார், மானாமதுரை ஓ.வி.சி. மெட்ரிக் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.ஆர்.மணிகண்டன். சமீபத்தில், விருதுநகரில் நடந்த மாநில அளவிலான ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்று, முதல் பரிசை வென்றிருக்கும் இவரது கண்டுபிடிப்பின் பெயர் 3G Vehicle Controller. இரு சக்கர வாகனங்களுக்கும், நான்கு சக்கர வாகனங் களுக்கும் ஏற்றவாறு வேறு வேறு குணாதிசயங்கள் கொண்ட இதை, வாகனத்தோடு பொருத்திக் கொள்ளலாம்.

 வாகனங்களின் காவலன் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் 9 வயதிலேயே கம்ப்யூட்டர் ஹார்டுவேரை முழுசா சரிசெய்யக் கத்துக்கிட்டேன்.  எலக்ட்ரானிக் கையும், மெக்கானிக்கலையும் சேர்த்து ஏதாவது கண்டுபிடிக்கறதுல ஆர்வம் அதிகம். அந்த வகையில இந்த 3G வெஹிக்கிள் கன்ட்ரோலரைக் கண்டுபிடிச்சிருக்கேன். 240 கிராம் எடையுள்ள இந்தக் கருவியை, வாகனத்தின் சீட்டுக்கு அடியில பொருத்திட்டாப் போதும், உங்க வண்டியைப் பத்திரமா பார்த்துக்கும். ஹெல்மெட் போட்டாதான் வண்டியே ஸ்டார்ட் ஆகும். பைக்கை ஸ்டார்ட் பண்ணிட்டு, பிறகு சுழற்றிட்டாலும், பத்து நிமிஷம் வார்ன் பண்ணிட்டு வண்டியைத் தானாக ஆஃப் பண்ணிடும். அதேமாதிரி, சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தாலும் ஸ்டார்ட் ஆகாது. வண்டி திருடு போயிட்டா..?அதுக்கும் ஒரு வழி இருக்கு. அதாவது, இந்தக் கருவியில ஒரு மொபைல் இருக்கும். வண்டி காணாமல் போன உடனே, அந்த நம்பருக்கு கால் பண்ணிட்டாலே போதும். தானாகவே வண்டி ஆஃப் ஆகி, தொடர்ந்து அலாரம் அடிக்க ஆரம்பிச்சிடும். அதேமாதிரி, வண்டி விபத்துக்குள்ளானால்... விபத்து நடந்தவுடனே, அந்தக் கருவியில ஏற்கெனவே பதிவு பண்ணி வச்சிருக்கிற ஒரு மொபைல் நம்பருக்கு மெசேஜ் போயிடும். வண்டியோட ஹெட்லைட் வெளிச்சத்தின் அளவை ரோடுக்கு ஏத்த மாதிரி தானாகவே மாற்றிக்கொள்ளும். போக்குவரத்து காவல்துறையில் இருக்கிற கம்ப்யூட்டருக்கும், இந்தக் கருவிக்கும் கனெக்ஷன் கொடுக்கலாம். இதுவும் ஒருவகையில் பாதுகாப்புதான். அதேமாதிரி பெட்ரோல், டீசல் திருட்டையும் தடுக்கலாம். நாலு சக்கர வாகனம்னா எஃப்.சி. (F.C) தேதியை இன்டிமேட் பண்ணும். அந்தத் தேதிக்குள் எஃப்.சி.க்கு அனுப்பலைன்னா, வண்டி ஆஃப் ஆகிடும். திரும்ப ஸ்டார்ட் ஆகாது. அதேசமயம், ஆர்.டி.ஓ. ஆஃபீசுக்கும் தகவல் போயிடும்'' என்கிறார் பெருமையாக!

நம் உடல் அசைவதை அப்படியே ரிசீவ் செய்து, அது மாதிரியே அசையும் ரோபோட்டிக்ஸ் ஒன்றை கண்டுபிடிக்கறது இவர் லட்சியமாம். கலக்குங்க மணி!

-உ.அருண்குமார்
படங்கள்: பா.காளிமுத்து

சுத்தம் செய்யும் காலணி !

'வெளியில் விளையாடிவிட்டு, செருப்புக் காலோடு வீட்டுக்குள்ளே ஓடிவரும் சுட்டிகளால்,  வீடு முழுக்க ஒரே மணலும் தூசியுமாக ஆகி விடுகிறது’ எனப் புலம்பும் அம்மாக்களைத் தானே பார்த்திருக்கிறீர்கள். ஆனால், ஆறு வயது கிறிஸ் ஆனந்த் வீட்டில், ''காலணிகளோடு உள்ளே நடந்தால் வீடே சுத்தமாகிவிடுகிறது'' என்கிறார் கிறிஸ் ஆனந்தின் அம்மா.

 வாகனங்களின் காவலன் !

'என்னடா இது, புதுக் கதையா இருக்கு’ன்னு நினைக்காதீங்க. கிறிஸ் ஆனந்த், தன்னோட காலணிகளில் ஒரு சிறிய சுத்தம் செய்யும் (Vaccum Cleaner போன்ற) கருவியை இணைத்து இருக்கிறான், நடக்கும்போது அருகே கிடக்கும் சிறுசிறு தூசிகள், மணல் போன்றவை சேகரமாகி, காலணியி லேயே ஒரு பை போன்ற அமைப்பில் சேர்ந்துவிடும். தட்ஸ் ஆல்!

இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப் பட்ட National Innovation Foundation என்ற நிறுவனம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி Children’s Creativity and Innovation Day’’ என்று கடந்த ஆறு ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறது.  IGNITE- 2010 என்ற பெயரில் சென்ற ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டியில், யூனியன் பிரதேசங்களையும் சேர்த்து, 29 மாநிலங்களின், 161 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 2139 போட்டியாளர்களில், திருநெல்வேலியில் உள்ள பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில், முதல் வகுப்புப் படிக்கும் கிறிஸ் ஆனந்த் தனது கண்டுபிடிப்புக்காக இந்திய அளவில் மூன்றாம் பரிசை வென்று, அப்துல் கலாம்  கையாலேயே பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றான். மிகக் குறைந்த வயதிலேயே இளம் விஞ்ஞானி விருதும் பெற்று, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்து இருக்கும் சுட்டிக்கு ஒரு சல்யூட் வைப்போமா?

-ஆர்.பரணீதரன்
படங்கள்: எல்.ரஜேந்திரன்

சயின்டிஸ்ட் சுட்டி !

சுட்டீஸ்... வீட்டில் டிஸ்கவரி சேனல் பார்க்கும்போது ஃபோன் வந்தால்,               உடனே வால்யூம் குறைக்கமுடியாம சிரமப்படுவோம் இல்லையா? அந்தப் பிரச்னையைத் தடுக்க, சிவகங்கை மாவட்டம், அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் 'குட்டி சயின்டிஸ்ட்’  எழில்மாறன் ஒரு வழியைக் கண்டுபிடித்து இருக்கிறான். அதன் பெயர் 'ஆட்டோமேட்டிக் ஆடியோ கன்ட்ரோல் சர்க்கியூட்.’ டி.வி-யில இருக்கும் ஸ்பீக்கருடன், தொலைபேசி ரிசீவரில் இருக்கும் ஆர்.சி-ஆர்.ஓ (ஸி.சி  ஸி.ளி)-க்கும் இணைப்புக் கொடுத்தால் போதும், கால் வந்ததும், டி.வி தானாகவே 'ம்யூட்’ ஆகிடும். நாமும் அப்பாகிட்ட திட்டு வாங்க வேண்டியது இல்லை. இதற்காக, மத்திய அரசின் 'இன்ஸ்பயர்’ திட்டத்தில் தேர்வாகி ஊக்கத்தொகை பெற்றிருக்கிறான்.

 வாகனங்களின் காவலன் !

''நீல் ஆம்ஸ்ட்ராங்-னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை மாதிரியே நானும் ஒரு பெரிய விஞ்ஞானியாகி, நிலாவில் கால் வைக்கணும். அதுதான் என்னோட லட்சியமே'' என்கிறான்.

''எங்க பாபுராஜ் மாமா ஒரு எலக்ட்ரீஷியன்.  அவர் வேலை செய்றதப் பார்த்துப் பார்த்து எனக்கும் இதுல ஆர்வம் வந்துடுச்சு. டி.வி நேரடி ஒளிபரப்புல பேசும்போது நிறையபேர் சவுண்டு குறைக்காமலே பேசுறதைப் பார்த்து இருக்கேன். அப்பதான் எனக்கு இந்த ஐடியா வந்தது. இப்ப எல்லாம் ரோட்ல நிறைய விபத்து நடக்குது இல்லியா...? அதுக்கு காந்த விலக்கு விசையைப் பயன்படுத்தி, காந்தங்களை வண்டிகளோட முகப்பில் பொருத்துறது மூலம் வாகனங்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தடுக்கலாம். இதேபோல், வீடுகளில் தண்ணீர்த் தொட்டி நிரம்பி, தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் ஐடியா வச்சிருக்கேன். இதை வொர்க் அவுட் பண்ணிக்காட்றதுதான் என் அடுத்த டார்கெட்'' என்று கண்கள் விரியக் கூறுகிறான் நம் 'சயின்டிஸ்ட் சுட்டி’ எழில்மாறன்.

உ.அருண்குமார்
படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism