Published:Updated:

பள்ளிக்குச் செல்வோம் பாதுகாப்பாக !

எஸ்.கோபாலகிருஷ்ணன்முத்து

பிரீமியம் ஸ்டோரி
##~##

சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் தமிழ்நாட்டையே பரபரப்பாக்கியது. பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்த தாம்பரம் பள்ளி மாணவி ஸ்ருதி, சென்னை சூளைமேடு பகுதியில் ஒரு பள்ளியில் மாடிப்படி கைப்பிடியில் சறுக்கி விளையாடிய மாணவன் விஜய் இருவரும் இன்று நம்மிடையே இல்லை. இதுபோன்ற எந்த ஒரு துயர சம்பவமும் இனியும் நிகழாமல் இருக்க, நாம் எப்படி விழிப்பு உணர்வுடன் இருக்கலாம்..?

பைள்ளி வேனில் செல்லும்போதும் வீடு திரும்பும்போதும் டிரைவர் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டுகிறாரா என்பதை, பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்கள் கவனியுங்கள். அதிக வேகத்தில் சென்றால், டிரைவரிடம் வேகத்தைக் குறைக்கும்படி சொல்லுங்கள். வீட்டுக்குச் சென்றவுடன் பெற்றோரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லிவிடுங்கள். பள்ளி முதல்வர், ஆசிரியரிடமும் சொல்லிவிடுவது நல்லது. வண்டியில் சீட் ஆடுகிறது, ஜன்னல் கம்பி உடைந்து இருக்கிறது என்றாலும் சொல்லுங்கள்.

வைண்டி ஓட்டும்போது டிரைவர் செல்போனில் பேசினால், 'வண்டியை ஓரமாக நிறுத்துங்கள் அங்கிள்’ என்று  டிரைவரிடம் சொல்லுங்கள். அப்படியும் அவர் தொடர்ந்து ஓட்டினால் ஆசிரியரிடம் சொல்லிவிடுங்கள்.

பள்ளிக்குச் செல்வோம் பாதுகாப்பாக !

பெரிய வகுப்பு மாணவர்கள்  எப்போதும் ஜன்னல் ஓரத்தில் உட்காருங் கள். எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையது என்று உணருங்கள்.

ஆட்டோவில் செல்லும்போது நெருக்கி அடித்து உட்கார்ந்து செல்லாதீர் கள். ஆட்டோவில் சைடு கம்பியில் உட்கார்ந்து செல்லவே கூடாது. டிரைவர் உட்காரச் சொன்னாலும், அன்று பள்ளிக்கு லீவு போட்டாலும் பரவாயில்லை என்று உறுதியாக மறுத்துவிடுங்கள்.

இரு சக்கர வாகனங்களில் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர், சர்க்கஸ் போன்று சாகஸங்களில் ஈடுபட வேண்டாம். ஏதேனும் அசம்பா விதம் நடந்து அப்புறம் வருந்துவதைவிட இது போன்ற செயல்களைத் தவிர்ப்பதே நல்லது.  

பள்ளிக்குச் செல்வோம் பாதுகாப்பாக !

பெரிய வகுப்பு மாணவர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் சின்ன குழந்தைகள் பின்பற்றுவார்கள். நீங்கள் சினிமா ஹீரோபோல ஏதாவது சாகசம் செய்தால் அவர்களும் செய்வார்கள்.  

மாடிப்படி பக்கவாட்டுச் சுவரில் சறுக்கி விளையாடுவது, சுவர் அல்லது மரத்தின் மீது ஏறுவது போன்றவை ஆபத்தானது. சிறிய வகுப்பு மாணவர்கள் அப்படி விளையாடுவதை நீங்கள் பார்த்தாலும் அவர்களை அன்புடன் கண்டியுங்கள். பெற்றோரோ, ஆசிரியரோ கண்டிக்கும் எந்தச் செயலையுமே செய்யாதீர்கள்.

பள்ளி நிர்வாகமும் தங்கள் மாணவர்களிடம் பள்ளிப் பேருந்தில் வரும்போது ஏதாவது பிரச்னை ஏற்படுகிறதா என்று அடிக்கடி கேட்பது நல்லது.

நம்மைப் பாதுகாப்பது பெரியவர்கள் கையில் மட்டும் அல்ல நம்மிடமும் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டால் தினமும் பட்டாம்பூச்சியாக பள்ளிக்குச் சென்றுவரலாம்.

  தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2012

தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு,  1993 முதல் இந்தியா முழுவதும் இந்திய அரசின் தொழில்நுட்பத் துறை, தேசிய அறிவியல் தொழில்நுட்பப் பரிமாற்றக் குழு மற்றும் ராஷ்ட்ரிய விக்யான் இவம் புராடியோகி சஞ்சார் பரிஷத் (RVPSP) இணைந்து நடத்துகின்றன. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 27 முதல் 31 வரை தேதிகளில் ஒரு மாநிலத் தலைநகரில் நடக்கும்.

பள்ளிக்குச் செல்வோம் பாதுகாப்பாக !

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாரதப் பிரதமர் பங்கேற்று, மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பட்டமும் பரிசும் வழங்குவார். இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆற்றல். இதன் கீழ் ஆறு துணைத் தலைப்புகள் உள்ளன. அந்தத் தலைப்புகளில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் பங்கேற்பதற்கான ஒரே தகுதி 10-17 வயது மட்டும்தான். பள்ளிக் குழந்தைகள், பள்ளி சாராக் குழந்தைகள், இரவுப் பள்ளியில் படிப்பவர்கள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் என யாரும் பங்கேற்கலாம்.

கருப்பொருள்பற்றிய ஆய்வினை மூன்று மாத காலம் குழுவாக ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டும். குழுவில் குழந்தைகளின் எண்ணிக்கை 2-5 பேர் மட்டுமே. உள்ளூர் பிரச்னைகள், தகவல்கள், செயல்பாடுகள் உள்ளதாக இருக்க வேண்டும். இளநிலை வயதினர் (10-13), 2,500 வார்த்தைகளுக்கு மிகாமலும், மேனிலை வயதினர் (14-17), 3,500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கையைத் தயார்செய்ய வேண்டும்.

பள்ளிக்குச் செல்வோம் பாதுகாப்பாக !

இந்த ஆண்டுக்கான ஆய்வுப் படிவம் பெற கடைசி தேதி: ஆகஸ்ட் 15. படிவத்தை அந்தந்த மாவட்டச் செயலர்/தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் பெறலாம்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள வேண்டிய

எண்: 044-28113630.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு