பிரீமியம் ஸ்டோரி
##~##

பெயர் : இல.கோகுல்
படிப்பு : 10-ஆம் வகுப்பு
பள்ளி : தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளி

சாதனை: மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் இடம்.

'எந்தத் தலைப்பு வேணும்னாலும் கொடுங்கள்... பத்து நிமிஷத்தில் கொடுத்த தலைப்பைப் பற்றி அழகான கட்டுரை எழுதி, உங்க கையில் கொடுப்பான் கோகுல்' என்று பெருமையாகச் சொல்கிறார்கள் அவனது நண்பர்கள்.

கோவை, வரதராஜபுரத்தில் உள்ள தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் கோகுல், 2011-ல் திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதல் இடம் பிடித்தார். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மாநில அளவிலான பேச்சுப் போட்டியிம் கலத்துகொள்ளத் தேர்வாகி இருக்கிறார்.

'எப்ப வேணும்னாலும் போட்டிக்கான தேதிகள் சொல்லிடுவாங்க, அதனால் தினமும் நிறையப் புத்தகங்கள் படிச்சு ரெடியாகிட்டு இருக்கேன்'' என்று கூறும் கோகுல், தான் பேச்சாளராகக் காரணமானவர் பற்றிக் கேட்டால், ''நான் முதன்முதலா பேச்சுப் போட்டிக்காக மேடை எறியது ஆறாம் வகுப்பில். அப்போது என்னை ஊக்குவித்தது தமிழ் ஆசிரியை லோகநாயகி. இப்பவும் எனக்கு நிறையப் புத்தகங்கள் கொடுத்து உற்சாகப்படுத்துறாங்க' என்கிறார்.

ஸ்கூல் ஸ்டார்

பேச்சுப் போட்டி மட்டும் இல்லாமல், மாறுவேடப் போட்டி, கட்டுரைப் போட்டி என அனைத்திலும் கலந்துகட்டி பரிசுகளைக் குவித்து இருக்கிறார். மாவட்ட அளவில் நடந்த தனி நபர் நடிப்புப் போட்டியிலும் கோகுலுக்கு முதல் பரிசு.

'வீட்டில் நாங்கள் இருவருமே படிக்கலை. டீக்கடை நடத்தும் குடும்பம் எங்களுடையது. அதனால், பையனை நல்லாப் படிக்க வைக்கணும்னு நெனச்சோம். இப்படி பல பேச்சுப் போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டு வரும்போது ரொம்பப் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு' என்று ஆனந்தத்தோடு கூறுகிறார் கோகுலின் தாய்.

தமிழ் ஆசிரியை லோகநாயகி, 'கோகுல் வகுப்பில் மிகவும் துடிப்பான மாணவன்.ஆறாம் வகுப்பு படிக்கும்போது தமிழ்ப் பாடத்தில் தொடர்ந்து முதல் மாணவனாக வந்தான். அதனால் அவனை பேச்சுப் போட்டிகளில் கலந்துக்கச் சொன்னேன். எதையும் கத்துக்கணும் என்கிற ஆர்வம் அவனை வளர்த்துக்கிட்டு இருக்கு. அவனுடைய ஆசிரியரா எனக்கு ரொம்ப மகிழ்ச்சி'' என்கிறார் நெகிழ்வாக.

ஸ்கூல் ஸ்டார்

'கலெக்டர் ஆவது  என்னுடைய கனவு. அதற்காக உழைச்சு, நிச்சயமா கலெக்டர் ஆவேன். எந்தச் செயலையும் மகிழ்ச்சியோடு முழு அர்ப்பணிப்போடு செய்தால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்.''

இது கோகுல் சொல்லும் ஸ்வீட் அட்வைஸ். கேட்டுக்கோங்க... ஃப்ரெண்ட்ஸ்!

ஸ்கூல் ஸ்டார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு