Published:Updated:

பாசத்துக்கு விலை இல்லை !

பாசத்துக்கு விலை இல்லை !

##~##

தாத்தா, பாட்டி உறவுகளே இன்றைய சிறுவர்களுக்கு அரிதாகிவிட்டது. காரணம், அவர்கள் எல்லாம் இருப்பது முதியோர் இல்லங்களில். இன்று எத்தனை பேருக்குத் தாத்தாவின் விரல் பிடித்து கடைவீதிக்குச் செல்ல முடிகிறது?  பாட்டியிடம் கதை கேட்டு குறும்பு செய்ய முடிகிறது?

படிப்பு, பாட்டு, நடனம், ஓவியம் என்று அனைத்தையும் காசு கொடுத்துக்  கற்கிறோம். ஆனால், சொந்தங்களைத் தொலைத்துவிடுகிறோம். உள்ளம் முழுக்க அன்பை நிறைத்து இருக்கும் அந்த முதியவர்களைத் தேடி நண்பர்களுடன் ஒரு பயணம் செய்தேன்.

பாசத்துக்கு விலை இல்லை !

வேலூர் மாவட்டத்தில் ஸ்ரீபுரம் பொற்கோவில் அருகே உள்ளது     ஓ.ஆர்.டி என்ற கிராம முன்னேற்ற அமைப்பு. இது எட்டு வருடங்களாக மத்திய அரசு நிதி உதவி பெற்று முதியோர் இல்லமாகச் செயல்பட்டுவருகிறது. இதன் இயக்குனராக மணியன் என்பவர் இருக்கிறார். இங்கே 25 முதியவர்களுக்கு தங்கும் இடம், உணவு, மருத்துவம் ஆகியவை இலவசமாக அளிக்கப் படுகின்றன.

பாசத்துக்கு விலை இல்லை !

எங்களைப் பார்த்ததும் தங்களது சொந்தப் பேரன், பேத்திகளையே பார்த்ததைப் போல் பாட்டிகளின் முகங்களில் அவ்வளவு மலர்ச்சி!

''முதியோர் இல்லங்கள் உருவாவதற்கு காரணம் பிள்ளைகளிடம் அன்பு குறைந்தது மட்டும் அல்ல, இன்றைய காலச் சூழலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வீட்டில் அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் சென்றால்தான் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும் என்ற நிலை, பணம் சம்பாதிக்க வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வயதான பெற்றோரையும் உடன் அழைத்துச் செல்ல முடியாத நிலை போன்றவற்றாலும் முதியோர் இல்லங்கள் உருவாகின்றன'' என்றார் மணியன்.

பாசத்துக்கு விலை இல்லை !

காரணங்கள் எதுவாக இருந்தாலும் அவை இந்த முதியவர்களின் மனக் காயங்களை ஆற்றுவதாக இல்லை. ''காரில் போக வேண்டும் என்றோ, நகைகள் வேண்டும் என்றோ எங்களுக்கு ஆசை இல்லை. பேரன், பேத்திகளுடன் ஒன்றாக இருக்க முடியாமல் போச்சேனுதான் நினைக்கி றோம். நீங்களாவது எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய வேலைக்குப் போனாலும் உங்க பெத்தவங்களைக் கூடவே வெச்சுக் கவனிச்சுக்கங்க'' என்றபோது அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது.

பாசத்துக்கு விலை இல்லை !

மனரீதியாகச் சோர்வுற்று இருக்கும் அந்தப் பெரியவர்களைக் கொஞ்சமேனும் கலகலப்பாக்க  ஆடிப்பாடி மகிழ்வித்தோம். பிஸ்கெட், பழங்களைத் தந்தபோது ''எதுக்கு கண்ணுங்களா செலவு பண்ணி வாங்கிட்டு வந்தீங்க. சும்மா வந்துப் பார்த்தாலே போதுமே... நீங்க முதல்ல சாப்பிடுங்க'' என்று எங்களுக்கு அளித்தபோது பாசத்துக்கு விலை இல்லை என்று புரிந்தது.

பிறகு பாட்டிகளுக்கு மியூஸிக்கல் சேர் போட்டி வைத்தோம். 'அடேங்கப்பா’ என்று சொல்லும் வகையில் சின்ன பெண்களாக மாறி, சுறுசுறுப்புடன் பாட்டிகள் சுற்றி வந்த காட்சி அற்புதம். கிருஷ்ணவேணி என்ற 88 வயது பாட்டிக்காக மற்ற பாட்டிகள் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தனர். கிருஷ்ணவேணி பாட்டி வெற்றி பெற்றதும் பொக்கை வாய் தெரிய குழந்தையைப் போல் சிரித்தார்.

பாசத்துக்கு விலை இல்லை !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு