Published:Updated:

நான் ஜனாதிபதி !

மகா.தமிழ்ப் பிரபாகரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக, ஜூலை 25-ம் தேதி பதவி ஏற்றார் பிரணாப் முகர்ஜி.

1935 டிசம்பர் 11 -ல் மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில்  மிராட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் பிரணாப் முகர்ஜி. பெற்றோர், கமடா கின்கர் முகர்ஜி- ராஜ்லட்சுமி முகர்ஜி. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடத்தில் மேற்படிப்பு முடித்து, சட்டப் படிப்பும் பயின்றவர்.

தபால் துறையில் எழுத்தராகவும், பின்னர் பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். 'தேசர் டக்’ என்ற வங்க மொழிப் பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தவர். இந்தியப் புள்ளியல் துறைத் தலைவர், ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத் தலைவர் எனப் பல அரசுப் பதவிகளை வகித்தவர்.

இவரது தந்தை காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க சட்டமேலவை உறுப்பினராக இருந்தார். தந்தையின் வழியில்  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் பிரணாப்.

நான் ஜனாதிபதி !

1969-ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்தார். இந்திய அரசு இவருக்கு 2008-ல் பத்ம விபூஷன் விருது வழங்கிக் கௌரவித்தது.

 ஜனாதிபதியாகப் பதவி ஏற்று பிரணாப் முகர்ஜி அடியெடுத்து வைத்து உள்ள மாளிகை பற்றி...  

உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை டெல்லியில் உள்ள நமது ராஷ்ட்ரபதி பவன்தான். ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த மாளிகை,  இந்திய, மொகலாய மற்றும் ரோமானிய கட்டடக் கலை பாணிகளைப் பின்பற்றிக் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் கட்டடக் கலைஞரான எட்வின் லண்ட்சீர் லுட்யென்ஸ், ஹெர்பர்ட் பேக்கர் என்ற பொறியாளர்கள் இணைந்து வடிவமைத்தனர். நான்கு மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் 340 அறைகள் உள்ளன. இங்கே உள்ள மொகலாயத் தோட்டம், கட்டடத்துக்கு மேலும் அழகைத் தருகிறது. ஜனாதிபதி மாளிகையை 2011-ல் தபால் தலையாக அரசு வெளியிட்டு உள்ளது.

ஜனாதிபதி... நாடாளுமன்ற அவைகளின் உறுப்பினர்கள், மாநில சட்டசபை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மாநில ஆளுநர்கள், இந்திய சட்டத்துறை தலைமையானவர், உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின்  அதிகாரிகள்,  இந்திய ராணுவத்தின்  தலைமைகள், இந்தியத் தேர்வாணையத்தின் தலைமை உறுப்பினர்கள் (UPSC), மற்ற நாடுகளில் இந்தியாவுக்கான பிரதிநிதிகளை நியமிப்பதும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.

நான் ஜனாதிபதி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு