பிரீமியம் ஸ்டோரி

நிகிதா, 2-ஆம் வகுப்பு, ஆம்பலாபட்டு.

சுட்டி மனசு !

''எங்க அப்பா வெளிநாட்டுல இருக்காங்க அங்கிள். எனக்குப் பிடிச்ச பொருள் எதுன்னு போன்ல கேட்டுக்குவாங்க. அங்கே இருந்து அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க நம்ம ஊருக்கு வரும்போது கொடுத்துவிடுவாங்க. அப்பா அனுப்பிவைக்கிற காஸ்ட்லி பொருள்கள், என் ஃப்ரெண்ட்ஸுங்களுக்கு அவங்களோட அப்பா வாங்கித்தர்ற சாக்லேட், முறுக்கு  மாதிரி சந்தோஷமா இல்லை. அவங்களைப் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அப்பாவோட பைக்ல ஜாலியா வந்து இறங்குறாங்க. அப்பா எப்போ வாருவாரோன்னு வருத்தமா இருக்கு அங்கிள்.''

சம்ருதா, 4-ஆம் வகுப்பு, பொய்யுண்டார்கோட்டை.

சுட்டி மனசு !

''எனக்குத் தினமும் தலை குளிச்சுட்டு ஸ்கூலுக்குப் போகப் பிடிக்கும். தினமும் தலை குளிச்சா ஜலதோஷம் பிடிச்சுக்குமாம். தலை வலிக்குமாம். அம்மா இப்படித் திட்டுறது எனக்குப் பிடிக்கலை அங்கிள். தலையைத் தினமும் நல்லா அலசணும், சுத்தமா வாரி முடிக்கணும். அப்போதான் பொடுகு வராம இருக்கும்னு மிஸ் சொல்லுவாங்க. ஒரு நாள் தலை குளிக்காமப் போனாலும் ஃப்ரீயா இல்லாம படிக்க, விளையாட இன்ட்ரஸ்ட் வராது. அப்போ நான் தண்ணீர் கிடைக்காமக் கஷ்டப்படும் குழந்தைங்களை நினைச்சுப்பேன். அவங்க ரொம்பப் பாவம்தான் அங்கிள். எங்க அம்மா எப்பதான் என்னையப் புரிஞ்சுக்கப்போறாங்களோ...''

விமலேஷ், 3-ஆம் வகுப்பு, தஞ்சாவூர்.

சுட்டி மனசு !

''எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். பாட்டுக்கு ஏற்ற மாதிரி நல்லா டான்ஸ் ஆடுவேன். எங்க அம்மா என்னைக் கால்லேயே அடிப்பாங்க. சில நேரத்துல ஹோம் வொர்க் எழுத மறந்துடுவேன். அப்போ நீ டான்ஸ் ஆடுறதுனாலதான் படிக்கலை, ஹோம் வொர்க் எழுதலைனு திட்டுவாங்க. ஆனா, சின்னப் பிள்ளையா இருக்கும்போது 'ஆடுடா செல்லம்... ஆடுடா கண்ணு’னு கொஞ்சினாங்க. இப்போ ஏன் ஆடுறேன்னு கேட்கிறாங்க. அதுதான் அங்கிள் எனக்குப் புரியலை.''

கமலேஷ், 2-ஆம் வகுப்பு, உப்புண்டார்பட்டி.

சுட்டி மனசு !

''எனக்கு நீச்சல்னா ரொம்பப் பிடிக்கும். குளத்துக்குக் குளிக்கப்போகும்போது நீச்சல் அடிப்பேன். அம்மாகூட இருந்தா அவ்ளோதான். மூக்கைப் பிடிச்சி மூணு முக்குளி போட்டுக் கரை ஏத்திடுவாங்க. 'நீச்சல் அடிச்சுப் பழகுறேம்மா’னு கேட்டா, 'வேண்டாம் நீ ஆழத்துக்கு போய்ருவே... தண்ணியைக் குடிச்சுடு வே’னு பயமுறுத்துறாங்க. அவங்களும் கத்துத் தர மாட்றாங்க. 'பெரிய ஆளா வந்ததும் கத்துக்கலாம்’னு சொல்றாங்க. எப்பப் பெரிய ஆளா வருவேன்னு தெரியலை!''

மதிவதனி, எல்.கே.ஜி., புதுப்பட்டி.

சுட்டி மனசு !

''நான் நல்லாப் படிப்பேன் அங்கிள். ஆனா, என்னைக் கடைசி பெஞ்சுலதான் உட்கார வெக்கிறாங்க. எனக்குக் கடைசி பெஞ்சே பிடிக்கலை. இதனால என் ஃப்ரெண்ட்ஸ்கூட உக்கார முடியலை. முன் பெஞ்சுல ஒரு ஓரத்துலயாச்சும் உக்கார வைக்கலாம்தானே? இதுபத்தி என்னோட அம்மா அப்பாகிட்ட ரிப்போர்ட் பண்ணி இருக்கேன். என்னை ஏன் முன்னாடி உட்காரவைக்க மாட்டேங்குறாங்க தெரியுமா அங்கிள்? நான் ரொம்ப உயரமா இருக்கேனாம். இது என் தாப்பா சொல்லுங்க..?''

யுகேந்திரன், 5-ஆம் வகுப்பு, தஞ்சாவூர்.

சுட்டி மனசு !

''எனக்கு கராத்தேன்னா ரொம்பப் பிடிக்கும். என்னை கராத்தே கிளாஸ்லயும் சேர்த்து இருக்காங்க. ஆனா, கிளாஸுக்குக் கிளம்பும்போது எல்லாம் அடிபட்றாம பாத்துக்க, அடிபட்றாமப் பாத்துகோ’னு அம்மா சொல்றாங்க. கத்துக்கிறபோது அடிபடத்தானே அங்கிள் செய்யும்? நான் இதுவரைக்கும் அடிபடாமத்தான் வர்றேன். இவங்க சொல்றறைக் கேட்கும்போதுதான் அடிபட்டுருமோன்னு பயமா இருக்கு அங்கிள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு