பிரீமியம் ஸ்டோரி
##~##

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட வர்கீஸ் குரியன், கடந்த ஒன்பதாம் தேதி மண்ணுலகைவிட்டுப் பிரிந்தார். அவருக்கு வயது தொண்ணூறு. கேரளத்தின் கோழிக்கோட்டில் பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல், கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் படித்தார். பிறகு, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் பெற்று இந்தியாவுக்குத் திரும்பிய அவர், டாடா நிறுவனத்தில் பணியாற்றினார்.

அப்போதுதான் பால் பொருட்கள் தயாரிப்பு குறித்துப் படித்தார். குஜராத்தில் அரசுப் பாலேடு ஆய்வு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கொஞ்ச நாளில் அந்த வேலை போரடித்தது. வேறு ஏதாவது செய்யலாம் என முடிவு செய்தார். அந்தச் சூழலில் திருபுவன்தாஸ்பாய் படேல் என்ற நண்பருடன் உள்ளூர் பால் கூட்டுறவுச் சங்கத்தைக் காணச் சென்றார். அங்கே பால் வியாபாரிகளின் நிலையைப்

வெண்மை பித்தகர் !

பார்த்ததும் அவர் எடுத்த முடிவுதான், நாட்டின் வரலாற்றைத் திருப்பிப்போட்டது. அங்கேயே இருந்து பால் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க சபதம் எடுத்தார் வர்கீஸ்.

ஆனந்த் பால் கூட்டுறவு நிறுவனம் (அமுல்) மூலம் எல்லாத் தொழில்நுட்பத்தையும் விவசாயிகளுக்குச் சொல்லித்தந்தார். பாலை மட்டும் விற்றால் அது மிகப் பெரிய சந்தையைத் திறந்துவிடாது என உணர்ந்த அவர், பல்வேறு புதிய பால் பொருட்களை உற்பத்திசெய்தார். தனியார் நிறுவனங்கள் எல்லாம் ஒதுக்கிய எருமைப் பாலில் இருந்து பால் பவுடரைத் தயாரித்தார். அவற்றை விளம்பரப்படுத்துவதும் அவசியம் என்று அனைவருக்கும் புரியவைத் தார்.

நாட்டு நடப்பை நகைச்சுவையுடன் தெரிவிக்கும் விளம்பரங்கள் இந்த நிறுவனத்தின் பலம். இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் படிக்காத மக்கள். அவர்களுக்கு எளிய முறையில் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுசேர்த்ததும், அவர்களின் உற்பத்தியை இடைத்தரகர்கள் இல்லாமல் கிடைக்க வழிசெய்ததும், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்தது. பால் கூட்டுறவுச் சங்கத்தை ஆசியாவிலேயே மிகப் பெரிய வெற்றி நிறைந்த பிராண்ட் ஆக உயர்த்தினார். அமுல் நிறுவனத்தின் வெற்றியைக் கண்டு வியந்த இந்திய அரசு, நாடு முழுவதும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த குரியனை அழைத்தது. 'வெள்ளை நடவடிக்கை’ (Operation flood) எனப் பெயரிடப்பட்ட அதுவே இந்தியாவின் வெண்மைப் புரட்சி.

பால் உற்பத்தியில் பற்றாக்குறையில் இருந்த இந்திய தேசம், உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளர் ஆனது. வர்கீஸ் குரியன் 60 ஆண்டுகள் 'அமுல்’ நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் பெற்ற சம்பளம் குறைவே. 'இத்தனை ஏழை, எளிய மக்களின் கனவுகளைத் தாங்குகிறோம் என்பதே நிறைவு தருகிறது. எனக்குப் பாலை அருந்தப் பிடிக்காது, ஆனால், இத்தனை பேரின் பால்காரன் என என்னை அழைத்துக்கொள்வதில் நிறைவு கொள்கிறேன்' எனக் குறிப்பிடுவார்.

வர்கீஸ் குரியனுக்கு உலக உணவுப் பரிசு, பத்ம விபூஷன் முதலிய பல்வேறு விருதுகள் கிடைத்து உள்ளன. விவசாயிகளுக்காக உழைத்த அவருக்கு, சுட்டிகளின் சார்பில் ஒரு ராயல் சல்யூட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு