Published:Updated:

சுட்டி ஸ்டார்ஸ் !

சுட்டி ஸ்டார்ஸ் !

சுட்டி ஸ்டார்ஸ் !

சுட்டி ஸ்டார்ஸ் !

Published:Updated:
சுட்டி ஸ்டார்ஸ் !

ஓலைச் சுவடி !

##~##

புகழ்பெற்ற பல நூல்களை நம் முன்னோர்கள் பனை ஓலையில் எழுதினார்கள். இந்த ஓலைச் சுவடிகளை எப்படித் தயார் செய்தார்கள் தெரியுமா? பனை மரத்தின் ஓலைகளைத் தனித்தனியாக எடுத்து, அதைப் பால் அல்லது தண்ணீரில் வேகவைத்து, நிழலில் காயவைத்து, ஒரே மாதிரியாக நறுக்குவார்கள். பதமாக ஆன பிறகு  எழுத்தாணியைக் கொண்டு அதில் எழுதுவார்கள். பிறகு பட்டுநூல், மஞ்சள் தடவிய கயிறுகொண்டு கட்டிவைப்பார்கள். அப்படி எழுதிய ஓலைகளைத் தேவைப்படும்போது எடுத்து விளக்குக்கரி, கோவைச் செடியின் இலைச்சாறு, ஊமத்தைச் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றைப் பூசுவார்கள். அப்போது எழுத்துகள் நன்கு தெரியும். நீண்ட நாள் பயன்படுத்தி ஓலை உடைந்துபோனாலோ, நைந்து படிக்க முடியாத அளவுக்குப் போனாலோ மாற்று ஓலை எழுதுவார்கள்.

சுட்டி ஸ்டார்ஸ் !

முறையாகப் பராமரிக்கப்பட்டால் இந்த ஓலைகள் அதிகபட்சம் 200 ஆண்டுகள் வரை நல்ல நிலையில் இருக்கும்.

சுட்டி ஸ்டார்ஸ் !

தோப்புக்கரணம் !

இன்னும் சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. விநாயகர் என்றதும் நினைவுக்கு வருவது தோப்புக்கரணம். இந்தத் தோப்புக்கரணம் போடுவது எதற்காக என்று ஒரு கதை இருக்கிறது.

சுட்டி ஸ்டார்ஸ் !

ஒரு சமயம் மகாவிஷ்ணுவின் சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார். அதை அவரிடம் இருந்து திரும்ப வாங்குவது சாதாரணமான காரியமா? அதட்டி மிரட்டி வாங்க முடியாது. அதனால், அவரைச் சிரிக்கவைத்து வாயில் இருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்று மகாவிஷ்ணுவுக்குத் தோன்றியது. உடனே கைகளால் காதுகளைப் பிடித்துக்கொண்டு எழுந்தும் உட்கார்ந்தும் நடனம் மாதிரி ஆடினார். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்ததும் விஷ்ணு எடுத்துக்கொண்டார்.

தோர்பி என்றால் கைகளினால் என்று அர்த்தம்; கர்ணம் என்றால் காது. 'தோர்பி கர்ணம்’ என்றால் கைகளால் காதைப் பிடித்துக்கொள்வது என்று பொருள். இதுவே தோப்புக்கரணம் என்று மாறிவிட்டது.

சுட்டி ஸ்டார்ஸ் !

எதற்காக நான் ?

ஆர்த்தர் ஆஷே என்பவர் ஒரு சிறந்த டென்னிஸ் வீரர். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நிறையக் கடிதங்கள் வந்தன. அதில் ஒரு கடிதத்தில், ''ஏன் கடவுள் உங்களுக்கு இப்படி ஒரு கொடுமையான நோயைக் கொடுத்தார்?'' என்று எழுதி இருந்தது.

சுட்டி ஸ்டார்ஸ் !

அதற்கு ஆஷே எழுதிய பதில்... ''உலகம் முழுவதும் ஐந்து கோடி சிறுவர், சிறுமியர்கள் டென்னிஸ் விளையாடுகின்றனர். அவர்களில் ஐந்து லட்சம் பேர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி விளையாடுகின்றனர். அவர்களில் 50,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதில் 5,000 பேர் தேர்ச்சி அடைகின்றனர். அவர்களிலும் 50 பேர்தான் விம்பிள்டன் மற்றும் கிராண்ட் ஸ்லாமுக்குத் தேர்ச்சி அடைகின்றனர். அவர்களில் நான்கு பேர் அரையிறுதிக்கு முன்னேறுகிறார்கள். அவர்களில் இரண்டு பேர் இறுதிச் சுற்றில் விளையாடி, ஒருவர் மட்டுமே கோப்பையை வெல்வார். அதனை நான் வென்றுள்ளேன். அப்போது எல்லாம் கடவுளிடம் 'எனக்கு எதற்காக இந்த வெற்றியைக் கொடுத்தீர்’ எனக் கேட்டது கிடையாது. இப்போது கேட்டால் முறையாகாது. எனவே, இந்த நோயையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.''

சுட்டி ஸ்டார்ஸ் !

உயிரியல் பூங்கா !

இன்று உயிரியல் பூங்காக்கள் உலகம் முழுவதும் உள்ளன. இப்படி விலங்குகளை ஒரே இடத்தில் பராமரிக்கும் வழக்கம் எப்படி வந்தது?

சுட்டி ஸ்டார்ஸ் !

கி.மு.12 ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆண்டு வந்த அரசருக்குத் திடீரென வித்தியாசமான ஆசை ஒன்று ஏற்பட்டது. தனது பேரரசின் கீழ் இருக்கும் பல வகை விலங்குகளையும் சேகரித்து, ஒரே இடத்தில் வளர்க்க நினைத்தார். அதன்படி அரண்மனைக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் விதவிதமான பிராணிகள் கொண்டுவரப்பட்டன. சீன அரசர் அந்த இடத்துக்கு 'அறிவின் தோட்டம்’ என்று பெயர் சூட்டினார். உலகின் முதல் வனவிலங்குகள் பூங்கா அதுவே.

மாத்தி யோசி !

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார். அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர். அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும். ஆனால், எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.

சுட்டி ஸ்டார்ஸ் !

தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.