Published:Updated:

நாகரிகத் தோட்டங்கள் !

என்.மல்லிகார்ஜுனா

நாகரிகத் தோட்டங்கள் !

என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:
 ##~##

 உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோனின் தொங்கும் தோட்டம் பற்றிப் படித்து இருக்கிறோம். இது என்ன செங்குத்துத் தோட்டங்கள்?

நகரங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கே இடம் போதவில்லை இதில் தோட்டங்களை எங்கே வளர்ப்பது? அதனால், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேட்ரிக் ப்லாங் (Patrick Blanc) என்பவர் இந்த செங்குத்துத் தோட்டங்களை உருவாக்கி உள்ளார். ஹைட்ரோபோனிக் (Hydroponic)முறையில் அமைக்கப்படும்  இந்தத் தோட்டங்களுக்கு மண் தேவை இல்லை. ரசாயன உணவு உட்கொண்டு நீரில் வளரும் தாவரங்களைப் பச்சைப் பசேல் என வீட்டின் உள்ளேயும் வெளிப்புறச் சுவர்களிலும் இப்படித் தோட்டமாக உருவாக்கலாம்.

நாகரிகத் தோட்டங்கள் !

நகரங்களில் மரங்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் கட்டடங்களாக மாறிவிட்டன. இதனால், தூய்மையான காற்றுக்கும் பஞ்சம். சுற்றுச்சூழலும் மாசடைந்து வருகிறது. இதைச் சமாளிக்க இப்படி அலுவலம், வீடு, வணிக வளாகம் போன்ற இடங்களில் செங்குத்துத் தோட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். நியூயார்க், ஹாங்காங், சிங்கப்பூர், ஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள கட்டடச் சுவர்களுக்கு இந்தச் செங்குத்துத் தோட்டங்களை அமைத்து அசத்தி வருகிறார் பேட்ரிக். இதனால் இயற்கைச் சூழல் உருவாகிறது. காற்று மாசுபடுவதும் தடுக்கப்படுகிறது.  

நாகரிகத் தோட்டங்கள் !