Published:Updated:

வியப்பூட்டும் வீரப் பூங்கா !

வியப்பூட்டும் வீரப் பூங்கா !

வியப்பூட்டும் வீரப் பூங்கா !

வியப்பூட்டும் வீரப் பூங்கா !

Published:Updated:
##~##

பெங்களூரில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது... தேசிய ராணுவ நினைவுப் பூங்கா. 9.5 ஏக்கர் பரப்பளவில், நாட்டுக்காகப் போரிட்டு இன்னுயிர் நீத்த சுமார் 24 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களின் பெயர்கள் பிரமாண்டமான கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. தவிர, பார்வையாளர்களைக் கவரும் விதமாக நிஜ விமானம், பீரங்கி, ராணுவக் கவச வாகனம், போர்க் கப்பல், ராணுவத்தின் பலவிதத் தளவாடங்கள், இந்தியாவின் பிரமோஸ், பிருத்வி ஆகிய ஏவுகணைகளின் மாடல்கள் இங்கே நிறுவப்பட்டு நிஜம்போல் காட்சி அளிக்கின்றன.

வியப்பூட்டும் வீரப் பூங்கா !

இந்த நினைவுப் பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடி மகிழவும்  இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இன்னிசை நீரூற்று இருக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாகக் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் மின்சாரம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், இந்த இடத்துக்குத் தேவைப்படும் மின்சாரம் சூரிய ஒளி மூலம் மட்டுமே பெறப்படுகிறது.

பெங்களூருக்குப் போனால் இந்தப் பூங்காவை மிஸ் பண்ணிடாதீங்க!

வியப்பூட்டும் வீரப் பூங்கா !