''ஒரு காலத்தில், அதாவது 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நாம் இப்போது நின்றிருக்கும் இந்த இடம் கடல் சூழ்ந்த பகுதியாக இருந்தது'' என்றார் சுப்ரமணியன்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ளது சாத்தனூர் தேசியப் பூங்கா. இங்கே இருக்கும் கல்மரம் இந்தியப் புவியியல் ஆராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப்பட்டுவருகிறது. இங்கே நண்பர்களுடன் சென்றேன்.

எங்களை வரவேற்ற காவலர் சுப்ரமணியன், ''12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் கிரிடேஷஸ் காலம் என்பார்கள். சுனாமி வந்தபோது எப்படிச் சில இடங்களில் கடல் உள்வாங்கிக் காணப்பட்டதோ... அப்படித்தான் இங்கே இருந்த கடலும் உள்ளே 100 கி.மீ. தூரம் சென்றுவிட்டது'' என்றார்.

அப்போது மண்ணுக்குள் புதைந்த ஆமை, பல வகை மீன்கள் மற்றும் மரங்கள் ஆறுகளினால் அடித்து வரப்பட்ட மணல், களிமண் இவற்றால் மூடப்பட்டுக் காலப்போக்கில் கல்லுருவாக மாறிவிட்டன. இதையே கல்மரம் என்கிறார்கள்.

''இங்கே இருக்கிற கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சிராப்பள்ளி பாறையினப் பகுதியில் காணப்பட்ட மரங்கள்'' என்றார் சுப்ரமணியன்.

''இது என்ன மரம் அங்கிள்?'' என்று கேட்டான் பிரசன்னா.

''பூ பூக்காத நிலத்தாவர இனமான, 'கோனிஃபர்ஸ்’ வகை மரம்தான் இது. இதன் அடிமர நீளம் மட்டும் 18 மீட்டர்.''

''இதே மாதிரி கல்மரங்கள் வேற எங்காவது இருக்கிறதா அங்கிள்?'' என்று கேட்டாள் ஐஸ்வர்யா.

''இந்தச் சுற்று வட்டாரப் பகுதிகளில் வரகூர், ஆனைப்பாடி, அலுந்தள்ளிப்பூர், சாரதாமங்கலம் போன்ற ஊர்களின் நீர் ஓடைப் பகுதிகளில் கல்லுருவாகிய மரங்கள் உள்ளன. புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவரால் 1940-ஆம் ஆண்டு இந்தக் கல்மரங்கள் பற்றிய முதல் விவரம் தெரிவிக்கப்பட்டது'' என்றார் சுப்ரமணியன்.

சற்றுத் தொலைவில் இரண்டு கல்மரங்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இவை, விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை என்ற ஊரில் இருந்து கொண்டுவரப்பட்டவை'' என்றார்.

''மரம் கல்லானது மாதிரி வேறு ஏதாவது கல்லாகி இருக்கிறதா?'' என்று கேட்டான் ஞானதீப்.

''ஓ! இதைப் பாருங்கள். நத்தை, ஆமை வடிவில் கல் போல் இருக்கிறனவே... உண்மையில் இவையும் ஒரு காலத்தில் உயிரினமாக இருந்தவைதான். இப்போது கல்லாக மாறிவிட்டன'' என்றார் சுப்ரமணியன்.

''இதை வீட்டுக்கு எடுத்துப் போகலாமா அங்கிள்?'' என்று கேட்டாள் பூஜா.

''நல்லா இருக்கே கதை. இது அரசாங்கத்துக்கு சொந்தமானது. உன்னை மாதிரி மற்றவர்களும் பார்க்க வேண்டாமா? வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

வந்து பார்வையிடுவார்கள்'' என்றார்.

''சும்மா கேட்டேன் அங்கிள். நீங்க சொன்னதை எல்லாம் கேட்கும்போது, நாம் பல கோடி வருடங்களுக்குப் பின்னால் போன மாதிரியும், கடலுக்கு அடியில் இருக்கிற மாதிரியும் தோணுது'' என்றாள் பூஜா.

'இயற்கை அன்னையே உன்னுள் இருக்கும் இன்னும் பல அதிசயங்களை சீக்கிரமே நாங்களும் ஆராய்ந்து கண்டுபிடிக்கக் காத்திருக்கிறோம். அதனால் அவற்றைப் பத்திரமாக வைத்திரு’ என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினோம்.