Published:Updated:

சுபாஷ் தாத்தா... சேலத்து காந்தி !

ர.தேஜஸ்வினி

சுபாஷ் தாத்தா... சேலத்து காந்தி !

ர.தேஜஸ்வினி

Published:Updated:
##~##

'மது இல்லாத இந்தியா’ என்ற கனவை நனவாக்குவதற்காக வித்தியாசமான முறையில் விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார், 80 வயதுத் தாத்தா ஃப்ராங்க்ளின் ஆசாத் காந்தி.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு அருகே 'காலைப் பிடித்துக் கெஞ்சுகிறோம். மது அருந்தி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நாசப்படுத்த வேண்டாம்’ என்ற வாசகம் எழுதிய அட்டையைத் தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு நின்று இருந்தார் அந்தத் தாத்தா. அருகில் இருந்த நபரின் கைகளில், 'நாள் 323’ என்று எழுதிய சிலேட்டு இருந்தது.

உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றதற்கு, ''இப்போ பிரசாரத்தில் இருக்கேன். சாயந்திரம் சட்டக் கல்லூரிக்குப் பக்கத்தில் இருக்கும் காந்தி குடிலுக்கு வந்திடுங்களேன்'' என்றார்.

அன்று மாலை... ஆங்காங்கே எழுதப்பட்டு உள்ள காந்திய சிந்தனைகள், மதுப் பழக்கத்துக்கு எதிரான வாசகங்கள், மகாத்மாவின் படங்கள் என வரவேற்றது காந்தி குடில்.

சுபாஷ் தாத்தா... சேலத்து காந்தி !

கரம் கூப்பி வரவேற்ற தாத்தா, ''எனக்குப் பெற்றோர் வைத்த பெயர், பாலகிருஷ்ணன். எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்துவதற்காகவே 'ஃப்ராங்க்ளின் ஆசாத் காந்தி’ என்று பெயர் வெச்சுக்கிட்டேன். மருத்துவம் படிச்சு இருக்கேன். சேலம் - அழகாபுரம் ஹோலி ஃபிளவர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர். காந்தியச் சிந்தனையைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டதுதான் உலகக் காந்திய இயக்ககம்'' என்றார்.

மது அரக்கனை ஒழிக்க இவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் நிறைய...

''பள்ளிப் பாடத்தில் மதுவின் தீமைகளைச் சொல்ல வேண்டும் என அரசுக்கு இரண்டு ஆண்டு காலம் தொடர்ந்து கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தேன். என் வேண்டுகோள் ஏற்கப்பட்டது என அரசிடம் இருந்து பதில் வந்தது.

சுபாஷ் தாத்தா... சேலத்து காந்தி !

அதைத் தொடர்ந்து, காந்தி சிலை அருகே மதுவிலக்கு பற்றிய பதாகையை ஏந்தி 1,330 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நிற்க முடிவுசெய்தேன். 330 நாட்களைக் தொட்டுவிட்டோம். இன்னும் 1,000 நாட்கள் இப்படிப் பிரசாரம் செய்வோம். இந்த முயற்சியால் ஒரு சிலர் மதுப் பழக்கத்தைக் கைவிட்டாலே... அது மகத்தான வெற்றிதான். மதுவை ஒழிக்க, நீங்களும் உங்களால் முடிந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துங்கள்'' என்றார்.

பேசிக்கொண்டே காபி போட்டு எடுத்து வந்தவர், ''சரி செல்லங்களா... எனக்கு  ஜிம்முக்கு நேரமாச்சு. நம்ம உடம்பை ஆரோக்கியமா வெச்சுட்டு இருந்தால்தான் நம் முயற்சிகளுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.'' என்று சொல்லி விடைபெற்றபோது கவனித்தோம்... அவர் அணிந்து இருந்த டி-சர்ட்டின் பின் பக்கத்தில் ஒரு வாசகம்...

சுபாஷ் தாத்தா... சேலத்து காந்தி !

‘Avoid Alcohol, Save Life’.

கதை சொல்லி...

'கனவு’ காலாண்டு இதழ் 'கதை சொல்லி...’ என்ற நிகழ்ச்சியைப் பள்ளி மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து நடத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஒவ்வோர் ஆண்டும் சிறுகதைப் போட்டியும் நடத்துகிறது. இந்த ஆண்டும் அந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதன் மொத்தப் பரிசுத் தொகை

சுபாஷ் தாத்தா... சேலத்து காந்தி !

5,000/-

10 சிறந்த கதைகள் தேர்வு செய்யப்பட்டு இந்தப் பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும். 2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமே இதில் பங்கேற்கலாம். மூன்று முதல் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் சிறுவர்களுக்கு ஏற்ற கதைகளை அனுப்ப வேண்டும். சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி...

சுப்ரபாரதி மணியன்,
8/2835, பாண்டியன் நகர்,
திருப்பூர்-641 602.
பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றிபெற வாழ்த்துகள்!