Published:Updated:

சுட்டி விஞ்ஞானி

ஒளியால் ஒரு பாடம் !க.ரமேஷ் எஸ்.சிவசங்கர்

சுட்டி விஞ்ஞானி

ஒளியால் ஒரு பாடம் !க.ரமேஷ் எஸ்.சிவசங்கர்

Published:Updated:
##~##

லைட்டிங் எஃபெக்டை வைத்தே சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் மாணவர் லோகநாதன்.

பிரதிபலித்தல் (Reflection) மற்றும் ஒளியின் திசை மாற்றம் (Refraction) ஆகிய விதிகள், பல முறை சினிமாவிலும், பல விளையாட்டு விழாக்களிலும் பார்த்து ரசித்தவை. இதையே அறிவியல் கண்காட்சியில் 'டெமோ’வாகக் காட்டி, தங்கப் பதக்கம் வென்று இருக்கிறார் அவர்.

சமீபத்தில் கோவை, ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் மாநில அளவில் ஓர் அறிவியல் கண்காட்சி நடந்தது. இன்னொவேஷன் சயின்ஸ் எனப்படும் புத்தாக்க அறிவியல் கண்காட்சி அது. அதில் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி குப்பாண்டாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் லோகநாதனும் கலந்துகொண்டார். இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு, 'போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகளும், அதனால் உருகும் மனிதனும்.’

இதுவே சிறந்த படைப்புக்கான தங்கப் பதக்கம் வென்றது. டெல்லியில்  நடைபெற இருக்கும் தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்கத் தகுதி பெற்று இருக்கிறார் லோகநாதன். 

சுட்டி விஞ்ஞானி

'' 'இளைஞர்களைச் சீரழிக்கிற போதைப் பொருட்களின் தீமையை மையமாக எடுத்துக்கோ’னு என் டீச்சர்தான் ஐடியா கொடுத்தார். நான் தங்கப் பதக்கம் வென்றதைவிட, இதே டெமோவை என் பள்ளியில் காட்டினப்ப இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என் ஊர் மக்கள் நிறையப் பேரை அது ரொம்பவே கவர்ந்துச்சு' என்கிறார் லோகநாதன்.  

சுட்டி விஞ்ஞானி

''அறிவியல் எவ்வளவோ முன்னேறினாலும், நம் மக்களிடம் இன்னமும் சில விஷயங்கள்ல அறியாமையும் மூடநம்பிக்கைகளும் இருக்கு. அதை முறியடிக்க, விழிப்பு உணர்வு உண்டாக்கும் வகையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லணும் என்பதுதான் என்னோட ஆசை.  அதற்கான முயற்சிகள்ல தொடர்ந்து ஈடுபடுவேன்.  அதுல ஒண்ணுதான் உருகும் மனிதன். இதில் எதிர்கால லைட்டிங் (Lighting) டெக்னாலஜி பற்றி மாணவர்களுக்கு  வழிகாட்டும் விஷயமும் இருக்கு. போதைக்கு அடிமை ஆகக் கூடாது. சூழ்நிலை காரணமாக ஒருவன் போதைப் பழக்கத்தில் ஈடுபட்டாலும், சரியான கைடன்ஸ் இருந்தால் கண்டிப்பாக மீள முடியும். இதைத்தான் டெமோவாகக் காட்டினேன்'' என்றார் அவர்.

சுட்டி விஞ்ஞானி

இந்த நிகழ்ச்சிக்காக லைட்டிங்கை மிகக் கச்சிதமாக அமைத்து இருந்தார் லோகநாதன். ஓர் உடல், எலும்புக்கூடாக மாறி, அந்த உடலில் இருந்து உயிர் மட்டும் வெளியே வருவதை ஆவி போன்ற லைட்டிங்கில் நிஜம் போலவே காட்டினார். இந்த உத்திதான் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

பொது நல நோக்கத்துடன் அறிவியல் நிகழ்ச்சியை நடத்தி மனதில் இடம்பிடித்த லோகநாதன், ''என்னோட இந்த வெற்றிக்கு அப்பா சுப்பிரமணி, அம்மா கலாமணி, சந்திரன் டீச்சர், நண்பர்கள் பிரபு, சிவக்குமார், ஜவஹர், ஜெகதீஷ்  எல்லோரோட சப்போர்ட்தான் காரணம்' என்ற இளம் விஞ்ஞானியின் கண்களிலும் ஒளி தெரிந்தது.

சுட்டி விஞ்ஞானி