Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !

சில விஷயங்களை எத்தனை முறை செய்தாலும் அலுக்காது என்பதை நிரூபிப்பதுபோல் இருந்தது 520 காந்திகளின் அணிவகுப்பு. கடந்த காந்தி ஜெயந்தி அன்று திருச்சியில் உள்ள ஜெகன்மாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சாதனை முயற்சியாக, 'மெகா காந்திகள் அணிவகுப்பு’ நடந்தது. நிகழ்ச்சியில் குட்டிக் குட்டிக் காந்திகள் வரிசையாக வர, பெரியவர்கள் மலர் தூவி வரவேற்றனர். 520 காந்திகளும் இனிமையான குரலில் 'ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலைப் பாடியபோது பரவச உணர்வு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி, தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி, ஏஷியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் லண்டன் 'எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்’ ஆகிய சாதனை ஆவணங்களில் இடம்பிடித்தது.

பென் டிரைவ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 2016-ம் ஆண்டு நடைபெறப்போகிறது. அதனால், 'அதர் ஐடியாஸ் ஃபார் ரியோ’ (Other Ideas for Rio)என்ற பெயரில், உலகின் பல பகுதிகளில் இருந்து கலைஞர்களை வரவழைத்து, நகரை அழகுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.  அதில் ஒன்றுதான் இந்தச் சிலை. 12 மீட்டர் உயரத்தில் பொடஃபோகோ கடற்கரையில் காட்சி தரும் இந்தச் சிலையை உருவாக்கியவர், ஸ்பானீஷ் கலைஞர் ஜோம் ப்லென்ஸா (Jaume Plensa).ரியோ டி ஜெனிரோவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைச் சுண்டி இழுக்கிறது இந்தத் தலை.    

பென் டிரைவ் !

 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாகிங் போன்றவர்கள் தங்களுடைய 40 வயதுகளில் சாதித்ததை 12 வயதிலேயே சாதித்து இருக்கிறாள் ஆலிவியா மேனிங். உலக அளவில் அதிக ஐக்யூ IQ உடையவர்கள் ஐன்ஸ்டீன், ஹாகிங் இருவரும்தான் என்பது இதுவரை சாதனைப் பதிவாக இருந்தது. அதை முறியடித்து, IQ அளவு 162 என்ற எண்ணிக்கையில் தற்போது நிற்கிறார் ஆலிவியா.

இது அந்த அறிஞர்கள் இருவரையும்விட இரண்டு புள்ளிகள் அதிகம். தற்போது 'மென்சா’ (Mensa) எனும் அமைப்பிலும் ஆலிவியா சேர்ந்து இருக்கிறார். இது மிகப் பழமையானது என்பதோடு உலக அளவில் மிகச் சிறந்த அறிவாளிகள்கொண்ட அமைப்பு.

பென் டிரைவ் !

 படத்தில்  பார்க்கும் அழகான இந்த உருவம் பொம்மை அல்ல, உயிர் உள்ள நிஜப் பெண். அனஸ்டாசியா ஷ்பாஜினா (Anastasiya Shpagina) எனும் 19 வயதான இவர், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். ஜப்பான் நாட்டு அனிமேஷன் கார்ட்டூன் பாத்திரங்களால் கவரப்பட்டு, தனக்கு ஃபுக்காகுமி (Fukkacumi) என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். கார்ட்டூன் பாத்திரம் போன்றே நடை, உடை பாவனை எனத் தன்னை மாற்றிக்கொண்டு நடமாடி வருகிறார்.

பென் டிரைவ் !

'உலகிலேயே மிக உயரமான நாய்’ என்ற கின்னஸ் சாதனைப் பட்டியலில் சமீபத்தில் இடம்பெற்று இருக்கிறது, 'கிரேட்டேன்’ ரகத்தைச் சேர்ந்த 'ஷியஸ்’ என்ற பெயருடைய நாய். இந்த நாய், பாதத்தில் இருந்து தோள் வரை மூன்று அடி எட்டு அங்குலம் உயரம் இருக்கிறது. இதன் எடை 70.3 கிலோ. இதன் உரிமையாளர் அமெரிக்காவில் மிக்ஸிகன் பகுதியில் வசிக்கும் டேனிசி டோர்லேஆவார்.

பென் டிரைவ் !

 யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது பாம்பன் பாலம். 1914-ம் ஆண்டு கெர்ஜர் என்ற தலைமைப் பொறியாளர் வடிவமைத்ததால், அவர் பெயரிலேயே 'கெர்ஜர் பாலம்’ என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இதன் நீளம் 2.66 கிலோ மீட்டர். கப்பல்கள் கடந்து செல்ல 225 அடியில் மனித சக்தியால் இயக்கப்படும் இரண்டு தூக்கு பாலங்கள் உள்ளன. இந்தப் பாலம் அமைக்கப்பட்ட பிறகு, சென்னையில் இருந்து புறப்படும் ரயில், தனுஷ்கோடி வரை செல்லும். அங்கே ரயில் பெட்டிகளைப் பிரித்து கப்பலில் ஏற்றிவிடுவர். அந்தப் பெட்டி இலங்கை சென்று அங்கே உள்ள ரயிலில் இணைக்கப்படும். 2007-ம் ஆண்டு இந்த ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டது. இதற்காக பாலத்தின் எடை 50 டன் அதிகரிக்கப்பட்டது. இதனைத் தாங்கும் வகையில் பாலத்தில் தூண்கள் அமைக்கப்பட்டன. 100 ஆண்டுகளை எட்டும் பாம்பன் பாலம் இந்தியாவின் பாரம்பரியச் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.

பென் டிரைவ் !

 இந்தியாவின் முதல் விமானம் தாங்கிப் போர்க் கப்பல், ஐ.என்.எஸ்.விக்ராந்த் (RII). இப்போது மிதக்கும் அருங்காட்சியகமாக மாறி, மும்பைக் கடற்கரையில் அட்டகாசமாக நிற்கிறது.

இந்தக் கப்பல் 1957-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்டது. 1961-ல் விமானம் தாங்கிப் போர்க் கப்பலாகச் செயல்படத் தொடங்கியது.

192 மீட்டர் நீளமும் 43 கி.மீ வேகமும் கொண்ட இந்தக் கப்பல், இந்திய- பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது. 1997-ல் ஓய்வு அளிக்கப்பட்டது.

இப்போது மும்பையின் 'கேட் வே ஆஃப் இந்தியா’ துறைமுகத்தில் அருங்காட்சியகமாக நம் கப்பல் படையின் சாதனைகளின் சாட்சியாக நிற்கிறது. மாதத்தின் கடைசி வாரங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் பார்வையாளர்களுக்காகத் திறந்துவிடப்படுகிறது. பெரியவர்களுக்கு 40 ரூபாயும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கபடுகிறது.

பென் டிரைவ் !

சீனாவைச் சேர்ந்தவர் ஜாங்க் லியூபான் ஜீன் (Jonk Leuban Jean). இவர், சமீபத்தில் வித்தியாசமான சைக்கிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்தச் சைக்கிளின் முன் சக்கரம் ஐந்து அடி உயரம். பின்னால் சிறியதாக நான்கு சக்கரங்கள் உள்ளன. ''இப்படி உயரமான சக்கரம் அமைத்து இருப்பது பாதுகாப்பானது... ஓட்டுவதற்கும் வசதியாக இருக்கும்'' என்கிறார் ஜாங்க்.