Published:Updated:

வியக்கவைக்கும் விஷ்வக் !

பி.செ.விஷ்ணு

##~##

புத்தகத்தில் இருக்கும் இயற்கைக் காட்சிகளைக் கத்தரித்து சேகரிக்கும் வயதில், தான் காணும் காட்சிகளைக் கேமராவில் உயிரோட்டமாகப் படம் பிடிக்கிறார் விஷ்வக்சேனன்.

சென்னை, வேல்ஸ் பிலாபாங் ஹை இன்டர்நேஷனல் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார் விஷ்வக். ''என் அப்பா சென்னை திரைப்படக் கல்லூரியில் பேராசிரியர். அம்மாவும் திரைப்பட பயிற்சி கல்லூரியை நடத்துகிறார். நான் லீவு நாளில் அங்கே போவேன். லிவிங்ஸ்டன் என்கிற அங்கிள் எனக்கு கேமராவைக் கையாளக் கற்றுக்கொடுத்தார்.' என்கிறார்.

வியக்கவைக்கும் விஷ்வக் !

''இரண்டு வருடங்களுக்கு முன் வேடந்தாங்கல் சென்று இருந்தோம். அப்போது, நாங்கள் கொண்டுசென்ற கேமராவை வாங்கிப் படம்பிடிக்க ஆரம்பித்தான் விஷ்வக். அந்தப் படங்களைப் பார்த்தபோதுதான் புகைப்படக் கலையில் அவனுக்கு இருக்கும் ஆர்வம் புரிந்தது. அவன் திறமையை வளர்க்க உடனடியாக ஒரு நல்ல கேமராவை வாங்கிக் கொடுத்தோம். இப்போது எங்கே சென்றாலும் கேமராவுடனே செல்கிறான்'' என்கிறார் தந்தை வேல்முருகன்.

வியக்கவைக்கும் விஷ்வக் !

விஷ்வக்சேனனின் ஸ்பெஷாலிட்டி, பறவைகள். ''பேர்ட்ஸ்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு சிட்டுக் குருவியின் சத்தம் கேட்டாலும் விட மாட்டேன். தேடிப் பிடிச்சுப் படம் எடுத்துருவேன். கூந்தன்குளம் போய் பால்பாண்டி (பறவை மனிதன் என்று அழைக்கப்படுபவர்) சாரை மீட் பண்ணி, நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.'' என்கிறார் விஷ்வக்சேனன்.

வியக்கவைக்கும் விஷ்வக் !

''போட்டோகிராஃபி தவிர வேறு எதில் ஆர்வம்?'' என்று கேட்டால், ''எனக்கு போட்டோகிராஃபி... போட்டோகிராஃபி... போட்டோகிராஃபிதான். எப்பவாவது கிரிக்கெட் பார்ப்பேன். ஃபேஸ்புக்ல என் போட்டோக்களை அப்லோட் பண்ணுவேன். எதிர் காலத்தில் என்ன ஆவேன்னு ஐடியா இல்லை. ஆனா, இப்போ போட்டோகிராஃபிதான் பிடிக்குது'' என்கிறார் அழகாக!

வியக்கவைக்கும் விஷ்வக் !

காட்டுக்குள்ளே 'க்ளிக்’

அக்டோபர் முதல் வாரமான இயற்கை மற்றும் வனவிலங்குகள் விழிப்பு உணர்வு வாரத்தில்... சேலம் அம்மாப்பேட்டை, ஸ்ரீவித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 'வேர்ல்ட் லைஃப் போட்டோகிராஃபி’ போட்டியை நடத்தினார்கள். அதில் 52 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டார்கள். அவர்களைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, மூன்று மணி நேரம் அவகாசம் கொடுத்து, புகைப்படங்கள் எடுக்கச் சொன்னார்கள்.

வியக்கவைக்கும் விஷ்வக் !

இது பற்றிக் கூறிய பள்ளியின் ஓவிய ஆசிரியர் பாலகிருஷ்ணன், ''இயற்கையைப் பற்றி என்னதான் குழந்தைகளிடம் பாடமாகச் சொல்லிக் கொடுத்தாலும் அது ரீச் ஆவது இல்லை. இப்படி நேரில் அழைத்துச் சென்று செயல்படுத்தும்போது அவர்களாகவே அதை உணர்ந்து நேசிக்கத் தொடங்குவார்கள். அவர்களின் போட்டோகிராஃபி திறமையும் வெளிப்படும்'' என்கிறார்.  

வியக்கவைக்கும் விஷ்வக் !

இதில் பங்கேற்ற மாணவர்களின் புகைப்படங்களுடன் ஆசிரியர் பாலகிருஷ்ணனின் புகைப்படங்களையும் கண்காட்சியாக வைத்தார்கள். புகைப்படம் எடுத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

-வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்.

அடுத்த கட்டுரைக்கு