Published:Updated:

ஒரு கதையில் நாயகி !

ஒரு கதையில் நாயகி !

ஒரு கதையில் நாயகி !

ஒரு கதையில் நாயகி !

Published:Updated:
##~##

''பாட்டி ஒரு கதை சொல்லேன்... அம்மா ஒரு கதை சொல்லேன்''

நீங்கள் இப்படித்தானே கேட்பீர்கள்? ஆனால், யாழினி இதற்கு நேர்எதிர். ''பாட்டி ஒரு கதை சொல்லட்டுமா?'' என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம், சாரதா மகளிர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கிறார் யாழினி. இவரின் 'காடு பெருசா அழகா இருந்துச்சு’ என்ற சிறுகதைத் தொகுப்பு பல பெரிய எழுத்தாளர்களின் பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது.

''என் அப்பா சரவணகுமார், ஒரு கவிஞர். அம்மா ஸ்ரீதேவி, பத்திரிகையாளர். வீட்டுல நான் சத்தம்போட்டுக் கத்தினால்கூட அப்பா அதை ஒரு கவிதையா எழுதிடுவார். அதுவே அம்மாவிடம் கத்தினால், கட்டுரையா எழுதிடுவாங்க. ஆனால், எனக்கு கவிதையோ, கட்டுரைகளோ பிடிக்கிறது இல்லை. கதைகள்தான் பிடிக்கும். அப்பாவிடம் கதையைக் கேட்டால், கவிதை மாதிரிதான் சொல்வார். அம்மா கதை சொன்னா, அது கட்டுரை வாசிக்கிற மாதிரி இருக்கும். அதனால், மூன்று வயது வயதில் இருந்து நானே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்'' என்று பேச்சையும் அழகான கதையைப்போல் ஆரம்பிக்கிறார் யாழினி.

அப்படி இவரே கற்பனையில் உருவாக்கிய 'குட்டி பாப்பா வயிற்றில் பூனைக் குட்டி’ என்ற கதையை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சொல்லி இருக்கிறார்.

ஒரு கதையில் நாயகி !

''அதைக் கேட்டு அப்பாவும் அம்மாவும் ஆச்சர்யப்பட்டாங்க. 'இந்த மாதிரி நீயே யோசிக்கும் கதைகளை எங்களிடம் அடிக்கடி சொல்லு’னு சொன்னாங்க. எனக்கு காடு, ஆறு, மரம், செடி, கொடிகள் சூழ்ந்த இயற்கையான இடங்கள் ரொம்பப் பிடிக்கும். அங்கே உட்கார்ந்து யோசிக்கும்போது நிறையக் கதைகள் தோணும். லீவு நாட்களில் அந்த மாதிரி இடங்களுக்குப் போய்டுவேன். ஆலா மிஸ், இலை பச்சை, காட்டுக்குள்ளே திருவிழா, காடு பெருசா அழகா இருந்துச்சு... இப்படிப் பல கதைகள் எழுதினேன். அதில் 10 கதைகளைத் தேர்வுசெய்து எனக்கே தெரியாமல் 'காடு பெருசா அழகா இருந்துச்சு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை அப்பாவும் அம்மாவும் ரெடி பண்ணினாங்க'' என்ற யாழினியின் முகத்தில் அவ்வளவு பரவசம்.

யாழினியின் 'காடு பெருசா அழகா இருந்துச்சு’ புத்தகம், அழகான வடிவில் பக்கத்துக்குப் பக்கம் பல சுட்டிகளின் புகைப்படங்களுடன் இருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவுக்கு நிறைய கவிஞர்கள், எழுத்தாளர்கள்கள் வந்து வாழ்த்தி இருக்கிறார்கள்.

ஒரு கதையில் நாயகி !

''எங்க வீட்டுக்கே வந்த கவிஞர் அறிவுமதி மாமா, 'உன்னுடைய புத்தகத்தில் உள்ள 10 கதைகளும் படிச்சேன். அற்புதமாக இருந்தது. நீ இன்னும் பெரிய சிகரத்தைத் தொடுவாய்’னு சொல்லி முதுகில் தட்டிக்கொடுத்தார்.  கவிஞர் கல்யாண்ஜி மாமா, 'எழுத்துக் கூட்டிப் படிக்கிற வயதில் ஒரு புத்தகத்தையே படைத்துவிட்டாயே’னு சொன்னார். இது எல்லாம் எனக்கு ரொம்ப உற்சாகத்தைக் கொடுத்து இருக்கு. கண் தெரியாதவங்களைப் பார்க்கும்போது எல்லாம் எனக்கு மனசு கஷ்டமா இருக்கும். அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைப்பேன். நான் இன்னும் பெருசானதும் கண் தெரியாதவங்களையும் சின்னச் சின்னக் குழந்தைகளையும் தேடிப்போய்ப் பார்ப்பேன். அவங்களுக்குச் சிரிக்கச் சிரிக்க நிறையக் கதைகளை உருவாக்கிச் சொல்வேன்'' என்கிறார் யாழினி.

யாழினி எழுதிய 'காடு பெருசா அழகா இருந்துச்சு’ புத்தகத்தில்கூட 'உலகம் முழுவதும் உள்ள விழியற்ற சகோதர சகோதரிகளுக்கும், ஒசூர் உதிரம் அமைப்புக்கும் இந்தப் புத்தகம் காணிக்கை’ என்ற வரிகள் மின்னுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism