Published:Updated:

சன்ஸ் ஆஃப் ராம் !

சன்ஸ் ஆஃப் ராம் !

சன்ஸ் ஆஃப் ராம் !

சன்ஸ் ஆஃப் ராம் !

Published:Updated:
சன்ஸ் ஆஃப் ராம் !
##~##

சமீபத்தில் திரைக்கு வந்து இருக்கும் ஹிந்தி கார்ட்டூன் 3D திரைப்படம், 'சன்ஸ் ஆஃப் ராம்’. இந்தப் படம் குறித்து விமர்சிக்கிறார்கள் ஐஸ்வர்யா, ஸ்ரீநிகா, ஸ்வாதி, லஷ்மி நரசிம்மன் மற்றும் ஹரிஷ்வர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐஸ்வர்யா: ''ராமரின் பிள்ளைகளான லவ, குசா பற்றி என் பாட்டி ஏற்கனெவே சொல்லி இருக்காங்க. இப்பதான் படமாகப் பார்க்கிறேன். ராவணன் வதம், வனவாசம் எல்லாம் முடிஞ்சு அயோத்திக்குத் திரும்பும் ராமர், மன்னராகவும் முடி சூட்டிக்கிறார். அப்போ 'ராவணனின் அசோக வனத்தில் இருந்த சீதை, ராணியாக அரியணையில் உட்காரக் கூடாது’னு மக்கள் எதிர்க்கிறாங்க. அதனால், கர்ப்பிணியாக இருக்கும் சீதை மறுபடியும் காட்டுக்குப் போயிடறாங்க. அங்கேதான் லவ, குசா பிறக்கிறாங்க. ராமரின் குருநாதர் வால்மீகி அவங்களுக்குப் பல்வேறு கலைகளைக் கத்துக்கொடுக்கிறார். சின்ன வயசுலயே வில் சண்டை, வாள் சண்டைனு கலக்கறாங்க லவ, குசா. அப்போ அயோத்தியில் இருக்கும் ராமர், அஸ்வமேத யாகம் செய்யறார். அப்படின்னா என்ன தெரியுமா?''

சன்ஸ் ஆஃப் ராம் !
சன்ஸ் ஆஃப் ராம் !

ஸ்வாதி: ''தெரியுமே! தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த நினைக்கும் மன்னர்கள் பிற நாடுகளுடன் போர் செய்வார்கள். ஆனால், போரில் நிறையப் பேர் இறப்பார்கள் இல்லையா? இதைத் தவிர்க்க அஸ்வமேத யாகத்தை செய்து, ஒரு குதிரையின் நெற்றியில் பட்டயத்தைக் கட்டுவார்கள். அதில் 'இது இன்ன நாட்டு மன்னரின் குதிரை. இது எங்கே எல்லாம் வருகிறதோ அந்த நாடுகள், இடங்கள்  இன்ன மன்னருக்குச் சொந்தம். இந்த முடிவை எதிர்க்க நினைப்பவர்கள் குதிரையைக் கட்டிப்போடுங்கள்’ என்று இருக்கும். அப்படி கட்டிப்போட்டால், அவர்களுடன் போர் நடக்கும். அப்படி நம்ம ராமர் அனுப்பிய குதிரை லவ, குசா இருக்கும் இடத்துக்குப் போகுது. ஆனா, அவங்க தைரியமா அதைக் கட்டிப் போட்டுடறாங்க. அப்புறம் நடக்குதுங்கிறதுதான் மிச்சக் கதை''

லஷ்மி நரசிம்மன்: படத்தின் ஆரம்பத்தில் காட்டுக்குள்ளே லவ, குசா ரெண்டு பேரும் நண்பர்களோடு சேர்ந்து செய்ற கலாட்டா எல்லாமே சூப்பர். ஏடாகூடமா ஏதாவது செய்துட்டு, சீதையோட கோபத்தில் இருந்து தப்பிக்க 'அம்மா, இந்தப் பூவை உனக்காகவே கஷ்டப்பட்டு பறிச்சுட்டு வந்தோம்’னு சொல்லி சமாளிக்கிறாங்க. ம்... அந்தக் காலத்திலும் பசங்க, அம்மாக்களுக்கு நல்லா ஐஸ்வெச்சு இருக்காங்கனு இதுல இருந்து தெரியுது.''

ஸ்ரீநிகா: ''அது மட்டுமா? ஆரம்பத்தில் வால்மீகி முனிவர் கொடுத்த அபூர்வ சக்தியை நண்பனின் பேச்சைக் கேட்டு விளையாட்டுத்தனமாப் பயன்படுத்தி, காட்டில் பெரிய ஆபத்தை ஏற்படுத்திடறாங்க. அப்புறமா மனம் வருந்தி 'இனி நல்ல செயலுக்கு மட்டுமே நம்ம சக்தியைப் பயன்படுத்தணும்’னு முடிவு செய்யறதும் அவங்க நல்ல மனசைக் காட்டுது''

சன்ஸ் ஆஃப் ராம் !

ஹரிஷ்வர்: ''ஆனா, போர் ஆரம்பிச்சதும் புலியா ஆகிடறாங்க. சத்ருகன், லட்சுமணன்கூட இவங்களைச் சமாளிக்க முடியாமல் திணறும்போது, தியேட்டரில் பயங்கர கைதட்டல். நான்கூட விசில் அடிச்சேன். கடைசியில் ராமர் வர்றப்ப, என்ன ஆகுமோனு பயமா இருந்துச்சு. நல்லவேளை வால்மீகி வந்து, 'இவங்க உன் பிள்ளைகள்தான்’னு சொல்லி எல்லோரையும் சேர்த்துவைக்கிறார்.''

ஐஸ்வர்யா: ''அமர் சித்ர கதாவும் கார்ட்டூன் நெட்வொர்க்கும் சேர்ந்து இந்தப் படத்தை எடுத்து இருக்காங்க. லைன் டிராயிங் கேரக்டரையே 3ஞி டெக்னிக்கில் உருவாக்கி இருக்கிறது சூப்பர். லவ, குசாவின் நண்பர்களாக வரும் சோஹன், மங்கள் கேரக்டர்களை குறும்பா உருவாக்கி இருக்காங்க.  பாதாளம் மாதிரியான அதிசய இடமும் அங்கே இருக்கும் கந்தர்வா கேரக்டரும் மறக்க முடியலை.''

ஸ்வாதி: ''லவ, குசா நண்பர்களுடன் காட்டில் இருந்து அயோத்திக்குப் போகும்போது வரும் 'அயோத்தியா... அயோத்தியா’ பாட்டும் கலக்கல். ஆனா, ஒரு வருத்தம். கடைசியில் சீதை மட்டும் அயோத்திக்கு வர மாட்டேனு சொல்லிட்டு பூமியைப் பிளந்துக்கிட்டு உள்ளே போய்டறாங்க. பாவம் லவ, குசா அவங்க அழுதப்ப நானும் அழுதுட்டேன். சீதையும் அவங்களோடு அயோத்திக்குப் போய் இருக்கலாம்லே?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism