காந்தி, சச்சின், அமிதாப், அர்னால்டு என உலகப் பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாட்ஸ் (Madam Tussauds) அருங்காட்சியத்தில் இருப்பது தெரிந்த விஷயம்தான். புதிய செய்தி... ஏலியன் மெழுகு உருவச் சிலை. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1982-ல் வெளிவந்த ஈ.டி (E.T.) திரைப்படத்தில் வரும் வேற்றுக்கிரகவாசியின் உருவம் அனைவரின் மனதைக் கொள்ளைகொண்டது. இந்தப் படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இந்த ஏலியன் மெழுகுச் சிலையை உருவாக்கி இருக்கிறார்கள். ஈ.டி. படத்தில் சுட்டிகள் ஏலியனை சைக்கிளில் கூட்டிச்செல்வதுபோலவே, அருங்காட்சியகத்தின் ஊழியர், ஏலியன் மெழுக்குச் சிலையை சைக்கிளில்வைத்து ரவுண்டு அடிக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் சுட்டிகளின் கணிப்பு மீண்டும் துல்லியமாகி இருக்கிறது. கடந்த 1988-ல் இருந்து நிகலோடியன் டி.வி. சேனல், 'கிட்ஸ் பிக் தி பிரெசிடென்ட்’ என்ற மாதிரி அதிபர் தேர்தலை நடத்துகிறது. இதன்படி, அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, நாடு தழுவிய அளவில் சுட்டிகளிடம் வாக்கெடுப்பு நடைபெறும். அதில் வெற்றி பெறும் வேட்பாளர் 'சுட்டிகள் தேர்ந்தெடுத்த அதிபர்’ என்ற பெயரில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும்.

அந்த வகையில், அண்மையில் நடத்தப்பட்ட மாதிரித் தேர்தலில் 5 லட்சத்துக்கும் மேலான சுட்டிகள் ஆன்லைன் மூலம் வாக்களித்தனர். அதில் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். கடந்த ஆறு தேர்தல்களில் ஐந்து முறை சுட்டிகளின் கணிப்பு தப்பவில்லை. இந்த முறையும் மிகச் சரியாக இருந்தது. ஒபாமா நிஜத் தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் ஆகிறார்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 103 மாடிகள்கொண்ட 'வில்லிஸ் டவர்’ கட்டடம் மீது ஏறி சரித்திரம் படைத்து இருக்கிறார், ஸாக் வாவ்டர். இதில் என்ன சிறப்பு?

'பயோனிக்’ செயற்கைக்காலுடன் இவ்வளவுப் பெரிய கட்டடத்தில் ஏறிய முதல் நபர் இவரே. மோட்டார் சைக்கிள் விபத்தில் தனது வலது காலை இழந்த வாவ்டருக்கு, சிகாகோ மறுவாழ்வு நிறுவன ஆய்வாளர்கள் 'பயோனிக்’ செயற்கைக்காலைப் பொருத்தினர். மனிதனின் சிந்தனைக்குக் கட்டுப்பட்டு நடப்பதே இந்த வகைச் செயற்கைக்காலின் ஸ்பெஷல்.

வாவ்டர் கட்டடத்தில் ஏறியபோது, அந்தக் காட்சியை த்ரில் படத்தைக் காண்பதுபோல் வியந்து பார்த்தனர் சிகாகோ மக்கள். வெற்றி இலக்கைத் தொட்ட வாவ்டர், ''என் செயற்கைக்கால் தனது பங்களிப்பை அளித்தது; நான் எனது பங்குக்கு முயன்றேன். வெற்றி சாத்தியமானது'' என்றார் குதூகலத்துடன்!

ஆறு வயது சிறுமிதான்... ஆனால், உலகமே அவள் விரல் நுனியில். அந்த லிட்டில் ஜீனியஸின் பெயர் மேகாலி மால்பிகா ஸ்வைன். ஒரு நாட்டின் பெயரைக் கேட்டால் போதும். ஒரே நொடியில் உலகப் படத்தில் அவளின் விரல் அந்த நாட்டின் மீது இருக்கும். அத்துடன் நாம் கேட்காமலேயே அந்த நாட்டைச் சுற்றி உள்ள அண்டை நாடுகளையும் படபடவெனச் சொல்லி அசத்துகிறாள்.

ஒடிஷா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள டிஏவி பப்ளிக் ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள் மேகாலி. ஏ,பி,சி,டி சொல்லும் இந்த வயதில் ஒரு நாட்டின் தலைநகரம், நாணயம், முக்கிய இடங்கள், நதிகள், மலைகள் எனக் கடகடவெனச் சொல்லி கேட்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறாள் மேகாலி.

யானை, மனிதர்களைப் போல் பேசுமா? 'வாய்ப்பே இல்லை’ என்று சொல்வீர்கள். ஆனால், தென் கொரியாவில் கோஷிக் எனும் ஆண் யானை பேசுகிறது.

எவர்லேண்ட் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரே யானை கோஷிக். ஐந்து ஆண்டுகளாக மனிதர்களுடன் மட்டுமே பழகிவரும் இந்த யானைக்கு, கொரிய மொழியில் சில வார்த்தைகளைப் பராமரிப்பாளர்கள் சொல்லித் தந்தார்கள். அதை அப்படியே திரும்பச் சொல்லி வியப்பில் ஆழ்த்தியது. மனிதர்களைப் போல் பேச நாக்குக்குப் பதிலாகத் தனது துதிக்கையை வாய்க்குள் நுழைத்து வார்த்தைகளை உச்சரிக்கிறது.

''அன்னயோங்'' (ஹலோ), ''அஞ்சா'' (உட்கார்), ''அனியா'' (இல்லை), ''நியோ'' (படுத்துக்கொள்) மற்றும் ''ச்சோஹா'' (நன்று) ஆகிய ஐந்து சொற்களைச் சரியான உச்சரிப்பில் சொல்லும் கோஷிக், இப்போது தென் கொரியா மட்டும் இன்றி, உலக அளவில் பிரபலம். இந்த யானையைச் சோதனைச் செய்த ஆஸ்திரிய பல்கலைக்கழக நிபுணர்கள் ''ஆம், கோஷிக் மிகச் சரியான உச்சரிப்புடன் பேசுகிறான்'' என்று உறுதி செய்து இருக்கிறார்கள்.