Published:Updated:

சுட்டி நியூஸ்

இது எங்க ஏரியா

சுட்டி நியூஸ்

இது எங்க ஏரியா

Published:Updated:

சயாமீஸ் இரட்டையர்!

சுட்டி நியூஸ்

 ஒட்டிப் பிறக்கும் இரட்டையரை 'சயாமீஸ் இரட்டையர்’ என்பார்கள். 19-ம் நூற்றாண்டில்  இந்தப் பெயர் வந்தது. தாய்லாந்து நாடு முன்பு சயாம் என்று அழைக்கப்பட்டது. அங்கே 1811-ல் சாங், இங் என்கிற ஆண் குழந்தைகள், உடல் ஒட்டிப் பிறந்தன. பெரியவர்களாகவும் வளர்ந்தார்கள். இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று, பலரின் கவனத்துக்கு ஆளானார்கள். அது முதல் ஒட்டிப் பிறக்கும் குழந்தைகளுக்கு 'சயாமீஸ் இரட்டையர்’ என்ற பெயர் உருவானது. இருவரும் 1874-ல் காலமானார்கள். சராசரியாக ஒரு லட்சம் குழந்தைகளில் ஒன்று இப்படிப் பிறக்குமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 யாருக்காக?

சுட்டி நியூஸ்

அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தையும் திருக்குறள்களையும் இடம்பெறச்செய்தார் அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா. ஒரு முறை சட்டசபையில், ''பேருந்தில் 'யாகாவாராயினும்’ எனும் குறள் உள்ளதே, அது யாருக்கு? ஓட்டுநருக்கா? நடத்துநருக்கா? பயணிகளுக்கா?'' என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஓட்டுநர், நடத்துநருக்கு என்றால், தொழிலாளர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். பயணிகளுக்கு எனச் சொன்னால், மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அப்போது அண்ணா எழுந்து சட்டென இப்படிச் சொன்னார் ''அது, நாக்கு உள்ள அனைவருக்காகவும்.''

அறிவோம் 5

சுட்டி நியூஸ்

பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் குக், 'சுற்றுலாவின் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

உலகில் மொத்தம் 37 வகையான டால்பின்கள் உள்ளன.

தாங்கிப்பிடி, பெறு அல்லது எடு எனப் பொருள்தரும் டெனஸ் (Tenez) என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் 'டென்னிஸ்’.

இந்தியாவில் சூரியன் உதிக்கும்போது, அதன் முதல் ஒளி விழும் மாநிலம், அருணாச்சலப் பிரதேசம்.

நம் உடலின் மிகச் சிறிய எலும்பு, உள் காதில் உள்ளது.

துபாய் ராஜா!

சுட்டி நியூஸ்

பாரீஸ் நகரத்துக்கு ஈஃபிள் கோபுரம் போல் துபாய்க்கு புர்ஜ் கலிஃபா (Burj khalifa). இதன் உயரம் 2,717 அடிகள். இதைக் கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆயின. இதன் 160-வது மாடி வரை 2,909 படிகள் உள்ளன. தவிர, 57 மின்தூக்கிகளும், எட்டு எஸ்கலேட்டர்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 76-வது மாடியில் நீச்சல் குளமும், 158-வது மாடியில் மசூதியும் உள்ளன. இந்தக் கட்டடத்தின் வெளிப்புறத்தை முழுமையாகத் தூய்மைசெய்ய, 36 பேர் நான்கு மாதங்களுக்குப் பணியாற்ற வேண்டுமாம்.

நாய்களுக்கான ரத்த வங்கி!

சுட்டி நியூஸ்

போக்குவரத்து நெரிசல், நகரமயமாக்குதல்  போன்றவற்றால் செல்லப் பிராணிகள் விபத்துக்களில் சிக்குவது அதிகமாகி வருகிறது. அதனால், மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கான ரத்த சேமிப்புக்கு அவசியமாகி உள்ளது. இதில் ஒரு சிறப்பு... இந்தியாவில் நாய்களுக்கான முதல் ரத்த வங்கி சென்னையில் 2010-ல் திறக்கப்பட்டது. இந்த ரத்த வங்கியில் நாய்களுக்கான ரத்தத்தைப் பெறுவதுடன், 20 கிலோ எடைக்கு மேல் உள்ள நாய்கள் ரத்த தானமும் செய்யலாமாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism