Published:Updated:

கார்ட்டுன் வி.ஜ.பி. ! மீட்டிங்...

கார்ட்டுன் வி.ஜ.பி. ! மீட்டிங்...

சோட்டா பீம் !
இரா.நடராசன்

அது ஒரு காடு. இல்லை... இல்லை... காட்டுக்கும் நாட்டுக்கும் இடையில் உள்ள ஒரு பகுதி. அங்கே சிலர் பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். சோட்டா பீம், ராஜீ மற்றும் சுட்கி. கூடவே பீமின் நண்பன் விளையாட்டுக் குரங்கும். அவன் பெயர் ஜாகு.

சோட்டா பீம்: ஏய்... ராஜீ பந்தை வேகமா போடாதே! காணாமல் போய்விடும். ஏ... பார்த்தாயா... தூக்கிவீசி அடித்துவிட்டாய். காட்டுக்குள் போய் தேடலாம் வா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராஜீ: மன்னிச்சுடு! நான் இதை எதிர்பார்க்கலை.

(அப்போது ஒரு சுட்டி பந்துடன் அங்கே வந்தாள்)

சுட்டி: இந்தாங்க உங்க பந்து!

சோட்டா பீம்: நீங்க யாராக இருந்தாலும் ஒரு நன்றி!

கார்ட்டுன் வி.ஜ.பி. ! மீட்டிங்...

ஜாகு: இதை நானே ஒரு தாவலில் எடுத்திருப்பேன். நீங்க யாரு? இங்கே என்ன பண்றீங்க?

சுட்டி: என் பெயர் நஜிமாபேகம். நான் டி.ஆர் பட்டினத்தில் உள்ள பிரைட் ஃப்யூச்சர் ஆங்கிலப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்.  சோட்டா பீம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களை எங்கள் பத்திரிகை சார்பா சில கேள்விகள் கேட்கணும்.

சுட்கி: பீம்... உன்னை பத்திரிகையில் இருந்து பேட்டி எடுக்க வந்திருக்காங்க.

ராஜீ: எங்களையும் கேள்வி கேட்பீங்களா?

கார்ட்டுன் வி.ஜ.பி. ! மீட்டிங்...

நஜிமாபேகம்: உங்க எல்லாரையுமே எங்களுக்குப் பிடிக்கும். பள்ளிக் கூடத்தில் நாங்க எப்பவும் உங்களைப் பத்தி பேசிகிட்டே இருப்போம். உங்க தேசம் தோலக்பூர் தானே?

பீம் : ஆமாம்!  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன், இந்தியாவில் ஒரு கிராமப்புற நாடு தோலக்பூர். எங்கள் மகாராஜா இந்திர வர்மன்!

நஜிமாபேகம்: அவருடைய மகள் உங்களுடைய தோழி தானே?

ராஜீ: ஆமாம்! அவளுடைய பெயர் இந்துமதி. அவளுக்கு பீம் மேல் அலாதி நம்பிக்கை.

சுட்கி: இந்துமதிக்கு மட்டுமல்ல... எங்க தோலக்பூர் வாசிகள் எல்லாருக்கும் பீம்தான் நாயகன்!

நஜிமாபேகம்: சும்மாவா... உங்க நாட்டு மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தீர்க்கிறானே! உங்களை உருவாக்கியவர் யார்?

பீம்: அவர் பெயர் ராஜ் விஸ்வானந்தா (ஸிணீழீ க்ஷிவீsஷ்ணீஸீணீஸீபீலீணீ). அவர்தான் எங்களைப் படைத்த ஓவியர். ராஜிவ் சில்கா எங்களை (ஸிணீழீவீஸ் சிலீவீறீணீளீணீ) இயக்குபவர்.

நஜிமாபேகம்: முதலில் தொலைக்காட்சியில் வந்தது எப்போது?

(அப்போது மரக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு நண்பன் ஜாகு 'அதோ பாருங்க காலியா...’ என்று பாதையை சுட்டிக் காட்டியது. அங்கே மூன்று பேர் வந்துகொண்டிருந்தார்கள்.)

சுட்கி: அந்த குண்டு பூசணிக்காய்தான் காலியா பாகல்வான். சில சமயம் பீமின் நண்பன்...  சில சமயம் எதிரி.

ராஜீ: அந்தக் குட்டிப் பசங்க... இரட்டையர்கள்!

நஜிமாபேகம்: தெரியும். டோலுவும் போலுவும்... அவங்களைப் பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும். சமயத்தில் பால்வென்பூருக்கும் தோலக்பூருக்கும் போட்டி வந்தால் மட்டும் காலியாவோடு ஒற்றுமை ஆவீர்கள் இல்லையா?

பீம்: சரியே! திருடன் மங்கல் சிங்... அந்த ஆளோடு கூட்டுச் சேர்ந்தால் என்னால் காலியாவை எப்படி மன்னிக்க முடியும்?

சுட்கி: பீமின் பலமே லட்டுதான்!

நஜிமாபேகம்: லட்டு சாப்பிட்டா பலம். அதைச் சுவையா செய்வது உங்க அம்மா. டுன் டுன் மாசி! லட்டு விற்பது உங்க அம்மா வேலை அல்லவா?

சுட்கி: நாங்கள் எல்லாருமே அவங்களுக்கு உதவிகள் செய்வோம். அதனால், அம்மா எங்களுக்கும் லட்டு தருவாங்க.

நஜிமாபேகம்: முதல் தொலைக்காட்சிப் பிரவேசம் பற்றிக் கேட்டேனே? அதற்குள் பேச்சு எங்கேயோ போயிடிச்சு!

பீம்: மைட்டி லிட்டில் பீம்... அதுதான் முதல் தொலைக்காட்சித்  தொடர். போகோ   தொலைக்காட்சியில் வந்தது. வருடம் 2008.

நஜிமாபேகம்: இதுவரை 86 தொடர் வந்துள்ள நிலையில், உங்கள் அனைவரையும் சுட்டிகள் மிகவும் நேசிக்கிறோம். எங்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பீம்: துன்பம் செய்பவர்களைப் பார்த்து நாம் பயப்படக்கூடாது அதுதான் எங்கள் குறிக்கோள்.

நஜிமாபேகம்: பாதகம் செய்பவரைக் கண்டால் - நாம்

பயம் கொள்ளல் ஆகாது பாப்பா.

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

என்று பாரதியார் பாடியதைத் தான்  நீங்கள் முன் வைக்கிறீர்கள். உங்கள் வெற்றி தொடரட்டும். வாழ்த்துக்கள்!.

பீம்: மிக்க நன்றி!