Published:Updated:

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

சுட்டி நியூஸ்

Published:Updated:
சுட்டி நியூஸ்

பொன்னு தொட்டான்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொன்னு தொட்டான் என்ற குருவியை ஆங்கிலத்தில் பிட்டா (Pitta) என்பார்கள். ஹிந்தியில் நவ் ரங். அதாவது, ஒன்பது வண்ணங்கள். இதன் உடலில் ஒன்பது வண்ணங்கள் இருக்கும். ஆறு மணிக் குருவி, தோட்டக் கள்ளன், காசிக் கட்டில் குருவி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது எளிதில்  கண்களுக்குத் தென்படாது. காரணம், இவை மற்ற பறவைகளைப் போல் உயரப் பறக்காமல், மரங்களில் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும். இரை தேடும்போதும் தரையில் சருகுகளுக்குக் கீழே நுழைந்து புழு, பூச்சிகளைத் தேடி உண்ணும்.

சுட்டி நியூஸ்

மெழுகுவத்தியும் கைகுட்டையும்!

மெழுகுவத்தியைக் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள். பிறந்த நாள் கேக்கில் மெழுகுவத்தியை ஏற்றி, ஊதி அணைப்பதை அறிமுகப்படுத்தியவர்கள்... ஜெர்மானியர்கள்.

சுட்டி நியூஸ்

கைகுட்டையை முதலில் அறிமுகப்படுத்தியவர் இங்கிலாந்து மன்னரான ஃபிரடெரிக். ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரும், பெரும் செல்வந்தர்களுமே கைகுட்டையைப் பயன்படுத்தினார்கள். அவை வட்டம், சதுரம் எனப் பல வடிவங்களில் இருந்தன. 'கைகுட்டை சதுரமாக மட்டுமே இருக்க வேண்டும்’ என்று நினைத்தார், ஃப்ரான்ஸ் நாட்டு ராணியான மேரி. அதைத் தன் கணவர் 16-ம் லூயி இடம் தெரிவித்தார். அவர் ஆணையின்படி கைகுட்டை சதுரமானது.

 காற்றினால் ஆபத்து!

உலகில், 53 சதவிகித நோய்கள் காற்றினால் பரவுகின்றன. நச்சுக் காற்று, தீமை தரும் தூசி, நோய்க் கிருமிகள், வெப்பமும் குளிரும் மாறி மாறி வருதல் போன்ற காரணங்களால்தான் காற்று நமக்குக் கெடுதல் செய்கிறது என்கிறார்கள்  வல்லுநர்கள். நிலக்கரி சுரங்கப் பணியாளர்களுக்குக் காற்றுதான் எதிரி. அங்கே உள்ள கரி, காற்றில் உள்ள ஆக்சிஜன் உடன் இணைந்து, கார்பன்-டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை உண்டாக்குகிறது. இவை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அழித்துவிடும்.  

சுட்டி நியூஸ்

காற்றை நுழையவிடாமல் கதவு, ஜன்னல்களை மூடிக்கொண்டாலும்  ஆபத்துதான். மூடிய அறைக்குள் கார்பன் மோனாக்ஸைடு மூலம் மெனிஸ்கோசைட்ஸ் என்னும் கொடிய பாக்டீரியாக்கள் உண்டாகின்றன. இவை உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும்.

 கொண்டாட ஒரு தீவு!

சுட்டி நியூஸ்

இந்தியாவில் உள்ள மிக அழகிய தீவுகளில் மஜுலி தீவும் ஒன்று. அசாம் மாநிலத்தில் உள்ள இந்தத் தீவு, ஆசியக் கண்டத்தின் மிகப் பெரிய நன்னீர்த் தீவு. இது பிரம்மபுத்திரா நதியின் நடுவில், 1,250 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்து உள்ளது. இந்தத் தீவின் பழங்குடி மக்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள். இங்கே நெல்தான் முக்கிய உணவுப் பொருள். நூற்றுக்கணக்கான ரகங்களில் நெல் விளைவிக்கப்படுகிறது. இங்கு, 144 கிராமங்கள் உள்ளன. சுமார் 1,50,000 பேர் வசிக்கிறார்கள். இவர்கள் படகு ஓட்டுவதில் வல்லவர்கள். புராணக் கதைகளின் கதாபாத்திரங் களைவைத்து இவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் மிக அற்புதமாக இருக்கும்.

 சார் போஸ்ட்!

சுட்டி நியூஸ்

பிரிட்டன் பெர்மிங்காம் நகர் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில், கட்டடச்  சீரமைப்புப் பணி நடந்தது. அங்கே இருந்த ஒரு தபால் பெட்டியை அப்படியே விட்டுவிட்டார்கள். இது தெரியாமல் பலர் அந்தப் பெட்டியில் தபால்களைப் போட்டுவந்தார்கள். இந்த விவரம் உயர் அதிகாரிகளுக்கு சமீபத்தில்தான் தெரிந்தது. அங்கே சென்று பெட்டியைத் திறந்து பார்த்தபோது, 1989-ல் போடப்பட்ட தபால்கள் தூசி படிந்து இருந்தன. உடனே அந்தத் தபால்களை, உரியவர் களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார்கள். (தபால்துறையில் இது எல்லாம் சகஜமப்பா!)