Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
பென் டிரைவ் !

ஜப்பானைச் சேர்ந்த 30 வயது இளைஞர், கெனிச்சி இத்தோ. குரங்கு போல் நான்கு கால்களில் தாவித் தாவி ஓடுவதில் கில்லாடி. இதற்காக இவர்  கடந்த ஒன்பது ஆண்டுகளாக உயிரியல் பூங்காக்களுக்குச் சென்று குரங்குகளின் செய்கைகளைக் கண்காணித்து இருக்கிறார். 'குரங்கு மனிதன்’ என்று அழைக்கப்படும் இவர், சமீபத்தில் 17.47 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் குரங்குபோல் ஓடிப் புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் 1 நிமிடம் 11 வினாடிகள் என்ற தனது 2008 சாதனையையும் முறியடித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பென் டிரைவ் !

 உலக அளவில் முக்கிய தினங்களை கூகுள் தனது வலைப் பக்கத்தில் சிறப்பிக்கும். அதன்படி, Google என்ற எழுத்துகளின் வடிவங்களில் கண்ணைக் கவரும் கலை அம்சங்களும், ஆழமான அர்த்தங்களும் இருக்கும். இது, 'கூகுள் டூடுல்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தையட்டி, இந்திய மாணவர்களுக்கு டூடுல் போட்டியை நடத்தியது கூகுள். 'வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது போட்டியின் தலைப்பு. நாடு முழுவதும் இரண்டு லட்சம் சிறுவர், சிறுமியர் தங்கள் கற்பனையில் டூடுல்களை வரைந்து அனுப்பினர். இதில், சண்டிகரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், அருண் குமாரின் டூடுல், தேசிய அளவில் முதல் இடம் பெற்றது.

பென் டிரைவ் !

 அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் கலை அருங்காட்சியகத்தில், 'லைஃப்லைக்’ (LifeLike) என்ற பெயரில் சென்ற நவம்பர் 11 முதல் 2013 ஜனவரி 27 வரை வித்தியாசமான கண்காட்சி நடைபெறுகிறது. அப்படி என்ன வித்தியாசம்? வீட்டில் இருக்கும் நாற்காலிகள், மேஜைகள் போன்ற சின்னச் சின்னப் பொருட்கள் மிகப் பிரமாண்ட உருவங்களிலும், ரயிலின் உட்பகுதி, லிஃப்ட், கதவுகள் போன்ற பெரிய பெரிய விஷயங்கள் மிகச் சிறிய உருவிலும் அமைத்து அசத்தி இருக்கிறார்கள். உலக அளவில் 1960-களில் இருந்து இன்று வரையிலான 50-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் படைப்புகள் இங்கே உள்ளன.

ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என வெவ்வேறு கலைப் படைப்புகளைக்கொண்ட இந்தக் கண்காட்சி, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் குதூகலம் ஆக்குகிறது.

பென் டிரைவ் !

நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக மட்டுமே என்று அசாமில் மகளிர் படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. 'வீராங்கனை’ எனப் பெயர் இடப்பட்டு உள்ள இந்தப் படையில், ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட 100 பெண்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் 16 பேருக்குத் தமிழகத்தில் கமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. சமீபத்தில் இந்த வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. கண்ணைக் கவரும்படியும், பெண்களின் வீரத்தைப் பறைசாற்றும் வகையிலும் சாகசங்களைச் செய்தார்கள் இந்த வீரப் பெண்மணிகள்.

பென் டிரைவ் !

 அமெரிக்காவின் மியாமியில் உள்ள ஃப்ளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியில் வித்தியாசமான முறையில் செயல்வழிக் கல்வி அளிக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான், 'தண்ணீரில் நடத்தல்’ போட்டி. தண்ணீரில் நடப்பதற்காகவே தயாரிக்கப்பட்ட ஷூக்களையும் இதர உபகரணங்களையும்கொண்டு, 175 அடி நீள ஏரியை மாணவர்கள் கடக்க வேண்டும். இதில் கலந்துகொள்பவர்களின் திறமைக்கு ஏற்ப 'ஏ’ கிரேடு வழங்கப்படும். வெற்றியாளருக்கு 500 டாலர் பரிசுத் தொகையும் உண்டு.

பென் டிரைவ் !

ஒரு சிறிய காரில் அதிகபட்சமாக ஆறு பேர் உட்காரலாம். ஆனால், ஒரு மினி காருக்குள் 28 பெண்கள் நுழைந்து புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இந்தச் சாதனை, லண்டனில் உள்ள பாட்டர்ஸ் ஃபீல்டு பூங்காவில் நிகழ்த்தப்பட்டது. அனைவரும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள். தொடர்ச்சியான பயிற்சியின் மூலமே இந்தச் சாதனை சாத்தியம் ஆனதாம். இதற்கு முன்பு, பெண் நாட்டியக் கலைஞர்கள் 27 பேர் ஒரு காருக்குள் தங்களை அடக்கிக் கொண்டதே சாதனையாக இருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism