Published:Updated:

ஹலோ சுட்டி பேசறேன் !

என்.சுவாமிநாதன் எல்.ராஷேந்திரன்

ஹலோ சுட்டி பேசறேன் !

என்.சுவாமிநாதன் எல்.ராஷேந்திரன்

Published:Updated:
ஹலோ சுட்டி பேசறேன் !
##~##

கடந்த 14-ம் தேதி வந்த குழந்தைகள் தினத்தின்போது, திருநெல்வேலி சுத்துவட்டார சுட்டிகளுக்கு டபுள் கொண்டாட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொலைக்காட்சி, ரேடியோக்களில் சுட்டீஸ் புரோகிராம் என்றாலும் காம்பியரிங் பண்றது பெரியவங்கதானே. தப்பித் தவறி சுட்டீஸே தொகுத்து வழங்கினாலும், அதிலும் ஒன்பதாம் வகுப்பு அக்கா, பத்தாம் வகுப்பு அண்ணாவுக்குத்தான் புரோகிராம் கொடுப்பாங்க. ஆனால், குழந்தைகள் தினத்தில் ஹலோ எஃப்.எம்மின் பரபரப்பான காலை ஷெட்யூலில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் செனிகா சேகர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி அசத்தினார்.

பாளையங்கோட்டையில் உள்ள லயோலா நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூலில் படிக்கிறார் இந்த ஜாக்கி தேவதை. ஹலோ எஃப்.எம் அரங்கில் செனிகாவுடன் நாமும் புகுந்துகொண்டோம். கொஞ்சமும் பதற்றம் இல்லாமல், நேயர்களின் தொலைபேசி அழைப்புகளைச் சந்தித்து, தெளிவாகப் பதில் சொன்னார்.

நிகழ்ச்சியின் இறுதி அழைப்பாளராகப் பேசிய ஒரு பெண்மணி, ''ஹலோ குட்டி கேர்ள். நீ சூப்பரா புரோகிராம் பண்றம்மா. தினமும் நீயே பண்ணிடேன்'' என்று கொஞ்சலுடன் கேட்க, ''அய்யோ ஆன்ட்டி இன்னிக்கே ஸ்கூலுக்கு ஒன் அவர் பெர்மிஷன் போட்டிருக்கேன். என்னால முடியாது. நான் ஸ்கூலுக்குப் போகணும்ப்பா'' என்று சொல்லிக் கலகலக்கவைத்தாள் செனிகா.

ஹலோ சுட்டி பேசறேன் !

நிகழ்ச்சி முடிந்த பிறகு செனிகாவிடம் பேசினோம். ''அங்கிள் நான் ஸ்கூல்ல பேச்சுப் போட்டியில பேசி இருக்கேன். இப்பத்தான் முதல் தடவையா ரேடியோவுல பேசினேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அப்பா ராஜசேகர் இங்கேதான் வேலை பார்க்கிறார். அவுங்களோட 'ஹலோ தமிழா’ புரோகிராமை ஆசையோடு கேட்பேன். 'உங்க ஆபீஸ¨க்கு நான் வந்தாப் பேச விடுவாங்களா?’னு கேட்டேன். ரேடியோவில் பேசத் தைரியம் வேணும்னு சொன்னார் அப்பா. எனக்கு என்ன பயம்னு சரி சொன்னேன். நீங்களே சொல்லுங்க அங்கிள், நான் தைரியமாத்தானே பேசினேன்.'' என்றாள் செனிகா.

ஹலோ சுட்டி பேசறேன் !

செனிகாவின் அப்பா ராஜசேகர், ''செனிகா ரொம்ப ஷார்ப். ரேடியோவில் நான் பேசுற மாதிரியே வீட்டில் பேசிக்காட்டுவா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஸ்கூல்ல இருந்து வந்ததும் நேரா என்கிட்டே வந்து, 'அப்பா, ஸ்கூல்ல பென்சில், ரப்பர், பேனானு எதையாவது தொலைப்பாங்க. இதென்ன இவ ஸ்கூல் பேகையே தொலைச்சுட்டு வந்திருக்கானு நீங்க இப்பத் திட்டணும்! ஏன்னா, நான் பேகை தொலைச்சுட்டேன்’னு சொன்னா. இப்படித் தான் செய்த தப்பைக்கூட அழகாச் சொல்லி நம்ம கோவத்தைக் கரைச்சுடுறதில் செனிகா கில்லாடி. நிச்சயமா செனிகா புரோகிராமை நல்லாச் செய்வானு நம்பினேன். பிரமாதமா இருந்தது ஷோ'' என்றார்.

''அங்கிள் எனக்கு இந்த ரேடியோ ஜாக்கி வேலை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. இனிமே அடிக்கடி புரோகிராம் பண்றதுக்கு பெர்மிஷன் கேட்கப்போறேன். நம்ம முதலமைச்சரை எஃப்.எம். மூலமா பேட்டி எடுக்கணும்னு எனக்கு ஆசை. இன்னொரு விஷயம் சொல்லவா? இன்னிக்கு நேரு மாமாவுக்கு மட்டும் இல்ல. எனக்கும் பிறந்த நாள். அதனால், டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. கேக் கொடுக்கிறேன்’ என்றாள்.

ஹலோ சுட்டி பேசறேன் !

சற்று நேரத்தில் ஒட்டுமொத்த ஹலோ எஃப்.எம் குழுவினரும், 'ஹேப்பி பர்த் டே டூ யூ’ பாடி செனிகாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism