Published:Updated:

கலக்கும் கராத்தே கிட் !

பா.காளிமுத்து க.முகமது அபுதாஹீர்

கலக்கும் கராத்தே கிட் !

பா.காளிமுத்து க.முகமது அபுதாஹீர்

Published:Updated:
##~##

''எனக்கு ஜாக்கி சான், ஜெட் லீ படங்களை ரொம்பப் பிடிக்கும். ஒண்ணாங் கிளாஸ் படிக்கிறப்பவே  கராத்தே கத்துக்கிறேன்னு அப்பாகிட்டே அடம்பிடிச்சு சேர்ந்து, கொஞ்ச நாளிலேயே மஞ்சள் பெல்ட் வாங்கிட்டேன்''

பேசிக்கொண்டு இருக்கும்போதே எழுந்து, 'ய்யா... ஊஊ’ எனக் கை கால்களை உயர்த்திப் பயமுறுத்துகிறார், மதுரை இ.பி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் வினோத் கண்ணா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தம்பி, பேச்சு பேச்சாதான் இருக்கணும். உட்காரு'' என்று அமரவைத்தோம்.

2008-ல் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த கோடைக்காலப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு நெருப்பு எரியும் ஓடுகளைத் தனது சின்னஞ்சிறு கைகளால் உடைத்து நொறுக்கி, எல்லோரையும் மிரளவைத்திருக்கிறார் வினோத் கண்ணா.

கலக்கும் கராத்தே கிட் !

''வாரத்துல நான்கு நாட்கள் பயிற்சி எடுக்கிறேன். அந்த நேரத்தில் என் ஃப்ரெண்ட்ஸ் ஜாலியா விளையாடுறதைப் பார்க்கிறப்பக் கொஞ்சம் ஏக்கமாதான் இருக்கும். ஆனா, சாதிக்க நினைச்சா சில விஷயங்களை விட்டுக்கொடுத்துதானே ஆகணும்? அதோடு, 'தோல்வியைக் கண்டு பயப்படாதே. தொடர்ந்து போராடு’னு கராத்தே கிட் படத்துல ஜாக்கி சான் சொல்லி இருக்காரு. அதனால, தோல்வி ஏற்படும்போதும் கராத்தே மேலே ஆசை அதிகம் ஆகுதே தவிரக் குறையலை'' என்கிறார் வினோத் கண்ணா.

இந்த ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம், கோவாவில் நடந்த இந்தியா-ஸ்ரீலங்கா இடையேயான போட்டியில் வெள்ளிப் பதக்கம் என இவரது சாதனைப் பட்டியல் நீள்கிறது.

கலக்கும் கராத்தே கிட் !

''அக்டோபர் மாதம் நடந்த இந்தியா-மலேசியா நாடுகளுக்கான போட்டியில், இந்தியாவில் இருந்து நான் மட்டும்தான் செலக்ட் ஆனேன். மலேசியாவுல கட்டா (ஸ்டெப்ஸ்), குமித்தே (சண்டை) இரண்டு பிரிவுகளிலும் கலந்துகிட்டு தங்கமும் வெள்ளியும் வாங்கினேன். குறிச்சுவெச்சுக்கங்க அங்கிள், பெரியவன் ஆனதும் காமன் வெல்த்ல இந்தியாவுக்கு நிச்சயமாப் பதக்கம் வாங்கித் தருவேன்.'' என்று சொல்லி மீண்டும் 'ய்யா... ஊஊ’ வித்தையை ஆரம்பித்தார் வினோத் கண்ணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism