Published:Updated:

கொண்டாட்டமான குறும்பட விழா !

கொண்டாட்டமான குறும்பட விழா !

கொண்டாட்டமான குறும்பட விழா !

கொண்டாட்டமான குறும்பட விழா !

Published:Updated:
##~##

''ஹைய்யா... இன்னிக்கு முழுக்க ஜாலியாப் படம் பார்க்கப்போறோம். அதுவும் எங்க டீச்சர்ஸ்கூட சேர்ந்து'' என்று குஷியுடன் குதித்தார்கள் அவர்கள்.

'இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2012’ (ICSFF 2012-INTERNATIONAL CHILDREN’S SHORT FILM FESTIVAL) சமீபத்தில் சென்னை, டான்போஸ்கோ வளாகத்தில் நடந்தது. சென்னையின் 30 பள்ளிகளில் இருந்து 1,600 மாணவர்கள் ஆவலோடு வந்தார்கள். இந்தியா, அமெரிக்கா, தைவான், போலந்து எனப் பல நாடுகளின் 20 குறும்படங்கள். குழந்தைகளின் கொண்டாட்டம், கனவுகள், ஏக்கங்கள், திறமைகள் என ஒவ்வோர் படமும் ஓர் உலகத்தைக் காட்டியது. சில படங்களைச் சுட்டிகளே இயக்கி இருந்தார்கள். படங்களைப் பார்த்த சில சுட்டீஸ்களின் 'நச்’ கமென்ட்டுகள்....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொண்டாட்டமான குறும்பட விழா !

செரிலியா ஸ்டெல்லா: ''பிறர் பொருளை அடைய ஆசைப்படுவது தப்பு. இருப்பது போதும் என்கிற மனசு முக்கியம்'' என்பதைச் சொல்லுது 'லுப்தனம் கோரா’ (Lubdhanam Cora) என்கிற இந்திய அனிமேஷன் படம். கதையின் நாயகன் நம்ம வடிவேல் அங்கிள் மாதிரி சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறான்.''

கொண்டாட்டமான குறும்பட விழா !

மேரி மக்தாலீன்: ‘Youche Harbor’என்கிற 10 நிமிடத் தைவான் படம் என்னை ரொம்பப் பாதிச்சது. அந்தப் படத்தில் வரும் பையன், பாட்டியைச் சின்ன வயசுல வெறுப்பான். அவங்க இல்லாதபோது அருமையை உணர்ந்து தேடி அலைவான். அதே மாதிரிதான் நானும். எனக்கு நல்லது செய்த பாட்டியைப் பாராட்டினதைவிட, அவங்க அட்வைஸைக் கேட்டு வெறுத்ததுதான் அதிகம். இனிமே அப்படி நடக்காது. ஐ லவ் மை கிராண்ட்மா வெரிமச்!'  

ஷபிஹனா: ''பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து நடந்துக்கணும்னு சொல்லுது 'மௌன விரதம்’ படம். செருப்பு தைக்கும் அப்பாவுக்குப் பிறந்த ஒரு சிறுமி, பிஞ்சுபோன செருப்போட தண்ணீர் பிடிக்கப் போகிறாள். மற்றவர்களின் வண்ணமயமான செருப்பைப் பார்த்து ஏங்கினாலும், அப்பா தரும் சாதாரணச் செருப்பை சந்தோஷத்தோடு வாங்கிக்கொண்டு மனதை அள்ளிவிடுகிறாள்.''

கொண்டாட்டமான குறும்பட விழா !

க்ரேஸ்: ''தெருவில் தேங்கும் சாக்கடைத் தண்ணீரை எல்லோரும் தாவியும் விலகியும் கடக்கிறார்கள். ஒரு சிறுவன் சுற்றிலும் தேடி, நான்கு செங்கற்களை எடுத்துவந்து போட்டு, பாதையை அமைத்துவிட்டு அமைதியாகச் செல்கிறான். இரண்டு நிமிடமே ஓடினாலும் இதயத்தைத் தொடுகிறது இந்தியக் குறும்படமான 'லைஃப்’.''

பிரவீன்: 'பையனா இருந்தாலும், பொண்ணா இருந்தாலும் அம்மா என்கிற ஒரே ஆதார சக்தியில் இருந்துதான் வர்றோம். அப்புறம் ஏன் ஆண், பெண் வேறுபாடு? பெண்களுக்கும் சம உரிமையைத் தரணும்னு சொல்லுது, 'ஸ்டோரி ஆஃப் சர்க்கிள்’ படம். இத்தனை நாளா என் தங்கை எனக்கு அடங்குறது இல்லைனு அடிச்சுக்கிட்டே இருந்தேன். இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன்.''

கொண்டாட்டமான குறும்பட விழா !

சவன்னா: ‘Chanda ke joote’ மூவியில் வரும் சந்தா கேரக்டர் ரொம்ப பிடிச்சது. பல்பை உடைப்பது, சேற்றில் காலைவிடுவது போன்ற அவளின் சின்னச் சின்னக் குறும்புகள் ரசிக்கவைக்குது. குடிசைப் பகுதியில் இருக்கும் அவளுடைய அம்மா 'தான் படிக்காவிட்டாலும் சந்தா நல்லாப் படிக்கணும்’ என்று நினைப்பது நெகிழவைக்குது''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism