Published:Updated:

குடியரசு தின சுட்டி வி.ஐ.பி !

குடியரசு தின சுட்டி வி.ஐ.பி !

பிரீமியம் ஸ்டோரி

கே.ஆர்.ராஜமாணிக்கம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவசாமி கலாலயாவில் ப்ளஸ்-1 படிக்கும் ஹரிணி, சக மாணவிகள் மத்தியில் ரொம்ப பிரபலம். சினிமா மற்றும் தொலைக் காட்சி விளம்பரங்களில் வரும் சுட்டிகளுக்கு பின்னணிக் குரல் கொடுக்கும் கில்லாடி. அடுத்து, சமீபத்தில் வெளியான 'மைனா’ திரைப்படத்தில் 'கிச்சு கிச்சு தாம்பளம்’ பாடலைப் பாடி இன்னும் பிரபலம் ஆகிவிட்டார்.

குடியரசு தின சுட்டி வி.ஐ.பி !

இப்போது, இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற விஷயம் ஒன்று நடந்திருக்கிறது. ஹரிணி படிப்பிலும் படு சுட்டி. எப்போதும் 'டாப் ரேங்க்’கில் இருப்பார். இவர் பத்தாம் வகுப்பில் எடுத்த மார்க்குகள் இவரை எங்கேயோ கொண்டுபோய் விட்டிருக்கிறது!  

நம் இந்திய அரசிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 'இந்த வருடம் நடைபெற இருக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும்!’ என்ற வரிகளைப் பார்த்து பிரமித்துப் போனார் ஹரிணி.  பயணம், உணவு, தங்கும் இடம், கலந்துகொள்ள வேண்டிய நேரம் என எல்லா விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலில் பள்ளித் தோழிகளுக்குத் தெரிவித்தார். பின், ஆசிரியர்களுக்கு. அனைவரின் வாழ்த்துக்களோடு டெல்லிக்குப் பயணமானார் ஹரிணி.

''ஜனவரி 25 மாலை 5 மணிக்கு 'ஹோட்டல் ஜன்பத்’தில் கல்வித்துறை அலுவலர் ஊர்மிளா பாலசந்தானியின் முன்னிலையில் 25 மாநிலங்களில் இருந்து வந்த பல்வேறு மொழி பேசும் மாணவ, மாணவிகளின் அறிமுகக் கூட்டம் நடந்தது. எங்களின் படிப்பு, கல்வி நிறுவனம் பற்றிப் பேசினோம். 26-

##~##
ஆம் தேதி காலை 6 மணிக்கு ராஜ்பத் சென்றோம். பாதுகாப்புக் கருதி, நிறைய செக்யூரிட்டிகளைத் தாண்டி செல்லவேண்டி இருந்தாலும் சங்கடம் ஏதுமில்லை. கொடிக் கம்பத்துக்கு மிக அருகில்,  முன் வரிசையில் எங்களுக்கான இருக்கைகள். குடியரசுதின அணிவகுப்புகளை மிக அருகிலேயே காண முடிந்தது. அங்கிருந்து பார்த்தால் இந்தியா கேட் தெரியும். முப்படைத் தளபதிகள், ஸ்கௌட், என்சிசி மாணவர்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விஐபிக்கள்,  பொதுமக்கள் என சந்தோஷக் காட்சி தந்தது ராஜ்பத். போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகசங்கள் ஆகாயத்தில் மகிழ்ச்சி தூவின. மூவண்ண பலூன்கள் கீழிருந்து மேல்நோக்கி பறக்கவிடப்பட்டு, அது மெள்ள மெள்ள நம் பார்வையிலிருந்து மறைந்தன. புதிய அனுபவமும், புத்துணர்ச்சி தரும் மகிழ்ச்சியும் இதயத்தில் தங்கியது'' என்கிறார் ஹரிணி.

இந்த வாய்ப்புக் கிடைத்தது எப்படி? இதுபோல் மற்ற சுட்டிகளுக்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இதோ ஹரிணியே சொல்கிறார்.

''மொத்த சப்ஜெக்ட்லயும் ஏ-1 கிரேடு (91-100) வாங்கவேண்டும். இந்திய அளவில் 10-ஆம் வகுப்பில் 25 பேர், 12-ஆம் வகுப்பில் 25 பேர், பல்கலைக்கழக அளவில் 50 பேர் என 100 பேரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்'' என்றார்.

''இந்த வாய்ப்புக்காக திட்டம் போட்டு படிச்சீங்களா?'' என்று கேட்டதற்கு சிரித்தார்.

குடியரசு தின சுட்டி வி.ஐ.பி !

''எனக்கோ, பள்ளிக்கோ இப்படி ஒரு விஷயம் இருக்குங்கறதே கடிதம் வந்த பிறகுதான் தெரியும். நான் எப்போதும் போல்தான் படித்தேன். நான் தேர்வுக்கு முதல் நாள் படிக்கிற பெண். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை நன்கு கவனிப்பேன். ஹோம் ஒர்க்கைக் கரெக்டா செய்திடுவேன். அவ்வளவுதான்! ரொம்ப பெரிய எக்ஸாம்னா... ஒரு 5 மணி நேரம். லாங்வேஜ் மாதிரின்னா... ஒருமணி நேரம் போதும். பரீட்சை நேரத்தில விடியற்காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன். எழுதிப் பார்க்கிறது நல்லதுன்னு அப்பா சொல்லுவார்'' என்றார் ஹரிணி.

குடியரசு தின சுட்டி வி.ஐ.பி !

பரீட்சைக்குத் தயாராகும் நம்ம சுட்டிகள் சார்பாக டிப்ஸ் சிலதைக் கேட்டோம். ''எந்த நேரத்துல எந்த மாதிரி படிச்சா நினைவுல வெச்சிக்க முடியும்னு ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஐடியா இருக்கும். அதையே பயிற்சி பண்றது தான் நல்லது. சிலர், பாயின்ட்ஸ் நினைவு வச்சிக்கிட்டு படிப்பாங்க. சிலர், இமேஜா வச்சிருப்பாங்க.  எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணக்கூடாது. கான்செப்ட்டைப் புரிஞ்சிகிட்டு, கீ வேர்ட்ஸ் தெரிஞ்சுக்கிட்டு அதை சொந்த நடையில எழுதலாம். கணக்குகளை போட்டுப் போட்டுப் பார்க்கணும். பாடப் புத்தகத்தை முழுசும் படிக்கணும்'' என்றார்.

நீங்களும் முயற்சி செய்யுங்கள் சுட்டிகளே... உங்களாலும் முடியும்!

  அட்டை, படம்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு