Published:Updated:

எப்படி தயாராகுது வினாத்தாள் ?

சுட்டி நிருபர் ஜீபா !

கே.யுவராஜன்

என்ன சுட்டீஸ்... எக்ஸாம் டென்ஷன் மெதுவா வர ஆரம்பிச்சுடுச்சா? 'டென்ஷன் எல்லாம் இல்லே ஜீபா... மனசு ஓரத்துல கொஞ்சூண்டு பயம்’ என்று நீங்க சொல்றது கேட்குது. 'கறை நல்லது’ என்கிற மாதிரி கொஞ்சம் பயமும் நல்லதுதான்! அதிலும் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கொஞ்சம் பயம் வந்தாதான் பாஸாகியே தீரணும் என்கிற எண்ணமும் வரும். நல்லா எழுதும் வெறியும் வரும். அப்படி எழுதினா ரிசல்ட் நல்லபடியா வரும். அப்படி வந்தா பாராட்டு வரும். மேலே மேலே படிக்க தன்னம் பிக்கை வரும்...

எப்படி தயாராகுது வினாத்தாள் ?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

'ம்ம்... புரிஞ்சுடுச்சு! இப்ப என்ன சொல்ல வர்றே?’ அப்படின்னுதானே கேட்கறீங்க. டென்ஷன் ஆகாதீங்க... மேட்டருக்கு வந்திடறேன்.

இந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் எப்படி தயாராகி வருது? என்ற கேள்வி என் மனசுல வந்தது. விசாரிக்கப் போனா, அவ்வளவு சுலபமா பதில் கிடைக்கலை. ஏன்னா, ரொம்ப ரகசியமான விஷயமாச்சே. ஜேம்ஸ் பாண்ட் மாதிரி பல பேர் கிட்ட பேசி தகவலைத் திரட்ட வேண்டியதா ஆயிடுச்சு.  தெரிஞ்சுகிட்டதும் அசந்துட்டேன். வாங்க... அதை ஸ்டெப் பை ஸ்டெப்பா பார்க்கலாம்!

ப்ளூ பிரின்ட்!

கட்டடங்கள் கட்டும் முன் ப்ளூ பிரின்ட் தயாரிப்பார்களே... கேள்விப்பட்டு இருக்கீங்களா? கட்டடம் மட்டுமில்லே, எந்த ஒரு நிறுவனத்தின் திட்டமாக இருந்தாலும் முதலில் தயாராவது இந்த ப்ளூ பிரின்ட்தான். வினாத்தாள் விஷயத்திலும் அது உண்டு. எல்லாப் பாடப் பிரிவுகளிலும் புத்தகங்கள் அச்சாகும்போதே வினாத்தாள்களுக்கான இந்த 'ப்ளூ பிரின்ட்’ தயாராகிடும். உதாரணமா, பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்துக்குவோம். அந்தப் புத்தகம் தயாரானதும் ஒரு நிபுணர் குழு ஆய்வு செய்வாங்க. எந்த எந்தப் பாடங்கள் கடினமா இருக்கு? சுலபமா இருக்கு? எது மாணவர்களால் எந்த அளவுக்குப் புரிஞ்சுக்க முடியும்? இப்படி ஆய்வு செய்து முடிச்சதும் ப்ளூ பிரின்ட் தயாராகும். இந்தப் பாடத்தில் இத்தனை ஒரு வரிக் கேள்விகளைக் கேட்கலாம். பத்து மார்க் கேள்வி களை இந்தப் பாடத்தில் இருந்து கேட்கலாம். இப்படி பக்காவா ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொடுப்பாங்க. இதுதான் வினாத்தாள்களுக்கு எல்லாம் தாய். அந்தப் பாடப் புத்தகம் மாறுகிறவரை இந்த ப்ளூ பிரின்ட் மாறாது.

எக்ஸ்பர்ட் கமிட்டி!

எப்படி தயாராகுது வினாத்தாள் ?

இப்படி தயாரான ப்ளூபிரின்ட் தமிழ்நாடு அளவில் தேர்ந்து எடுக்கப்பட்ட ஐந்து முதல் எட்டு ஆசிரியர்களுக்கு அனுப்பப்படும்.  அவர்கள் பல ஆண்டுகள் பணியாற்றிய திறமை மிக்க ஆசிரியர்களாக இருப்பார்கள். அவர்கள் வினாத்தாள்களைத் தயாரிப்பார்கள். அப்படி தயாரான வினாத் தாள்கள் 'எக்ஸ்பர்ட் கமிட்டி’ என்று சொல்லப்படும் குழுவிடம் ஒப்படைக்கப்படும். இந்தக் குழு, வினாத்தாள்களை கணிப்பொறியில் பதிவு செய்து வைத்துவிடும். இந்தப் பணிகள் எல்லாம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கும். வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்கள் யார் என்பதும் கணிப்பொறியில் பதிவு செய்யும் எக்ஸ்பர்ட் குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்பதும் படு ரகசியமாக வைக்கப்படும். பிறகு, அந்த எக்ஸ்பர்ட் குழு, வினாத்தாள்களைச் சரிபார்த்து, அவற்றில் மூன்று விதமான வினாத்தாள்களை அச்சுக்கு அனுப்பும்.

அச்சாகும் முறை!

எந்த வினாத்தாளும் நமது மாநிலத்தில் அச்சாகாது. எந்த வருடம், எந்த வினாத்தாள் எங்கு அச்சிடச் செல்லும் என்பதும் மிக உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அச்சாகும் வினாத்தாள்களை கவர்களில் போட்டு பார்சல் கட்டுவதற்குக்கூட படிக்கத் தெரியாத அல்லது வேற்று மொழி மட்டுமே படிக்கத் தெரிந்த ஆட்களையே பயன்படுத்துவார்கள். பார்வை இல்லாதவர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்துவது உண்டாம்! இவ்வாறு மூன்று விதமான வினாத்தாள்கள் கி,ஙி,சி என்று பார்சல் செய்து, சீல் போடப்பட்டு, மீண்டும் இங்கே வரும். தாங்கள் அனுப்பிய மூன்று விதமான வினாத்தாள்களில் கி,ஙி,சி என்ற பெயர்களில் பார்சல் களாக வந்துள்ளவை எவை என்பது யாருக்குமே தெரியாது. அவை 'கொஸ்டின் பேப்பர் கஸ்டடியன்’ எனப்படும் மாவட்ட அளவிளான வினாத்தாள் பாதுகாவலர் குழுவிடம் ஒப்படைக்கப்படும். இவர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பான இடத்தில் இந்த வினாத்தாள் பார்சல்கள் இருக்கும்.

தேர்வு நாளில்...

எப்படி தயாராகுது வினாத்தாள் ?

அந்த மூன்றுவித பார்சல்களில் தேர்வுத்துறையால் முடிவு செய்யப்படும் ஒரு பார்சல், தேர்வு நடைபெறும் மையத்துக்கு உயர் அதிகாரியின் பொறுப்பில் காவல்துறை பாதுகாப்புடன் சென்றுவிடும். அங்கே, பூட்டப்பட்ட குறிப்பிட்ட அறையில் இருக்கும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் துறை அதிகாரியாக வேறு பள்ளியின் தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார். தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாக தேர்வுத் துறையில் இருந்து தகவல் வரும். அந்தத் துறை அதிகாரி மற்றும் கண்  காணிப்பாளர்கள் முன்னிலையில் கையப் பத்துடன் பார்சல் பிரிக்கப்படும். கண்காணிப்பாளர்களால் ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான வினாத்தாள்கள் வேகவேகமாக பிரிக்கப்படும். வகுப்பு வாரியாக வினாத்தாள்கள் செல்லும். அங்கே உள்ள சூப்பர்வைசர் அதனைப் பெற்றுக் கொள்வார். எத்தனை வினாத்தாள்களோ அவற்றைக் கொடுத்துவிட்டு, மிச்சம் இருந்தால் அதே கவரில் போட்டு ஒப்படைத்து விடுவார்.

முதலில் பார்ப்பது!

மாணவர்களின் கை களில் அந்த வினாத் தாள்கள் கொடுக்கப்படும். ஆக, வினாத்தாளை முதல் முதலில் பார்ப்பது தேர்வை எழுதும் மாணவர்தான். அதன் பிறகுதான் என்ன வினா வந்துள்ளது என்பது ஆசிரியர்களுக்கும், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிக்குமே தெரியும்.  

'அடேங்கப்பா!’ என்று வியக்க வைக்குது இல்லே. இத்தனை மெனக் கெடலும், ரகசியமும், பாதுகாப்பும் எதற்கு? வருடம் முழுக்க கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு, சரியான முறையில் தேர்வு நடைபெற வேண்டும் என்பதற்காகத் தான். ஏன் என்றால், இது சுட்டிகளான உங்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயம் இல்லையா? நமக்காக இவ்வளவு மெனக்கெடும் கல்வித்துறைக்கு தாராளமாக ஒரு 'ஓ’ போடுவோமா சுட்டீஸ்?!  

கடமையும் உயர்வும்!

 

''ஒவ்வொரு ஆண்டும் அரசு நடத்தும் இந்த பக்காவான முறையில் எந்த இடத்திலும் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. இதை எல்லாம் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், இருக்கவே இருக்கு இன்னும் இரண்டு வகை வினாத்தாள்கள். அதில் ஒன்றை தேர்ந் தெடுப்பார்கள். ஆனால், பெரும்பாலும் இந்த இரண்டாவது வினாத்தாளுக்கு வேலையே இருப்பது இல்லை. சில சமயங்களில் 'கொஸ்டின் பேப்பர் அவுட் ஆயிடுச்சு’ என்று சொல்வார்கள். அவை சந்தர்ப்பவாதிகள் பரப்பிவிடும் வதந்தியே! அதை எல்லாம் நம்பி பணம் கொடுத்து வினாத்தாள்களை வாங்கி ஏமாறாதீங்க. அது போலியா இருக்கும். அரசு, தன் கடமையை சரியாக செய்கிறது. நன்றாக படித்து நேர்மையாக தேர்வு எழுதுவது ஒவ்வொரு மாணவரின் கடமை. அந்த கடமையை சரியாக செய்தாலே போதும். நாட்டையும் உயர்த்தி தானும் உயரலாம்'' என்கிறார் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

  படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்தி