பிரீமியம் ஸ்டோரி
சுட்டி நியூஸ்

ஹலோ அணில்!

சுட்டி நியூஸ்

உருவத்தைவைத்து யாரையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது என்பார்கள். அதை நிரூபித்து இருக்கிறது அணில். சமீபத்திய ஆய்வில், வெகு தூரத்தில் இருக்கும் தனது இணை அணில்களுக்கு அதிக சக்திகொண்ட 'அல்ட்ரா சோனிக்’ ஒலி அலைகளை எழுப்பி, அபாயத்தை அறிவிப்பதைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

நண்பா... நண்பா!

சுட்டி நியூஸ்

 'புத்தகங்கள் நம்மை முன்னேற்றும் செல்வம்’ என்பதற்கு, மைக்கேல் ஃபாரடே ஓர் உதாரணம். தன் 14-வது வயதில் புத்தக விற்பனை மற்றும் பைண்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார் ஃபாரடே. விஞ்ஞானம் சம்பந்தமான புத்தகங்களை ஓய்வு நேரத்தில் எடுத்துப் படித்தார். விஞ்ஞானி, ஹம்ப்ரி டேவியின் விரிவுரைகளை நேரில் கேட்க ஆரம்பித்தார். ஒரு முறை டேவியின் விரிவுரையைக் குறிப்பு எடுத்து அவருக்கு அனுப்பினார். அதைப் படித்த டேவி, மைக்கேல் ஃபாரடேயைத் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

 பிங்க் ஏரி!

சுட்டி நியூஸ்

செனேகல் நாட்டில் ரெட்பா (ஸிமீtதீணீ) என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி, இளஞ்சிவப்பு நிறத்தில் அவ்வளவு அழகாகக் காணப்படும். இந்த ஏரியில் டூனாலியல்லா சாலினா (ஞிuஸீணீறீவீமீறீறீணீ sணீறீவீஸீணீ) எனும் பாசி அதிகமாக உள்ளதால், தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிகிறது. மேலும், இந்த ஏரியில் உப்புத் தன்மை அதிகமாக இருப்பதால், நாம் நீரின் மேல் மிதப்போம். இந்த ஏரியில் உப்பை எடுப்பதற்காகப் பலரும் பல மணி நேரம் நின்று வேலை பார்க்கிறார்கள். இது அவர்களின் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள். அழகானவை ஆபத்தையும் உள்ளடக்கி இருக்கும்போல!

 உருகாத சாக்லேட்!

சுட்டி நியூஸ்

சாக்லேட் என்றால் உருகும். தரம் குறைந்த சாக்லேட்டுகள் தவிர, மற்ற அனைத்து சாக்லேட்டுகளும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகி, சாப்பிடும்போது கைகள், வாய், சட்டை எனக் கரையை உண்டாக்கும். இந்தத் தொல்லைகளுக்கு விடைகொடுக்க 40 சென்டிகிரேட் வெப்பத்திலும் உருகாத, தரமான சாக்லேட்டை இங்கிலாந்தில் உருவாக்கி உள்ளனர். இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டின் குழந்தைகளுக்கு இனிமேல் கொண்டாட்டம்தான்.

 திகில் நண்டு !

சுட்டி நியூஸ்

ஜப்பானை ஒட்டிய பசிபிக் கடல் பகுதியில், 1,200 அடி ஆழத்தில் ராட்சச சிலந்தி நண்டுகள் உள்ளன. நான்கு அடி உயரம் வரை வளரும் இவை, 12 அடி அகலத்தில் கால்களைப் பரப்பிக்கொண்டு நடப்பது, பார்ப்பவர்களைப் பிரமிக்கவைக்கும். கடலுக்குள் ஆராய்ச்சி செய்யும் 'ரோவர்’ என்ற நீர்மூழ்கிக் கருவிகள் மூலம் இந்த நண்டுகளைப் பிடிக்கிறார்கள். இந்த ராட்சச சிலந்தி நண்டுகள், 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இது, கடல் விபத்தில் இறந்துபோன மனிதர்களையும் உணவாக உட்கொள்ளுமாம்.

 உங்கள் எதிரியை அழிப்பது எப்படி ?

சுட்டி நியூஸ்

ஒரு முறை அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரஹாம் லிங்கன், பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெண் நிருபர், ''உங்கள் எதிரிகள் உங்களை அழிக்க நினைக்கும்போது, நீங்கள் ஏன் அவர்களை நண்பர்களாக்க வேண்டும் என எண்ணுகிறீர் கள்?'' எனக் கேட்டார். அதற்கு லிங்கன், ''நான் அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும்போதே... 'எதிரி’ அழிந்துவிடுகிறானே'' என்று புன்னகையுடன் பதில் அளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு