Published:Updated:

இளம் விஞ்ஞானிகள் போட்டி ! - 2013

இளம் விஞ்ஞானிகள் போட்டி ! - 2013

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இளம் திறமையாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கும் வகையில், 'திறமையான இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் 2013 - தமிழ்நாடு’ (YOUNG SCIENTISTS TALENT HUNT 2013 - TAMILNADU)    போட்டிகளை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற கல்விசார் அமைப்பு நடத்துகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 முதல் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பள்ளியின் மூலமாகப் பங்கேற்கலாம்.

விண்வெளி அறிவியல் (SPACE SCIENCES), மருத்துவ அறிவியல் (MEDICAL SCIENCES), ரோபோட்டிக்/ மின்னியல் / மின்னணு அறிவியல் (ROBOTICS / ELECTRICALS / ELECTRONICS)மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (ENVIRONMENTAL SCIENCES)ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இந்த நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அது தொடர்புடைய செயல்திட்டங்களைப் போட்டியில் பங்கேற்கும் பள்ளியைச் சேர்ந்த ஒன்று முதல் நான்கு மாணவர்கள்கொண்ட குழு உருவாக்க வேண்டும். தங்கள் கற்பனைத் திறனுடன் செயல்திட்ட மாதிரிகளை உருவாக்கி, அதற்கு உரிய பவர் பாயின்ட் பிரசன்டேஷனைத் தயார்செய்ய வேண்டும்.

இளம் விஞ்ஞானிகள் போட்டி ! - 2013

மாணவர்கள் தங்கள் பள்ளியின் அறிவியல் ஆய்வுக் கூடத்தின் துணையுடன் செய்த செயல்திட்டத்தை மூன்று முதல் எட்டு நிமிடம் வரையிலான வீடியோவாகப் பதிவு செய்து, சிடி அல்லது டிவிடியை அனுப்ப வேண்டும்.

இந்தப் போட்டிக்குச் செயல்திட்டங்களை அனுப்ப விரும்பும் பள்ளிகள், சிடி அல்லது டிவிடியை ஜனவரி 15, 2013-க்குள் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’வுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு முன்பாக, போட்டியில் கலந்துகொள்வதற்குப் பதிவுக் கட்டணமாக ரூ.250-க்கான காசோலை அல்லது டிடி-யை அனுப்ப வேண்டும். வெற்றிபெறும் மாணவர்களுக்கு 'இளம் விஞ்ஞானி 2013’ விருது வழங்கப்படும்.

இளம் விஞ்ஞானி போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும், போட்டி தொடர்பாக மேலும் அறியவும் www.spacekidzindia.com என்ற வலைத்தளத்தை நாடலாம். 044 - 28200113 / 044 - 42064242, 9840113714, 9500002070, 9840265768 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டும் விவரங்களைக் கேட்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு