Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

நானே நான்தான் !

ரஷ்யாவில் ஒரு ரயில் பயணம். இரண்டு பேர் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதை ஒருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதர் சலிப்புடன், ''சே! என்ன விளையாடுகிறீர்கள்? செஸ் விளையாடுவது என்றால் விஸ்வநாதன் ஆனந்த் போல் விளையாட வேண்டும்'' என்றார்.

பிட்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒரு இளைஞர், அந்தப் பயணியின் பக்கம் திரும்பினார். புன்னகையுடன் குலுக்குவதற்காக கையை நீட்டி, ''வணக்கம்... நான்தான் அது!'' என்றார். அவர்தான் விஸ்வநாதன் ஆனந்த்.

பிட்ஸ்
##~##

 எனக்கு நானே முதலாளி !

 ஜப்பானைச் சேர்ந்த அந்த மனிதர், இரு சக்கர வாகனத்தின் மீது பெரிதும் பற்றுக் கொண்டவர். அவர் இரு சக்கர வாகனங்களில் பயன்படக்கூடிய ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். அதை, வாகனத் தொழிற்சாலை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் சென்று அதன் பயன்களை விளக்கினார். ஆனால், பலரும் இது சரிவராது என்று சொல்லி அவரை அலட்சியப்படுத்தி விட்டனர். அந்த முதல் முயற்சி தோற்றுப் போனது. ஆனால், அவர் சோர்ந்துவிடவில்லை. தன் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைத்தார். அவரே ஒரு இரண்டு சக்கர வாகனம் ஒன்றைத் தயாரித்தார். அதை ஜப்பானிலிருந்து ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்தார்.

பிட்ஸ்

1970-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அவரது கண்டுபிடிப்பு புகழ் பெற்றது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிறிய கார்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்தார். அதிலும் பெரிய வெற்றியைக் கண்டார். விரைவிலேயே சொந்தமாக ஒரு பெரிய நிறுவனத்தை ஆரம்பித் தார். அந்த நிறுவனம்தான் நம் அனைவருக்கும் தெரிந்த ஹீரோ ஹோண்டா. அதை நிறுவிய அந்த மனிதர், சாய்சிரோ கோண்டா. இன்று அவர் சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். முதல் தோல்வியைக் கண்டு பின்வாங்காமல் தொடர்ந்து உழைத்ததால் இன்று சரித்திரத்தில் இடம் பிடித்துள்ளார்!

பிட்ஸ்

 நானே நானா ?

ஒரு நாள் புகழ்பெற்ற மருத்துவரிடம் ஒருவர் வந்தார். ''டாக்டர், நான் அளவுக்கு அதிகமான கவலைகளால் அவதிப் படுகிறேன்.எனக்கு வைத்தியம் செய்யுங்கள்'' என்றார்.அவரைப் பரிசோதித்த அந்த மருத்துவர், ''உங்களுக்கு கேளிக்கை தேவைப்படுகிறது. கோமாளி வேடங்களில் நடிக்கும் சிரிப்பு நடிகர், ஜோசப் கிரிமால்டியைத் தெரியுமா?'' என்று கேட்டார். வந்தவர் ''தெரியும்'' என்றார். ''அவர் நாடகங்களைப் பாருங்கள். அவர் உங்களைச் சிரிக்கவைப்பார். உங்களுக்கு வேறு மருந்து தேவையில்லை'' என்றார் மருத்துவர்.

பிட்ஸ்

வந்தவர், ''உங்களுக்கு அவரைத் தெரியுமா?'' என்று கேட்டார். ''அவர் நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். நீங்களும் பாருங்கள்'' என்று மருத்துவர் மீண்டும் கூறினார். வந்தவர் அமைதியாக ''அடக் கடவுளே! நான்தான் கிரிமால்டி'' என்றார்.

பிட்ஸ்

 எனக்கு நானே நற்சான்று !

அந்தக் கல்லூரியிலேயே அந்த மாணவர்தான் முதல் மதிப்பெண் பெறுபவர். பலமுறை முதல்வரின் பாராட்டையும் பெற்றுள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார். இறுதித் தேர்வு எழுதுவதற்குள், அந்த நிறுவனத்தில் இருந்து வேலைக்கான உத்தரவு வந்துவிட்டது. கூடவே 'கல்லூரி முதல்வரிடம் நன்னடத்தைச் சான்றிதழை வாங்கி அனுப்பினால், தேர்வு முடிந்தவுடன் வேலையில் சேர்த்துக்கொள்கிறோம்'' என்ற கண்டிப்பும் இருந்தது.

பிட்ஸ்

அந்த மாணவர், வகுப்புக்கு வெளியே முதல்வர் நடந்து செல்வதைப் பார்த்து ஓடோடிச் சென்று, ''சார்... எனக்கு ஒரு நன்னடத்தைச் சான்றிதழ் தர வேண்டும்'' என வேண்டினார். முதல்வர் கோபத்துடன், ''நன்னடத்தைச் சான்றிதழைக் கேட்கும் முறையா இது? நான் தரமாட்டேன்'' என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

ஒரு வாரம் கழிந்த பின்னர், அந்த மாணவர், முதல்வர் அறைக்கு அழைக்கப்பட்டார். ''இதோ நன்னடத்தைச் சான்றிதழ்... எடுத்துக் கொள்ளுங்கள்!'' என்றார் முதல்வர்.

மாணவர் பதில் சொன்னார், '' நோ தேங்க்ஸ் சார்! எனக்கு உங்கள் சான்றிதழ் வேண்டாம். நான் 'என் நடத்தைக்கு நானே நற்சான்று அளிக்கிறேன்’ என்று அந்த நிறுவனத்துக்கு எழுதிவிட்டேன். இன்று அந்த நிறுவனத்தின் மேலாளர் வேலையில் சேர உத்தரவும் அனுப்பிவிட்டார்'' என்றார்.

இப்படி தன்னம்பிக்கை மிளிரும் வரிகளில் கடிதம் எழுதியவர் யார் தெரியுமா? நம் பாரத நாட்டின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தான் அவர்.

பிட்ஸ்

சுட்டி கெட்டி ஓவியர்கள் !

கலைகள் பல இருந்தாலும் அதில் சிற்பக்கலையும் ஓவியக் கலையும் அனைவரையும் கவரும் ஒன்று. ஆனால், இதன் ஈடுபாடு தற்போதைய மாணவர்களிடம் குறைந்து வருகிறது. இப்படி ஃபீல் பண்றவங்களுக்கு இந்தக் கண்காட்சி ஒரு திருப்தியையும், ஓவியக்கலை இங்கே புதிதாகப் பிறப்பெடுத்து இருப்பதையும் காண இயலும்.

பிட்ஸ்

கடந்த ஜனவரி 29 மற்றும் 30 தேதிகளில் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பார்வதி ஆர்ட் கேலரியில் குழந்தைகளுக்காக குழந்தைகளே அமைத்த ஒரு கண்காட்சி அது. இந்த கண்காட்சியில் மொத்தம் 75 மாஸ்டர் பீஸ்கள் வைக்கப்பட்டு இருந்தன. இவை அக்ரலிக், ஆயில், பென்சில் மற்றும் வாட்டர் கலரால் ஆனவை. இந்த மாஸ்டர் பீஸ்களை இரவு பகலாக உருவாக்கிய மாஸ்டர்கள் 18 பேர். இந்த 18 பேரும் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களே. ஆனால், இவர்களின் திறமை பெரியவர்களையும் வியந்து பாராட்ட வைக்கும். இவர்களில் ஜூனியர்கள் 10 பேர் சேர்ந்து 40 ஓவியங்களையும் சீனியர்கள் 18 பேர் சேர்ந்து 35 ஓவியங்களையும் வரைந்து உள்ளார்கள். இந்த ஓவியக் கலைஞர் களை கடந்த நான்கு வருடங்களாக பயிற்சி கொடுத்து உருவாக்கியது, பிரியா நடராஜன். இவர் கடந்த 15 வருடங்களாக சென்னையில் உள்ள ஆர். கே. நகரில்  ஸ்டுடியோ ஆர்ட் என்ற ஸ்கூலை நடத்தி வருகிறார்.  

இந்தக் கண்காட்சியின் தலைப்பு வைல்டர்னஸ் (Wilderness). அதாவது, தற்போதைய காலக்கட்டத்துக்கு மனிதனின் வளர்ச்சியால் அழிந்து வரும் இயற்கை அமைப்பு. இந்தக் கண்காட்சியில் உள்ள ஒவியங்களும் அதனையே பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியில் சிறந்த போர்ட்ரெய்ட் கலைஞரான கீதா அனந்த கிருஷ்ணன் மற்றும் ஏ.வி. இளங்கோவன் பங்கேற்று,  வளரும் கலைஞர்கள் உருவாக்கிய கண்காட்சி மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்தினர்.

-அ.முகமது சுலைமான்