பிரீமியம் ஸ்டோரி

யுவா

சிற்பம் என்றதும்  கற்சிற்பம், வெண்கலச் சிற்பம் நினைவுக்கு வரும். நவீனமாகப் பார்த்தால்... மணல் சிற்பம், கண்ணாடிச் சிற்பம் தெரியும். அட! இப்படியும் சிற்பங்கள் செய்யலாமா என்று வியக்கும் விதமாய் உலகில் செய்துட்டுதான் இருக்காங்க. ஒரு ரவுண்டு அடிச்சுப் பார்க்கலாம் வாங்க...

பலே சிற்பங்கள் !
##~##

சூயிங்கத்தை வெச்சு நாம என்ன செய்வோம்? ''உன்னைவிட நான் பெருசா முட்டை விடுவேன்'' என்று சாவல் விடுவோம். சில குறும்புக்காரங்க சூயிங்கத்தை மென்று, உட்காரும் நாற்காலியில் ஒட்டி, அடுத்தவங்களை இம்சை செய்வாங்க. ஆனா, மரிஜியோ சவினி ((Maurizio savin) சூயிங்கத்தில் சிற்பங்களைச் செய்கிறார். இத்தாலியின் ரோம் நகரில் பிறந்த இவர், கடந்த பத்து வருஷமாக விதவிதமா சூயிங்கச் சிற்பங்களைச் செய்து தள்ளிட்டு இருக்கார். பிங்க் நிற சூயிங்கம்தான் இவரோட ஃபேவரிட்! 90 சதவிகித சிற்பங்களைப் பிங்க் சூயிங்கத்தில்தான் செய்கிறார். பல், கண் மாதிரி வித்தியாசம் தேவைப்படும் இடங்களில் வெள்ளை சூயிங்கத்தைப் பயன்படுத்தறார். வாக் மேன் கேட்கும் மனிதன், சீறும் நாய், சுட்டிகள், காலணி என விதவிதமான சூயிங்கச் சிற்பங்களுடன் லண்டனில் பெரிய கேலரியே வைத்திருக்கார். சும்மா இல்லீங்க... ஒவ்வொரு சிற்பமும் 60,000 டாலர் வரை விற்குது. (பார்த்தவங்க மனசுல 'பச்சக்’னு ஒட்டிக்கறது கேரண்டி!)

பலே சிற்பங்கள் !

அடுத்து, வாங்க... லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கங்காரு மாதிரி ஒரு தாவு தாவுவோம்.

புருனோ டிராஃப்ஸ் (bruno torfs) புகழ்பெற்ற தோட்டக்கலைச் சிற்பி. தோட்டங்கள் சாதாரணமாகவே அழகா இருக்கும். அந்த அழகுக்கே அழகு சேர்க்கறவர்.  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே இருக்கும் விக்டோரியன் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் நுழைந்தால் இதைப் பார்க்கலாம். உலகின் சிறந்த தோட்டங்களில் இதுவும் ஒன்று. தோட்டத்தின் பசுமைகளுக்கு நடுவே, புருனோவின் சிற்பங்கள் நம்மை அசர வைக்குது. களிமண் தவிர, பட்டுப்போன... முறிந்த மரங்களைச் செதுக்கி சிற்பமாக்கி இருக்கார் புருனோ. சராசரி உருவச் சிற்பங்களும் உண்டு... ஹாரி பாட்டர், நார்நியா போன்ற மாயாஜாலப் படங்களில் வர்ற மாதிரி வித்தியாசமான உருவங்களும் இருக்கு.

சரி, அடுத்து?

புற்கள், இலைகள், பூக்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்களை உலகின் பல இடங்களில் பூங்காக்களில் காணலாம். நம்ம ஊரில்கூட யானை, சிங்கம் என்றெல்லாம் செய்வாங்க. அப்படி கனடாவின் மான்ட்ரியா வில் 2000- ஆம் ஆண்டில் பூக்கள் மற்றும் புற்களால் பிரமாண்டமான சிற்பங்களை உருவாக்கி, காட்சிக்கு வெச்சாங்க. 30 நாடுகள் பங்கேற்று, தங்கள் திறமைகளைக் காட்டி அசத்தியது. அப்போது முதல் இது ஒரு போட்டியாகவே ஆண்டுதோறும் நடைபெறுது. 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் இடம்பெற்ற சிற்பங்களில், சிலவற்றைத்தான் மேலே பார்க்கறீங்க.

பலே சிற்பங்கள் !
பலே சிற்பங்கள் !

இது தவிர, மெழுகுவத்தி, ஃபிலிம் ரோலில் எல்லாம் சிற்பம் செய்றவங்க இருக்காங்க. இதை எல்லாம் பார்க்கறப்ப, 'நாமும் வித்தியாசமா எதில் சிற்பம் செய்யலாம்?’ன்னு  நினைக்கறீங்கதானே? யோசிங்க சுட்டீஸ்...நாளை நீங்களும் வித்தியாசமான சிந்தனைச் சிற்பி’ன்னு பெயர் வாங்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு