Published:Updated:

சென்னையில் ஒரு போர்க்களம் !

த.ரூபேந்தர்

சென்னையில் ஒரு போர்க்களம் !

த.ரூபேந்தர்

Published:Updated:
##~##

ண்ணா பல்கலைக்கழக மைதானம் குருஷேத்திரப்   போர்க்களம் போல் காட்சி அளித்தது. வீரர்களும் வீராங்கனைகளும் வில்லேந்திக் கணைதொடுத்த போர்க்களம்.

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், டிசம்பர் 26 முதல் 31 வரை 33-வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய வில்வித்தைப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இளம் வீரர்களோடு, கடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தீபிகா குமாரி போன்ற பல முன்னணி வீராங்கனைகளும் கலந்துகொண்டார்கள். மேலும், கடந்த காமன்வெல்த் வில்வித்தைப் போட்டியில் வெள்ளி வென்ற ஸ்ரீதரின் வருகை, இந்தப் போட்டியின் சிறப்பம்சம்.

சென்னையில் ஒரு போர்க்களம் !

போட்டியில் பங்கேற்றவர்கள், ஆறு நாட்களும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்த முறையும் தீபிகா குமாரி சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றார். போட்டியின் உச்சகட்டமாக ஒரு மாநிலத்துக்கு எட்டு பேர் கொண்ட அணி சர்வதேச வீரர்களுடன் 'வார்ச்செரி’ என்ற பிரிவில் மோதியது. இதில் தமிழ்நாடு அணி, சர்வதேச வீரர்களை வென்று சாதனை புரிந்தது.

தமிழ்நாடு வில்வித்தைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷிஹான் ஹுசைனி. 1982-ல் இவர் தொடங்கிய 'தி ஆர்ச்செரி அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு’ மூலம் திறமையான வில்வித்தை வீரர்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.

''போட்டிகள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. ஒலிம்பிக்கில் பங்கேற்று சர்வதேச வீரர்களைச் சந்திக்க இந்த தேசியப் போட்டி சிறந்த பயிற்சிக் களமாக அமையும். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்து அதில் 64 ஆண்கள், 64 பெண்கள் எனத் தேர்வுசெய்து, அவர்களுக்கு சென்னையில் இரண்டு ஆண்டுகள் இலவசப் பயிற்சி அளிக்கிறேன். வில்வித்தை உடைமைகளையும் இலவசமாக அளித்து வருகிறேன். இப்போது, வில்வித்தை சங்கத்துக்கு முதல்வர் 50 லட்சம் ரூபாய் நிதி அளித்து இருக்கிறார். சர்வதேச அளவில் வளர்ந்த வீரர்களுக்கு மட்டும் செலவு செய்யாமல், இப்படி வளரும் வீரர்களுக்கும் ஊக்கம் அளித்தால், இன்னும் சில வருடங்களில் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் நம் கொடி உயரப் பறக்கும்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஹுசைனி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism