Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
##~##
இந்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோனேஷியாவில் மலாங் என்ற இடத்தில் அப்துல்லா ஷோலேஹ் என்ற இளைஞர் புலியுடன் வசிக்கிறார். பிறந்து மூன்று மாதம் ஆனபோது புலியின் உரிமையாளர் முகமதுவிடம் இருந்து புலிக்குட்டியைக் கொண்டுவந்து வீட்டில் வளர்க்க ஆரம்பித்தார். தற்போது அந்தப் புலிக்கு வயது நான்கு. இந்த நான்கு ஆண்டுகளில் அப்துல்லாவிடம் மிகவும் நெருக்கம் ஆகிவிட்டது. அப்துல்லா உடன் தினமும் ஒரே படுக்கையில் படுப்பது, திறந்த வெளியில் ஓடிப்பிடித்து விளையாடுவது என்று ஆச்சரியம் ஊட்டுகிறது. சுமார் 190 கிலோ எடை இருக்கும் இந்தப் புலி, அப்துல்லா முதுகில் உப்பு மூட்டைபோல் ஏறுவது பார்க்கவே கொள்ளை அழகு!
பென் டிரைவ் !

சீனாவும் ஜப்பானும் உலகிலேயே அதிவேக புல்லட் ரயில்களை உருவாக்கி சாதனைபடைத்து இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது, உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரயில் பாதையை அமைத்த நாடு என்ற பெருமையைச் சீனா தட்டிச்சென்று உள்ளது. சீனாவின் பெய்ஜிங் மற்றும் குவாங்ஸோ (Guangzhou) இடையே 2,298 கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதையை அமைத்து, சோதனை ஓட்டத்தையும் வெற்றிகரமாகச் செய்து உள்ளது. இந்தத் தூரத்தைக் கடக்க சாதாரண ரயிலில் பயணித்தால் 20 மணி நேரம் பிடிக்கும். அதுவே புல்லட் ரயிலில் 8 மணி நேரத்தில் சென்றுவிடலாம். இந்தப் பாதையில் புல்லட் ரயில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும்.  

பென் டிரைவ் !

 புதுச்சேரி எழுத்தாளர் தங்கப்பா, இரண்டாவது முறையாக சாகித்ய அகாடமி விருதைப் பெற்று இருக்கிறார். தேசிய அளவில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்வுசெய்து, ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரத்துடன் ஒவ்வோர் ஆண்டும் விருதுகளை வழங்குகிறது சாகித்ய அகாடமி. ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரான ம.இல.தங்கப்பா, சங்ககால அகநானூறு மற்றும் புறநானூறு நூல்களில் இருந்து சிறந்த பாடல்களைத் தேர்வுசெய்து ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து 'லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்!’ என்ற நூலை எழுதினார். பெங்குவின் வெளியிட்ட இந்த நூல், 2012 சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தங்கப்பா எழுதிய கவிதை நூலான 'சோளக்கொல்லை பொம்மை’ என்ற குழந்தை இலக்கிய நூலுக்கு 2011-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பென் டிரைவ் !

நாம் விரும்பிச் சாப்பிடும்  'பாஸ்தா’வைக்கொண்டு ரஷியாவைச் சேர்ந்த 43 வயது ஓவியக் கலைஞர் செர்ஹி பக்ஹோமோஃப் (Serghei Pakhomoff) என்பவர் விதவிதமான படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். கார், மோட்டார் சைக்கிள், விமானம், ஒரு நகரின் தோற்றம் எனத் தத்ரூபமாக உருவாக்கி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு பொருளையும் வடிவமைக்க சுமார் 30 மணி நேரத்தைச் செலவிடும் பக்ஹோமோஃப், ''வருமானத்தை ஈட்டுவது மட்டுமே நோக்கம் அல்ல. மனநிறைவுக்காகவும் இதைச் செய்கிறேன்.'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism