Published:Updated:

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

மை டியர் ஜீபா !

ஹாசிப்கான்

Published:Updated:
 ##~##

''ஹலோ ஜீபா... ஆச்சரியக் குறியை முதன்முதலில் யார் பயன்படுத்தினார்கள்?''

-எல்.ராஜேஸ்வரி, காவேரிப்பட்டினம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''லத்தீன் மொழியில், பெருமகிழ்ச்சி என்பதை வீஷீ என்று உச்சரிப்பார்கள். இதைத்தான் 15-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய நிறுவனங்கள் பாராட்டுக்குரிய விஷயங்களைத் தெரிவிக்க, தங்கள் கடிதங்களில் குறியீடாக மாற்றிக்கொண்டன. அதாவது, வீ-க்குக் கீழே ஷீ எழுத்தைப் பயன்படுத்தினார்கள். இதுவே பின்னாளில் வியப்பு, அதிர்ச்சி எனப் பல வார்த்தைகளிலும் இடம்பெற்றது. குறிப்பாக, படக் கதைகளில் பபுள் மற்றும் கட்டங்களில் வார்த்தைகளைப் போடும்போது அழகுக்காகச் சேர்த்தார்கள். அப்படி ஆரம்பித்து, இப்போது பத்திரிகைகளில் தவிர்க்க முடியாத விஷயமாக மாறி இருக்கிறது! ''            

மை டியர் ஜீபா !
மை டியர் ஜீபா !

''டியர் ஜீபா... ஸ்பைடர்மேன் சுவரில் ஏறுவது உண்மையா? அது கடவுள் கொடுத்த வரமா?''

-மு.மகேந்திரன், பவானி.

''கடவுள் கொடுக்கவில்லை மகேந்திரன், ஸ்பைடர்மேனை உருவாக்கியவர்களின் கற்பனைத்திறன்தான் அது. 1962-ல் மார்வல் காமிக்ஸ் என்ற நிறுவனத்துக்காக ஸ்டான் லீ (Stan lee) என்ற எழுத்தாளரும் ஸ்டீவ் டிட்கோ (Steve ditko) என்ற ஓவியரும் ஸ்பைடர்மேனை உருவாக்கினார்கள். கதைப்படி, பீட்டர் பார்க்கர் என்ற இளைஞனை ஒரு அதிசயச் சிலந்தி கடிப்பதால், சிலந்திக்கே உரிய சில குணங்கள் அவனுக்கும் வந்துவிடுகின்றன. அதில் ஒன்றுதான் சிலந்தியைப்போல் சுவரில் ஏறுவது. இது, முழுக்க முழுக்கக் கற்பனையே. இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களின் கதையைப் படித்து ரசிப்பதுடன் மறந்துவிடுங்கள். அந்த ஹீரோக்களைப் போல சாகசம் செய்யும் முயற்சிகள் கூடவே கூடாது.''    

''டியர் ஜீபா... உலகின் முதல் கடிகாரம், மணல் கடிகாரமா அல்லது சூரியக் கடிகாரமா?''

-ரா.ராஜகுரு, தூத்துக்குடி.

''நிச்சயமாக சூரியக் கடிகாரம்தான் ராஜகுரு. ஏனெனில், அதுதான் மனிதனுக்கு இயற்கையாகக் கிடைத்த முதல் விஷயம். பண்டைய எகிப்தியர்கள் சூரியனின் ஒளி மற்றும் நிழல் பூமியில் விழுவதைப் பின்பற்றி, தரையில் 24 கம்பங்களை வட்டப் பாதையில் நிறுத்தினார்கள். அதைக்கொண்டு நேரத்தைக் கணக்கிட்டார்கள். சூரியன் இல்லாத இரவு நேரத்தில் என்ன செய்வது என்ற கேள்வி வந்தது. கி.மு.300-ம் நூற்றாண்டில் சுமேரியர்கள் தண்ணீரைப் பயன்படுத்தி புதிய கடிகாரத்தை உருவாக்கினார்கள். அதுவே 24 மணி நேரக் கடிகாரம். அதை நீர்க் கடிகாரம் என்றும் சொல்லலாம். அதன்பிறகு உருவானதே மணல் கடிகாரம். அதாவது, சூரியக் கடிகாரம் தாத்தா என்றால், மணல் கடிகாரம் பேரன்.''

''ஹலோ ஜீபா... உலகில் எத்தனை வகையான மீன்கள் உள்ளன?''

மை டியர் ஜீபா !

-பி.அரவிந்த், ர.க.நித்திஷ்குமார், கோயம்புத்தூர்.

''இதற்கான சரியான பதில் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே இருக்கும். காரணம், உலகின் பெரும் பகுதி கடல் பரப்புதான். அந்தக் கடலில் ஆண்டுதோறும் சுமார் 300 வகையான புதிய மீன்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் காண்கிறார்கள். அப்படி இதுவரை 30,000 வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.''

''ஹலோ ஜீபா... கூகுள், யாகூ ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்கள் யார்?''

-க.கார்த்திகேயன், திருச்செங்கோடு.

''கூகுள் இணையதளம் 1998-ல் அமெரிக்காவைத் தலைமை இடமாகக்கொண்டு தொடங்கப்பட்டது. 2006-ல் கலிஃபோர்னியாவுக்குத் தனது தலைமையகத்தை மாற்றிக்கொண்டது. இதை நிறுவியவர்கள் லாரி பேஜ் (Larry page) மற்றும் செர்கி பிரின்(Sergey brin). கூகுளுக்கு முன்பே 1994-ல் உருவாக்கப்பட்டது யாஹூ. இதன் தலைமையகமும் கலிஃபோர்னியாதான். இதை நிறுவியவர்கள், டேவிட் ஃபிலோ(Dvid filo) மற்றும் ஜெர்ரி யாங் (Jerry yang) என்ற இருவர். உலகம் முழுவதும் உள்ள மக்கள், தகவல்களை அறிவதற்காக இந்த இரண்டு தளங்களையும் தினமும் பில்லியன் கணக்கான முறை பார்வையிடுகிறார்கள். இந்தத் தளங்கள் மூலம் தகவல்களை வேகமாகத் தெரிந்துகொள்வது நல்ல விஷயமே. அதே சமயம் இப்படி சுலபமாகத் தேடி எடுத்துக்கொள்வதால், இன்றைய இளைஞர்களின் சிந்திக்கும் திறனும் புதிய விஷயங்களைத் தேடும் முயற்சியும் குறைந்து வருவதாகப் பல அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். நாமும் அப்படி இருக்கவேண்டாம். ஒரு தகவலை அறிய நினைக்கும்போது, ஒரு நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைப் புரட்டுவோம். சரியா கார்த்தி?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism