Published:Updated:

சுட்டிகள் உடன் சதுரங்க நாயகன் !

நவீன் முருகேசன் க.ரமேஷ்

சுட்டிகள் உடன் சதுரங்க நாயகன் !

நவீன் முருகேசன் க.ரமேஷ்

Published:Updated:
##~##

''லக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் எங்களோடு செஸ் விளையாடினார்'' என்று சொல்லும்போதே, உற்சாகம் பொங்குகிறது அந்தச் சுட்டிகளிடம்.

செஸ் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக நடந்த இந்தப் போட்டி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்குபெற்ற 28 சுட்டிகள், தமிழ்நாடு முழுவதும் நடந்த போட்டிகளில் பல்வேறு நிலைகளில் வென்று வந்தவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுறுசுறுப்புடன் அரங்கத்துக்கு வந்த ஆனந்த், போட்டி ஆரம்பித்ததும் ஒவ்வொருவர் டேபிளுக்கும் போய் விளையாடியபோது, சுட்டிகள் முகங்களில் 1000 வாட்ஸ் வெளிச்சம். போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசுகளையும் ஆனந்த்  வழங்கினார்.

சுட்டிகள் உடன் சதுரங்க நாயகன் !

அப்போது பேசிய ஆனந்த், 'செஸ் விளையாட்டுக்கும் படிப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. செஸ் விளையாடுவதால் உடல் சோர்வு அடையாது. மனது ரிலாக்ஸ் ஆகும். நான் செஸ் விளையாட ஆரம்பித்தபோது எனக்கு வயது ஆறு. அப்போது என் அம்மாதான் எனக்கு குரு. பிறகு, செஸ் கிளப்பில்  சேர்த்துப் பயிற்சிகொடுத்தார்கள். சில வருடங்கள் கழித்து, 'ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்’க்குச் சென்றேன். பிற நாட்டு வீரர்கள் எல்லாம், சோவியத் யூனியனில் இருந்து வெளியாகும் செஸ் நுணுக்கங்களை விளக்கும் புத்தகங்களைப் படிப்பார்கள். அந்தப் புத்தகம் மெதுவாக ஐரோப்பா வரும். தாமதமாக அமெரிக்கா வரும். மிகத் தாமதமாக இந்தியா வரும். அதனால், அப்போது செஸ் பற்றி புதிதாக அறியும் வாய்ப்புக் குறைவு. ஆனால், இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால், வீட்டில் இருந்தே கணினியில் அறிந்துகொள்ள முடிகிறது'' என்றவர், வருங்கால சாம்பியன்களுக்கான டிப்ஸ்களையும் சொன்னார்.

''ஆரம்ப நிலையில் நாம் மற்றவரிடம் இருந்தும் கற்றுக்கொள்ளவேண்டும். பிறகு நமக்குத் தகுந்த சில நுணுக்கங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நம் போட்டியாளரின் மன ஓட்டங்களை அறியும் கலையைப் புரிந்துகொண்டால்  சாம்பியன் ஆகலாம்'' என்றார்.

அப்போதே, தாங்களும் சாம்பியன்கள் ஆகிவிட்ட தன்னம்பிக்கை சுட்டிகளின் முகங்களில் தெரிந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism